India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதிய குற்றவியல் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டதைக் கண்டித்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுரை மாவட்ட நீதிமன்ற வாயில் முன்பாக வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். அதே நேரம், இந்த புதிய சட்டத்திற்கு வரவேற்பு தெரிவித்து, பாஜக ஆதரவு வழக்கறிஞர்கள் பல்வேறு இடங்களில் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.
டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையை 2ஆவது முறையாக நேற்று முன்தினம் இந்திய அணி வென்றது. இதற்காக நாடு முழுவதும் இந்திய அணிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மக்களவையில் இன்று பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மக்களவை இன்று காலை கூடியதும், டி20 உலக கோப்பையை இந்திய அணி வெற்றி பெற்றதற்கு ரோஹித் ஷர்மா மற்றும் அணி வீரர்களுக்கு பாராட்டுதல் தெரிவிக்கப்பட்டது.
விக்ரம் – பா.ரஞ்சித் கூட்டணியில் உருவாகியிருக்கும் தங்கலான் திரைப்படம் ரசிகர்களை மிரட்டும் வகையில் அமைந்திருப்பதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது X தளத்தில் பதிவிட்டிருக்கும் அவர், ”பின்னணி இசை சேர்ப்பு பணிகளை இப்போதுதான் முடித்தேன். திரைப்படம் சிறப்பாக உள்ளது. இதில், என்னுடைய முழு உழைப்பையும் கொடுத்திருக்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவ விழா அக்டோபர் 4ஆம் தேதி தொடங்குகிறது. இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கி, வரும் 12ஆம் தேதியுடன் நிறைவு பெறும் என கூறப்பட்டுள்ளது. இந்த நாள்களில், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய்யின் கடைசி திரைப்படத்தை ஹெச்.வினோத் இயக்கவிருப்பதாகவும் அனிருத் இசையமைக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT என்ற தனது 68ஆவது படத்தில் நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து அரசியலில் ஈடுபட இருப்பதால் 69ஆவது படம்தான் கடைசி என்று அறிவித்திருக்கிறார். இதில், சமந்தா ஹீரோயினாக நடிக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
நீட் முறைகேடு பற்றி விவாதிக்க சபாநாயகர் அனுமதி அளிக்காததால், எதிர்க்கட்சிகள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். நீட் மோசடி குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சியினர் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவந்தனர். ஆனால், சபாநாயகர் அதனை ஏற்காமல் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை நடத்தினார். இதனை எதிர்த்து INDIA கூட்டணி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்துகிறது. MM.சுப்ரமணியம், குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கினை இன்று விசாரித்தது. அப்போது, தலைமை செயலர், டிஜிபி, சேலம் & கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்கள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், கல்வராயன் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசுக்கு வலியுறுத்தினர்.
மத்திய அரசு அறிமுகம் செய்த புதிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக, மாநில கல்விக் கொள்கையை உருவாக்க ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் முதல்வர் ஸ்டாலின் குழு அமைத்தார். இக்குழு பொதுமக்களிடம் கருத்துகளை பெற்று விரிவான அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்தது. அதில், 3, 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கூடாது என்றும், தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழி கொள்கையையே கடைபிடிக்க பரிந்துரைத்துள்ளது.
நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய 11 பேர் கொண்ட கனவு அணியை ஐசிசி அறிவித்துள்ளது. அதில் 6 இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ரோஹித் ஷர்மா, ரஹ்மனுல்லா குர்பாஸ், நிக்கோலஸ் பூரன், சூர்யகுமார் யாதவ், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஹர்திக் பாண்டியா, அக்ஷர் பட்டேல், ரஷீத் கான், ஜஸ்ப்ரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங், ஃபசல்ஹக் ஃபரூக்கி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்திற்கென தனிப்பட்ட முறையில் உருவாக்கப்பட்ட மாநில கல்விக்கொள்கை அறிக்கை முதல்வர் ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்டது. 2020இல் மத்திய அரசு அறிமுகம் செய்த புதிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக, மாநில கல்விக் கொள்கையை உருவாக்க 2022இல் ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழு பெற்றோர், பொதுமக்கள், சமூக ஆர்வலர்களின் ஆலோசனை பெற்று அறிக்கை தயாரித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.