India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 69 பேர் உயிரிழந்த விவகாரம் தமிழகத்தையே உலுக்கியது. இவ்வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட 11 பேர் இன்று குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 3 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில், கைதான 11 பேரையும் 3 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய சாக்ஷ்ய அதிநியம், பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா என்ற பெயர் கொண்ட 3 புதிய குற்றவியல் சட்டங்கள் தமிழகத்திலும் அமலுக்கு வந்துள்ளன. இது தொடர்பான புதிய FIR புத்தகங்களை தலைமை அலுவலகங்களில் பெற்றுக் கொள்ள காவல் நிலையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்று முதல் அனைத்து குற்றங்களையும் புதிய சட்டத்தின்கீழ் பதிவு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களான பால கிருஷ்ணா, பவன் கல்யாண், மகேஷ் பாபு, விஜய் தேவரக்கொண்டா ஆகியோர் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஸ்ரீலீலா. சமீபத்தில் குண்டூர் காரம் படத்தில் ‘குர்ச்சி மடதாபெட்டி’ என்ற பாடலுக்கு அவர் போட்ட நடனம் உலகம் முழுவதும் வைரலானது. இந்நிலையில் சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஸ்ரீலீலா, தமிழில் தனக்கு பிடித்த நடிகை நயன்தாரா என்று கூறியுள்ளார்.
டி20 உலகக் கோப்பை தொடரை இந்திய அணி வென்றிருக்கும் நிலையில், ஜிம்பாப்வேக்கு எதிரான தொடர் வரும் 6ஆம் தேதி தொடங்குகிறது. ஷுப்மன் கில் தலைமையில் அபிஷேக் ஷர்மா, துருவ் ஜுரேல், ரவி பிஷ்னோய், துஷார் தேஷ்பாண்டே, ரியான் பராக் என பல இளம் வீரர்கள் அணியில் அறிவிக்கப்பட்டுள்ளனர். அடுத்த உலகக் கோப்பையை எதிர்கொள்ள புதிய அணியை தேர்வு வேண்டிய தேவை இருப்பதால் இத்தொடர் இந்தியாவின் புதிய அத்தியாயமாக இருக்கும்.
தமிழக மருத்துவத்துறை செயலாளராக இருந்த ககன்தீப்சிங் பேடியை ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் தலைமை செயலாளராக தமிழக அரசு பணியிட மாற்றம் செய்துள்ளது. வனத்துறை கூடுதல் தலைமை செயலாளராக இருந்த சுப்ரியா சாஹூ மருத்துவத்துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். நீர்வளத்துறை செயலாளராக மணிவாசகம், சுற்றுச்சூழல் துறை செயலாளராக செந்தில்குமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை ED கைது செய்து சிறையில் அடைத்த நிலையில், அதே வழக்கில் கடந்த மாதம் CBI-யும் அவரை கைது செய்தது. மேலும் ஜூலை 12ஆம் தேதி வரை அவரை நீதிமன்ற காவலில் வைக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், CBI கைது மற்றும் சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனுதாக்கல் செய்துள்ளார்.
காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2 முதல் மாநிலம் முழுவதும் நடைபயணம் மேற்கொள்ளவுள்ளதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது. மதவாத அரசியலை தடுக்கவும், அன்பை வளர்க்கவும் நடைபயணம் மேற்கொள்ளவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு முன் ராகுல் காந்தி மேற்கொண்ட நடைபயணம் வெற்றியடைந்ததால் தமிழகத்திலும் அதே முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
இந்திய அணி பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்படலாம் எனக் கூறப்படும் நிலையில், 2025 சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் ரோஹித் ஷர்மா, கோலி உள்ளிட்ட மூத்த வீரர்கள் சரியாக விளையாடவில்லையெனில் அணியிலிருந்து நீக்க வேண்டுமென நிபந்தனை விதித்திருப்பதாக செய்திகள் வெளியாகின. அப்படியொரு சூழல் ஏற்பட்டால், அவமானம் என அஞ்சியே டி20இல் இருந்து ரோஹித் ஓய்வு பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாளை நடைபெற உள்ள அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை உயர் கல்வித்துறை அமைச்சர் புறக்கணிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விழாவில் ஆளுநர் ரவி கலந்து கொள்வதால், அவர் புறக்கணிப்பதாகக் கூறப்படுகிறது. ஆளுநரே பல்கலைக்கழங்களில் வேந்தராக உள்ளதால் துணை வேந்தர் நியமனம் தொடர்பாக அவரே முடிவு எடுக்கிறார். இதனால், ஆளுநர் பங்கேற்கும் பட்டமளிப்பு நிகழ்வுகளை அமைச்சர் பொன்முடி புறக்கணித்து வருகிறார்.
மலையாள நடிகர் சங்கத் தலைவராக மூத்த நடிகர் மோகன்லால் 3ஆவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். நேற்று நடைபெற்ற மலையாள நடிகர் சங்க வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில், அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதேபோல், பொதுச் செயலாளராக நடிகர் சித்திக், பொருளாளராக நடிகர் உன்னி முகுந்தன், துணைத் தலைவர்களாக நடிகர்கள் ஜெகதீஷ், ஜெயன் சேர்த்தலா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
Sorry, no posts matched your criteria.