India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எம்.பியுமான இரா.சம்பந்தன் (91) காலமானார். உடல் நலக்குறைவு காரணமாக கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்காக ஓயாது குரல் கொடுத்து வந்த இவர், இலங்கையில் மிகவும் அரசியல் அனுபவம் வாய்ந்த தமிழ்த் தலைவர்களில் முக்கியமானவர் ஆவார். 2001 முதல் எம்.பியாக பதவி வகித்து வந்தார்.
தமிழகத்தில் மதுவிலக்கு சாத்தியமில்லை என்றும் அதற்கு பதிலாக மதுக்கடைகளை தனியாரிடம் கொடுக்க வேண்டும் என்றும் பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவையில் பேசிய அவர், “தமிழகத்தில் 100% மதுவிலக்கு சாத்தியமில்லை. படிப்படியாக மதுக்கடைகளை குறைத்து கள்ளுக்கடைகளை திறக்க வேண்டும். டாஸ்மாக் என்ற போர்வையில் அரசே மது விற்பனை செய்வதை தடுக்க வேண்டும்” என்றார்.
சிம்கார்டு MNP முறைப்படுத்துதல் திருத்தங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. தொலைந்த, சேதமான சிம்கார்டுக்கு பதில் பெறப்படும் புதிய கார்டில் இருந்து 10 நாளுக்கு பிறகு யுபிசி எண் பெற்று வேறு நெட்வொர்க் மாறும் வசதி இருந்தது. இது தற்போது 7 நாள்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, 7 நாளுக்கு பிறகே யுபிசி எண் பெற்று நெட்வொர்க் மாற முடியும். இது சிம் ஸ்வாப் மோசடியை தடுக்க உதவும் என டிராய் கூறியுள்ளது.
* வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ₹31 குறைந்து ₹1,809ஆக விற்பனையாகிறது.
* முரண்பாடுகள் களையப்பட்ட புதிய நிலச் சந்தை மதிப்பு வழிகாட்டி இன்று முதல் அமலாகின்றன.
* மத்திய அரசின் 3 புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமலாகிறது.
* கிரெடிட் கார்டுகளில் ரிவார்ட் புள்ளிகள் பெறும் விதிகளை மாற்றியிருக்கிறது SBI
* கிரெடிட் கார்டு சேவைக் கட்டணங்களை உயர்த்தியது ICICI
நாடு முழுவதும் பாரதிய நியாய சன்கிதா, பாரதிய நகரிக் சுரக்சா சன்கிதா, பாரதிய சாக்ஸ்யா அதினியம் ஆகிய 3 புதிய கிரிமினல் சட்டங்கள் அமலுக்கு வந்துள்ளன. ஆங்கிலேயர் கால இந்திய தண்டனையியல் சட்டம் (IPC), குற்றவியல் நடைமுறை சட்டம் (CrPC), IEA சட்டம் காலாவதியாகி விட்டன. எனினும் நேற்றுவரையிலான வழக்குகள் IPC, CrPC, IEA சட்டங்களின் கீழ் விசாரிக்கப்படும். புதிய வழக்குகளே புதிய சட்டப்படி விசாரிக்கப்படும்.
பாலின சமத்துவத்தை நிலைநாட்ட ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் Pride monthஆக கொண்டாடப்படுகிறது. அதன் நிறைவு நாளான நேற்று, சென்னையில் ‘வானவில் பேரணி’ நடைபெற்றது. ஆண், பெண், மூன்றாம் பாலினத்தவர், ஓர்பால் ஈர்ப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் இந்தப் பேரணியில் பங்கேற்றனர். சென்னை எழும்பூரில் சுமார் 3 மணி நேரம் தாரை தப்பட்டைகள் முழங்க கொண்டாட்டத்துடன் இப்பேரணி நடைபெற்றது.
இந்த ஆண்டின் முதல் பாதி (6 மாதம்) முடிந்துள்ள நிலையில் தமிழ் சினிமாவில் 100 படங்கள் வெளியாகியுள்ளன. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, அயலான், கேப்டன் மில்லர், லால் சலாம், சைரன், ரத்னம் போன்ற பெரிய படங்கள் பெரிய வரவேற்பை பெறாத நிலையில், ப்ளூ ஸ்டார், மகாராஜா, கருடன் போன்ற படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றது. ‘அரண்மனை 4’ கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலை அள்ளியது. உங்களுக்கு பிடித்த படம் எது?
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ராமேஸ்வரம் தனுஷ்கோடியில் இருந்து மீன்பிடிக்கச் சென்றவர்களை நெடுந்தீவு அருகே 4 நாட்டுப் படகுகளுடன் இலங்கை கடற்படை சிறைப்பிடித்துள்ளது. தொடர்ந்து, கைது செய்யப்பட்டவர்களிடம் இலங்கை காங்கேசன்துறை முகாமில் வைத்து விசாரணை நடத்தப்படுகிறது. ஏற்கெனவே, அங்கு 20க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிறையில் உள்ளனர்.
தமிழகத்தில் காலை 10 மணி முதல் மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தென்காசி, நீலகிரி, கோவை, திண்டுக்கல், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (01.07.24) விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நீலகிரியின் மேற்கு பகுதிகளான கூடலூர், பந்தலூரில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து, இன்றும் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.