India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
* 1940 – இந்திய விடுதலைப் போராட்ட வீரர் சுபாஸ் சந்திர போஸ் கல்கத்தாவில் கைது செய்யப்பட்டார்.
* 1962 – முதலாவது வால் மார்ட் அங்காடி ஆர்கன்சஸ் மாநிலத்தில் திறக்கப்பட்டது.
* 1958 – விண்வெளி ஆய்வாளர் மயில்சாமி அண்ணாதுரை பிறந்தநாள்.
* 2004 – தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பில் பாகிஸ்தான் இணைந்தது.
* 2016 – பாக்தாத்தில் இடம்பெற்ற தற்கொலைப் படைத் தாக்குதலில் 341 பேர் உயிரிழந்தனர்.
மறைந்த நடிகர் விஜயகாந்த், விஜய் நடித்துவரும் ‘GOAT’ படத்தில் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் நடிக்கவைக்கப்பட்டுள்ளார். இதுதவிர விஜயகாந்த், மேலும் இரண்டு படங்களிலும் ஏஐ தொழில் நுட்பத்தின் மூலம் திரைக்கு வர உள்ளார். அவரது மகன் சண்முகப் பாண்டியன் நடித்துவரும் ‘படைத்தலைவன்’, மற்றும் விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’ ஆகிய படங்களிலும் விஜயகாந்த் ஏஐ மூலம் மீண்டும் வருகிறார்.
ஸ்பெயினில் நடைபெற்ற லியோன் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். நேற்று நடைபெற்ற இறுதி சுற்றுப் போட்டியில் அவர், உள்ளூர் போட்டியாளர் ஜேமி சான்டோஸ் லடசாவை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றிபெற்றார். ஐந்து முறை உலக சாம்பியனான ஆனந்த் தனது முதல் சாம்பியன் பட்டத்தை 1996ல் இந்த போட்டியில் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரத்தில் இருந்து டெல்லி செல்வதற்காக விமானம் ஏறிய இந்திய வம்சாவளிப் பெண், விமானம் கிளம்பும் முன்பாக மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். ஆஸ்திரேலியாவில் சமையல் படிப்புக்காக சென்ற மன்ப்ரீத் கவுர் (24) என்ற பெண், 4 ஆண்டுகள் படித்து முடித்தபின் இந்தியா திரும்பிய போது உயிரிழந்துள்ளார். காசநோயின் காரணமாக அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: ஊழியல் ▶அதிகாரம்: ஊழ் ▶குறள் எண்: 371 ▶குறள்: ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள் போகூழால் தோன்றும் மடி. ▶பொருள்: ஆக்கத்திற்கான இயற்கை நிலை சோர்வு தலை காட்டாத ஊக்கத்தைக் கொடுக்கும். ஊக்கத்தின் அழிவுக்கான இயற்கைநிலை சோம்பலை ஏற்படுத்தும்.
சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், ‘கங்குவா’ படம் பார்த்து மெய்சிலிர்த்ததாகவும், இப்படம் இந்திய சினிமாவின் பெருமை மிகு பிரம்மாண்டம் என்றும் பாடலாசிரியர் விவேக் புகழ்ந்துள்ளார். மேலும், சூர்யாவின் நடிப்பு பிரமாண்டமாக இருப்பதாகக் கூறிய அவர், இப்படத்தின் மூலம் சிவா நம்மை வேறு உலகிற்கு அழைத்துச் செல்வார் என X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மக்களவையின் முதல் நாளில், மோசமான நிகழ்ச்சி அரங்கேறியதாக பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். “பொய் + இந்து வெறுப்பு = மக்களவையில் ராகுல் காந்தி” என X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், மக்களவைத் தேர்தல் தீர்ப்பை ராகுல் காந்தி புரிந்துகொள்ளவில்லை, அல்லது அவரிடம் பணிவு இல்லை என்பதை மக்களவையில் இன்றைய அவரது பேச்சு காட்டுகிறது என விமர்சித்துள்ளார்.
இந்தியா வென்ற உலகக் கோப்பையை கையில் வைத்திருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்த ஜெய்ஸ்வால், கோப்பையை வென்ற மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என பதிவிட்டிருந்தார். அதற்கு, ‘அதை விவரிக்க வேண்டாம், உறங்கச் செல்லுங்கள்’ என சூர்யகுமார் கிண்டலாக பதிவிட்டிருந்தார். ஜெய்ஸ்வாலுக்கு விளையாடத்தான் வாய்ப்பு வழங்கவில்லை, பேசக்கூட வாய்ப்பு தரக்கூடாது என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
இன்று (ஜூலை 2) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரயில்களுக்கான அட்டவணை ஆண்டுதோறும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும். அதில் புதிய ரயில்கள் பற்றிய அறிவிப்பு, ரயில்கள் இயக்கப்படும் நேரம், புதிய நிறுத்தங்கள் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றிருக்கும். இந்நிலையில், புதிய அட்டவணை அடுத்த ஆண்டு (2025) ஜனவரி மாதம் வெளியிடப்படும் என ரயில்வே தெரிவித்துள்ளது. அதுவரை பழைய அட்டவணையை பின்பற்ற அறிவுறுத்தியுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.