India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புது வருடம் இப்போது தான் தொடங்கியது போல இருக்கிறது. ஆனால், அதற்குள் ஆறு மாதம் முடிந்து ஏழாவது மாதம் தொடங்கிவிட்டது. புத்தாண்டு தொடங்கிய போது 2024இல் இதெல்லாம் செய்யலாம் என திட்டமிட்டிருப்பீர்கள். இதுவரை எந்த அளவுக்கு உங்கள் திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறீர்கள்?. இதுவரை செயல்படுத்தவில்லை என்றால் தயங்காமல் உங்கள் திட்டங்களை இப்போதிருந்தே தொடங்குங்கள்.
‘டாடா’, ‘ஸ்டார்’ படங்களின் வெற்றியைத் தொடர்ந்து கவின் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘ப்ளடி பெக்கர்’. நெல்சன் தயாரிக்கும் இப்படத்தை அவரது உதவி இயக்குநர் சிவபாலன் என்பவர் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று, போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், ஆகஸ்ட் 2ஆம் தேதி இப்படம் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.
இன்று (ஜூலை 2) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
* தென்னாப்பிரிக்கா மகளிர் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி
* இந்துக்கள் என தன்னை கூறிக் கொள்பவர்கள் வன்முறை, வெறுப்பு குறித்து மட்டுமே பேசுகின்றனர் – ராகுல் காந்தி
* தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை தடுக்க டெட்ரா பாக்கெட்டுகளில் 90 மி.லி மதுவை விற்க தமிழக அரசு திட்டம்.
* இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான ஜிம்பாப்வே அணி அறிவிப்பு
வயிற்று வலி, குமட்டல் மற்றும் அஜீரணம் போன்ற செரிமான பிரச்சினைகளை சரிசெய்ய சோம்பு உதவுகிறது. இருமல், தொண்டை புண், சளி மற்றும் ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்னைகளை குணமாக்கவும் பயன்படுகிறது. இதில், வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய்களுக்கு எதிராக உடலைப் பாதுகாக்கிறது. கர்ப்பிணிப் பெண்கள் சோம்பு உட்கொள்வதற்கு முன் மருத்துவரை அணுக வேண்டும்.
வினோத்ராஜ் இயக்கத்தில், சூரி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கொட்டுக்காளி’. சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள இப்படத்தின் டீசர் மட்டும் வெளியாகியுள்ள நிலையில், ரிலீஸ் அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ஆனால், சர்வதேச திரைப்பட விழாக்களில் அங்கீகாரத்தை குவித்து வருகிறது. அந்த வரிசையில், 53ஆவது டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு ஜூரி விருதை இப்படம் வென்று அசத்தியுள்ளது.
பேறுகாலத்தில் பெண்களுக்கு ஏற்படும் உடல்நல பிரச்னைகளில் உயர் ரத்த அழுத்தமும் ஒன்று. கர்ப்பிணி, வளரும் கருவுக்கு தீங்கு விளைவிக்கும் உயர் ரத்த அழுத்த அபாயத்தை குறைப்பதில், கால்சியம் & ஜிங்க் முக்கிய பங்கு வகிப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். பருப்பு வகைகள், காளான், சிவப்பு இறைச்சி, பால், அத்தி, பீன்ஸ், முந்திரி, பாதாம், பசலைக்கீரை, பூசணி விதை ஆகியவற்றை உட்கொள்வதன் மூலம் இதை கட்டுப்படுத்தலாம்.
எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் உரையை பிரதமர், உள்துறை அமைச்சர், ராணுவ அமைச்சர் உள்பட எட்டு பேர் 13 முறை குறுக்கீடு செய்ததாக மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். எத்தனை முறை குறுக்கிட்டாலும் ராகுலின் பேச்சில் வீரியம் குறையவில்லை என்ற அவர், நேற்று போல் INDIA வென்ற இன்னொரு இறுதிச்சுற்று இன்று எனத் தெரிவித்துள்ளார். மக்களவையில் பேசிய ராகுல், பாஜக அரசை கடுமையாக விமர்சித்தார்.
* மேஷம் – வெற்றி கிடைக்கும், *ரிஷபம் – பகை உண்டாகும் *மிதுனம் – மற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள், *கடகம் – சிரத்தை உருவாகும் *சிம்மம் – கவனமாக இருங்கள், *கன்னி – தெளிவுடன் செயல்படுங்கள், *துலாம் – எதிர்பார்ப்பு நிறைவேறும், *விருச்சிகம் – அமைதி உண்டாகும், *தனுசு – அன்பு கிடைக்கும், *மகரம் – மறதி ஏற்படும், *கும்பம் – பொறுமையுடன் செயல்படுங்கள், *மீனம் – நன்மை உண்டாகும்.
பெரும்பாலான வீடுகளில் முதலீடு சார்ந்த முடிவுகளை ஆண்கள்தான் எடுத்து வருகின்றனர். இந்நிலையில், ஆக்சிஸ் மியூச்சுவல் ஃபண்ட் நடத்திய ஆய்வில், இந்த போக்கு மாறி வருவதாக தெரியவந்துள்ளது. ஒரு கோடி பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 72% பெண்கள் முதலீடு முடிவுகளை சுயமாக எடுப்பதாகவும், நீண்ட கால முதலீட்டை நோக்கி நகர்வதாகவும் கூறப்படுகிறது. 37% பணத்தை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.