news

News July 1, 2024

திமுக அரசு பதவி விலக வேண்டும்: ராமதாஸ்

image

தமிழகத்தில் சமூக நீதியைக் காக்க சாதிவாரி கணக்கெடுப்பு தேவை என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசை பாமக வலியுறுத்த வேண்டுமானால், திமுகவுக்கு ஆட்சி எதற்கு? என்று கேள்வி எழுப்பிய அவர், வன்னியர்களுக்கு திமுக தொடர்ந்து துரோகம் இழைப்பதாக விமர்சித்துள்ளார். தமிழக அரசு இதில் நல்ல முடிவு எடுக்கவில்லை என்றால், பாமக போராட்டம் நடத்தும் என எச்சரித்துள்ளார்.

News July 1, 2024

மத்திய அரசு வேலை: 17,727 காலியிடங்கள்

image

மத்திய அரசுத்துறைகளில் 17,727 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இரண்டு நிலை தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பதாரர்கள் 18-30 வயதிற்குள் இருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், ஜூலை 24ஆம் தேதிக்குள் https://ssc.gov.in/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

News July 1, 2024

ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்: அண்ணாமலை

image

இந்துக்களை வன்முறையாளர்கள் என்று கூறியதற்காக ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இழிவான கருத்துகளால் பெரும்பான்மையான மக்களை காங்கிரஸ் இழிவுப்படுத்துவதாக சாடிய அவர், சிறுபான்மை மக்களை திருப்திப்படுத்தும் வழிகளை, INDIA கூட்டணியினர் தொடர்ந்து செய்து வருவதாகவும் விமர்சித்துள்ளார். முன்னதாக, பாஜகவினரை உண்மையான இந்துக்கள் இல்லை என ராகுல் கூறியிருந்தார்.

News July 1, 2024

ஜிம்பாப்வே அணி அறிவிப்பு

image

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான ஜிம்பாப்வே அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கந்தர் ராஸா தலைமையிலான அந்த அணியில், அக்ரம் ஃபராஸ், பென்னட் பிரையன், காம்ப்பெல் ஜோனாதன், சதாரா டெண்டாய், ஜாங்வே லூக், கையா இன்னசென்ட், மடாண்டே கிளைவ் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்தத் தொடர் ஜூலை 6ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

News July 1, 2024

செவ்வாய் கிரகத்தில் வாழ தகுதியான தாவரம்

image

செவ்வாய் கிரகத்தின் கடுமையான காலநிலையில் வாழவும், வளரவும் கூடிய தாவரத்தை சீன விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளது. Syntrichia caninervis என்று பெயரிடப்பட்ட இந்த பூஞ்சை தாவரம், கடும் குளிர், கதிர்வீச்சு மற்றும் வறட்சியை சமாளிக்கும் திறன் கொண்டது எனக் கூறப்படுகிறது. அண்டார்டிகா பாலைவனத்தில் காணப்படும் இந்த பாசி, செவ்வாய் கோளில் உயிர்களை நிலைநிறுத்துவதற்கு முக்கிய பங்கு வகிக்கும் என நம்பப்படுகிறது.

News July 1, 2024

மோடிக்கு முதுகெலும்பு இல்லை: ஆ.ராசா

image

பிரதமர் மோடிக்கு மக்களவைத் தேர்தலில் தமிழக மக்கள் சரியான பாடம் புகட்டிவிட்டதாக திமுக எம்.பி ஆ.ராசா மக்களவையில் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பை அழிக்க வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசு செயல்படுவதாக குற்றம் சாட்டிய அவர், எதிர்க்கட்சிகளின் எந்த குற்றச்சாட்டுக்கும் பதிலளிக்க மோடிக்கு முதுகெலும்பு இல்லை என்றார். அரசியலமைப்பை மாற்ற நினைத்த மோடி, தற்போது அதை வணங்குவதாகவும் விமர்சித்துள்ளார்.

News July 1, 2024

ஒரு பைசாக்கூட சம்பளம் வேண்டாம்: பவன் கல்யாண்

image

பித்தாபுரம் தொகுதிக்கு சென்ற ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, தன்னை தேர்ந்தெடுத்ததற்கு நன்றி தெரிவித்துள்ளார். அப்போது, மக்கள் மத்தியில் பேசிய அவர், மாநில அரசு கடும் நிதிப்பற்றாக்குறையை சந்தித்து வருவதால், தனக்கு சம்பளம் தேவையில்லை என்று கூறியுள்ளார். மேலும், நிதி இல்லாத நிலையிலும் முன்னாள் முதல்வர் ருஷிகொண்டாவில் அரண்மனை கட்டியதாக குற்றம் சாட்டியுள்ளார்.

News July 1, 2024

பரிசு அறிவித்தது போக்குவரத்துத்துறை

image

TNSTC ஆன்லைன் முன்பதிவு மூலம் வார இறுதி நாள்கள் மற்றும் பண்டிகை நாள்களை தவிர்த்து, பயணிப்பவர்களில் கணினி குலுக்கல் மூலம் முதல் 13 பேர் தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. முதல் 3 பயணிகளுக்கு ₹10,000, மீதமுள்ள 10 பயணிகளுக்கு தலா ₹2,000 வழங்கப்படும். ஜூன் மாதம் (கடந்த மாதம்) முதல் 13 நபர்களை தேர்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

News July 1, 2024

ரோஹித் மனைவி உருக்கமான பதிவு

image

டி20 போட்டிகளில் ரோஹித் ஷர்மா ஓய்வை அறிவித்த நிலையில், அவரது மனைவி ரித்திகா இன்ஸ்டாகிராமில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். ரோஹித், நீங்கள் உங்கள் கனவை அடைவதை பார்ப்பது உணர்வுப்பூர்வமாகவும், உத்வேகமாகவும் இருக்கிறது என்றும், கடந்த சில மாதங்கள் உங்களுக்கு எவ்வளவு கடினமாக இருந்தன என்பதை அறிவேன் என்றும் கூறியுள்ளார். மேலும், நீங்கள் எனக்கானவர் என்பதை பெருமையுடன் சொல்வேன் எனவும் பதிவிட்டுள்ளார்.

News July 1, 2024

ராகுலின் பேச்சை பாஜக திசை திருப்புகிறது: பிரியங்கா

image

ராகுலின் பேச்சை பாஜகவினர் திசை திருப்புவதாக பிரியங்கா காந்தி குறை கூறியுள்ளார். ராகுல் இந்துக்களை அவமதிக்கும் விதமாக எதையும் பேசவில்லை எனவும், மோடி மற்றும் பாஜகவினர் மட்டுமே இந்துக்கள் இல்லை என்பதை, ராகுல் மிக தெளிவாக மக்களவையில் எதிரொலித்ததாகவும் தெரிவித்துள்ளார். முன்னதாக, ராகுல் இந்துக்களை அவமானப்படுத்தி விட்டதாக, மக்களவையில்
பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.

error: Content is protected !!