India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதிய கிரிமினல் சட்டம் குறித்து ஆட்சேபம் இருந்தால் நேரில் சந்தித்து தெரிவிக்கலாம் என முதல்வர் ஸ்டாலினுக்கு அமித் ஷா அழைப்பு விடுத்துள்ளார். புதிய கிரிமினல் சட்டங்கள் தமிழிலும் கொண்டு வரப்படும். தமிழில் விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். இதுகுறித்து பேச தமிழக முதல்வரோ, எம்பிக்களோ தன்னை சந்திக்க நேரம் கேட்கவுமில்லை, யாரும் நேரில் வரவுமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகளுக்கு நடத்தப்பட்ட யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு முடிவு நேற்று வெளியானது. இதில், நாடு முழுவதும் 14,627 பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், தமிழகத்தில் இருந்து 650 பேர் தேர்வாகியுள்ளனர். கடந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து 700 பேர் வரை தேர்ச்சி பெற்ற நிலையில், தற்போது தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. எனவே, அரசு இதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
ஓலா வாகன விற்பனை 2023 ஜூலை முதல் 2024 ஜூன் வரை, 107% அதிகரித்திருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஜூன் மாதத்தில் மட்டும் 36,716 ஓலா வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலக்ட்ரிக் பைக் நிறுவனமாக ஓலா மாறியுள்ளது. இந்நிறுவனம் பங்குச்சந்தையில் காலடி எடுத்து வைக்க இருக்கும் நிலையில் அவர்களது விற்பனையும் அதிகரித்து வருகிறது.
மத்திய அரசு புதிதாக அமல் படுத்திய மூன்று குற்றவியல் சட்டங்களை எதிர்த்து வழக்கறிஞர் ராம்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். குற்றவியல் சட்டங்களுக்கு இந்தியில் பெயர் வைப்பது இந்திய ஆட்சி மொழி சட்டத்துக்கு எதிரானது என்று குறிப்பிட்டிருக்கும் அவர், மூன்று சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
மகளிர் உரிமைத்தொகை 1000 ரூபாயை, கூட்டுறவு வங்கியில் சேமித்தால், கூடுதல் வட்டி கிடைக்கும் என அரசு அறிவித்துள்ளது. பொதுவாக வங்கியில் பணம் சேமிக்க 3-4% வரை வட்டி கிடைக்கும். ஆனால், மகளிர் உரிமைத் தொகை ₹1000-ஐ கூட்டுறவு வங்கியில் சேமிக்கும்போது 7.5% வட்டி பெறலாம். இதற்காக அரசு மலையரசி தொடர் வைப்புத் திட்டத்தை நீலகிரியில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது, விரைவில் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும்.
ஜிகா வைரஸ், ஏடிஸ் கொசுவால் பரவும். இதே கொசுதான் டெங்கு, சிக்குன் குனியாவை பரப்புகிறது. இந்த கொசு, பகலில் கடிப்பவையாகும். இதனால் பாதித்தோருக்கு லேசான காய்ச்சல், தோல் தடிப்பு, தலைவலி, தசை மற்றும் மூட்டு வலி, கண் இமைகளின் உட்பகுதியில் எரிச்சல் இருக்கும். இந்த அறிகுறி பொதுவாக 2-7 நாள்களுக்கு நீடிக்கும். அறிகுறிகள் மோசமடைந்தால், மருத்துவரை நாட உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது.
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் ஏடிஎஸ் கொசு மூலம் பரவும் ஜிகா வைரசால், மருத்துவர் உள்ளிட்ட 4 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் 2 கர்ப்பிணி பெண்களுக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து புனேவில் அந்த வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து அப்பகுதியில் ஆய்வு நடத்தி, ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில், நேற்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதனைத் தொடர்ந்து, இன்று பிரதமர் மோடி பதிலளிக்கவுள்ளார். மதிய உணவு இடைவேளைக்குப் பின் மக்களவையில் பிரதமர் பதிலளிப்பார் என்று சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
பணிச்சுழல், நிதிநிலைமை உள்ளிட்ட காரணத்தினால் சிலர் காலை உணவை தவிர்த்து விடுவார்கள். இது நல்லதா, கெட்டதா என கேள்வி எழுவதுண்டு. ஆனால், காலை உணவை நிச்சயம் தவிர்க்கக் கூடாது என்றும், இதனால் உடலில் பல மோசமான விளைவுகள் ஏற்படும், அல்சர் ஏற்பட வாய்ப்புண்டு என்றும், உடலின் சர்க்கரை அளவு குறையும், நமது முடிவெடுக்கும் திறன் பாதிக்கப்படும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
பள்ளி, கல்லூரியில் நுழைவுத் தேர்வு நடத்த கூடாது என்று அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி முருகேசன் குழு தனது அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் நேற்று சமர்ப்பித்தது. மேலும், பள்ளிக்கல்வியில் தமிழை முதல் மொழியாக முதன்மைப்படுத்த வேண்டும். தொடக்க நிலை வகுப்பு முதல், பல்கலைக்கழக நிலை வரை தமிழ்வழி கல்வியை வழங்க வேண்டும். தமிழ் கற்பித்தல் தொடர்பான ஆராய்ச்சி பிரிவை அமைக்கவும் பரிந்துரைத்துள்ளது.
Sorry, no posts matched your criteria.