India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
முரண்பாடுகள் களையப்பட்ட புதிய சந்தை மதிப்பு வழிகாட்டி இன்று முதல் அமலுக்கு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. சந்தை மதிப்புக்கு ஏற்ப வழிகாட்டி மதிப்பை உயர்த்தவும், பதிவுக் கட்டணத்தை குறைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முத்திரை மற்றும் திருத்தம் செய்வதற்கான மதிப்பீட்டுக் குழு விதியின்படி சீரமைப்பு செய்யப்பட்டிருப்பதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் கூடிய நாடாளுமன்றத்தில் மக்களவை புதிய எம்பிக்கள் பதவியேற்றுக் கொண்டனர். பின்னர், சபாநாயகர் தேர்தல், குடியரசுத் தலைவர் உரை ஆகியவை நடத்தப்பட்டு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது. அப்போது, நீட் முறைகேடு தொடர்பான பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
இந்திய மகளிர் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 3ம் நாள் முடிவில் 2ஆம் இன்னிங்சில், 232/2 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா முதல் இன்னிங்சில் 603/6 ரன்கள் எடுத்த நிலையில், தெ.ஆ, 105 ரன்கள் பின்தங்கியுள்ளது. இன்று நான்காம் நாள் போட்டி நடைபெற உள்ள நிலையில், இந்திய அணிக்கே வெற்றிவாய்ப்பு அதிகம் உள்ளது. இன்றே 8 விக்கெட்டுகளை வீழ்த்தினால் இன்னிங்ஸ் வெற்றிபெற இந்தியாவுக்கு வாய்ப்புள்ளது.
வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ₹31 குறைந்துள்ளது. சென்னையில் இன்று முதல் வர்த்தக சிலிண்டரின் விலை ₹1,809 ஆக விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஜூன் 1ம் தேதி 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ₹1,840.50க்கு விற்பனையானது. கடந்த நான்கு மாதங்களில் சிலிண்டர் விலை ₹151 குறைந்துள்ளது. சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் முதல் தேதியில் மாற்றம் செய்து வருகின்றன.
* புதிய குற்றவியல் சட்டங்கள் இன்றுமுதல் அமலுக்கு வருகின்றன.
* நீட் தேர்வை ஆன்லைனில் நடத்த மத்திய அரசு பரிசீலனை
* பத்திரப்பதிவு துரையின் புதிய வழிகாட்டி மதிப்பு இன்றுமுதல் அமல்
* தடை செய்யப்பட்ட அமைப்புடன் தொடர்பில் இருந்த தஞ்சையை சேர்ந்த இருவர் உபா சட்டத்தில் கைது
* தமிழ்நாட்டில் வரும் கல்வி ஆண்டு முதல் அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளிலும் ஒரே நேரத்தில் தேர்வுகள் துவங்கி, முடிவுகளும் வெளியாகும்.
தமிழகத்திற்கு ஒரு நல்ல தலைவர் தேவை என விஜய் பேசிய நிலையில், ஒரு நல்ல தலைவர் தேவை இல்லை என அண்ணாமலை பதிலளித்துள்ளார். ஒரு தலைவரால் ஒன்றும் செய்துவிட முடியாது எனக் கூறிய அவர், அரசியலில் மாற்றத்தைக் கொண்டுவருவது என்பது ஒரு கூட்டு முயற்சி என்றார். தமிழகத்தில் அரசியல் மாற்றத்திற்கு ஆயிரக்கணக்கான தலைவர்கள் வேண்டும் என்பது தனது கருத்து எனக் கூறினார்.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்றுமுதல் ஜுலை 6 வரை ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இன்று (ஜூலை 1) நீலகிரி மற்றும் கோவையில் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் ஒரு சில இடங்களில் வெப்பநிலை இயல்பைவிட சற்று அதிகமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஆவின் பால் விற்பனை 25% அதிகரித்துள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார். கடந்த காலங்களில் பால் கொள்முதலில் தொய்வு இருந்ததாகக் கூறிய அவர், தற்போது ஒன்றியங்களில் மட்டும் நாளொன்றுக்கு 36லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுவதாகத் தெரிவித்தார். மேலும் சில ஆவின் கிளைகள் திறக்க உள்ளதற்கான தேவைகள் இருப்பதாகக் கூறிய அவர், பொதுமக்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்றார்.
கள் இறக்குமதி செய்யும் கோரிக்கையை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வேண்டுகோள் விடுத்துள்ளார். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 69 பேர் உயிரிழந்த விவகாரத்தை சுட்டிக்காட்டிய அவர், சாராயம், மதுபானத்தை விட கள் உடலுக்கு மிகவும் நல்லது என்றார். கொங்கு மண்டல விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையான கள் இறக்குவதை அரசு பரிசீலிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
▶ஜூலை – 01 | ▶ஆனி – 17 ▶கிழமை: திங்கள் | ▶திதி: ஏகாதசி ▶நல்ல நேரம்: காலை 06:15 – 07:15 வரை, மாலை 03:15- 04:15 வரை ▶கெளரி நேரம்: காலை 09:15 – 10:15 வரை, மாலை 07:30 – 08:30 வரை ▶ராகு காலம்: காலை 7:30 – 9:00 வரை ▶எமகண்டம்: காலை 10:30 – பிற்பகல் 12:00 வரை ▶குளிகை: மாலை 01:30 – 03:00 வரை ▶சந்திராஷ்டமம்: பூரம் ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்
Sorry, no posts matched your criteria.