India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாட்டையே உலுக்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்யுமாறு, உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தேசிய மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் தொடர்ந்த வழக்கில், துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டது யார்?, இதற்கு யார் பொறுப்பேற்பார்கள்? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அரசமைப்புச் சட்டத்தின் 348வது பிரிவு, சட்டங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் எனக் கூறுகிறது. ஆனால், 3 புதிய குற்றவியல் சட்டங்களுக்கும் இந்தியில் பெயர் சூட்டப்பட்டுள்ளன. இதற்கு கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. மேலும், இது குறித்து மாநில அரசுகளுடன் ஆலோசிக்கவில்லை என்கிறார்கள்.
மத்திய அரசு பாசிச கொள்கையை பின்பற்றுவதாக திமுக எம்.பி ஆ.ராசா விமர்சித்துள்ளார். மக்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவித்து பேசிய அவர், பட்டியலின மக்கள் மற்றும் சிறுபான்மையினரை பாஜக நசுக்கப் பார்ப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். அவசர நிலையை தற்போதைய பாஜக அரசின் செயல்பாடுகளுடன் ஒப்பிட முடியாது எனவும், பாஜக அரசின் செயல்பாடுகள் அனைத்தும் சர்வாதிகாரம் என்றும் கடுமையாக சாடியுள்ளார்.
சமூக ஆர்வலர் மேதா பட்கருக்கு அவதூறு வழக்கில் 5 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லி துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா தொடர்ந்த வழக்கில் டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், சக்சேனாவிற்கு ₹10 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. உண்மையை யாராலும் தோற்கடிக்க முடியாது என கூறியுள்ள பட்கர், யாரையும் அவதூறு செய்ய தாங்கள் முயற்சிக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.
சர்வதேச மாணவர்களுக்கான விசா கட்டணத்தை ஆஸ்திரேலிய அரசு 2 மடங்காக உயர்த்தியது இன்று முதல் அமலுக்கு வந்தது. ₹40,000 ஆக இருந்த கட்டணம் தற்போது ₹89,118 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தற்காலிக பட்டதாரி விசா, பார்வையாளர் விசா வைத்திருப்பவர்கள் மாணவர் விசாவுக்கு விண்ணப்பிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் இடம்பெயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அபார வெற்றிபெற்றுள்ளது. முதல் இன்னிங்சில் இந்தியா 603 ரன்கள் குவித்தது. இதன்பின் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா முதல் மற்றும் 2வது இன்னிங்சில் 266& 373 ரன்கள் எடுத்தது. 37 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்தியா, எளிதில் இலக்கை எட்டி, 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
ரிசர்வ் வங்கி 97.87% ₹2,000 நோட்டுகளை திரும்ப பெற்றுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு மே 19ஆம் தேதி ₹2,000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. அப்போது, மொத்தமாக ₹3.56 லட்சம் கோடி மதிப்பிலான ₹2,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்த நிலையில், தற்போது ₹7,581 கோடி மதிப்பிலான நோட்டுகள் மட்டும் மக்களிடம் இருப்பதாக தெரிவித்துள்ளது.
நடிகர் விஜய் தற்போது ‘தி கோட்’ படத்தில் நடித்து வருகிறார். இவரது அடுத்த படத்தை எச்.வினோத் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கத்தி, தெறி மற்றும் மெர்சல் என இதற்கு முன் 3 படங்களில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். இந்த கூட்டணி தற்போது மீண்டும் இணையுமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
திராவிட மாடல் ஆட்சியில் கிக் தான் முக்கியம் என நினைக்கிறார்கள் என வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். சட்டப்பேரவையில் எதிர்கட்சிகள் பேச முற்படும் போது முழுமையாக பேச விடுவதில்லை என்று குற்றம் சாட்டிய அவர், சட்டமன்றத்தில் பாஜகவினர் பேசிய வீடியோக்களை கேட்டால் வெட்டியும், ஒட்டியும் கொடுப்பதாக விமர்சித்துள்ளார். ஜனநாயகம் இல்லாத இடமாக பேரவை உள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தியன் வங்கி, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் தமிழ்நாட்டில் காலியாக உள்ள 665 எழுத்தர் (Clerk) பணிக்கு இன்று முதல் வரும் 21ஆம் தேதி வரை www.ipbs.in-இல் விண்ணப்பிக்கலாம். முதல்நிலை தேர்வு அடுத்த மாதமும், மெயின் தேர்வு அக்டோபர் மாதமும் நடைபெறும். எஸ்சி, எஸ்டி உள்ளிட்டவர்களுக்கு ரூ.175, மற்றவர்களுக்கு ரூ.850 தேர்வு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.