India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஜூலை – டிசம்பர் வரை அடுத்தடுத்து பல பிரமாண்ட படங்கள் வெளியாகவுள்ளன. அதாவது, இந்தியன் 2, ராயன், தேவாரா 1, புஷ்பா 2, கேம் சேஞ்சர், அமரன், கங்குவா, சிங்கம் ஏகெய்ன், தங்கலான், கோட், வேட்டையன், விடாமுயற்சி, தி ரூல், டெட்பூல் அன்ட் வோல்வரின், ஜோக்கர் 2, வெனம் தி லாஸ்ட் சான்ஸ் ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளன. இதனால் அடுத்த 6 மாதங்களுக்கும் திரைப்பட ரசிகர்களுக்கு கொண்டாட்டம் காத்திருக்கிறது.
அசாமை சேர்ந்த அப்தாப் அலி, தனது சகோதரனுடன் பெரம்பூரில் நேற்றிரவு சென்று கொண்டிருந்த போது கையிலிருந்த செல்போனை 2 பேர் பறித்துச் சென்றனர். அவர் அளித்த புகாரின் பேரில் ஆயிரம் விளக்கு போலீசார், BNS சட்டம் 304(2) பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அதேபாேல், நடேசன் சாலையை சேர்ந்த சாரதியை, பெண்கள் குளித்ததை வீடியோ எடுத்ததாக 77ஆவது பிரிவின்கீழ் ஐஸ் அவுஸ் போலீசார் கைது செய்தனர்.
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீது எழுந்த பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் ஜூன் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த அவரது பதவிக்காலத்தை, ஓராண்டு பணி நீட்டிப்பு செய்து தமிழக ஆளுநர் உத்தரவிட்டிருந்தார். இதற்கு, மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தேசியளவில் அதிகம் உட்கொள்ளப்படும் மாமிசமாக கோழிக்கறி உள்ளது. அசைவம் உண்போரில் சுமார் 51.14% பேர் கோழிக்கறியைதான் விரும்பி உண்பதாக கால்நடை பராமரிப்புத்துறையின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. எருமை மாட்டுக்கறி – 17.61%, வெள்ளாட்டுக் கறி – 14.47%, செம்மறி ஆட்டுக்கறி – 10.51%, பன்றி இறைச்சி – 3.85%, மாட்டு இறைச்சி – 2.43% என்ற அடிப்படையில் மாமிச நுகர்வு இருக்கிறது.
கடந்த மூன்று நாள்களாக ஆபரணத்தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்த நிலையில், இன்று உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ₹40 உயர்ந்து ₹53,520க்கும், கிராமுக்கு ₹5 உயர்ந்து ₹6,690க்கும் விற்பனையாகிறது. அதேபோல், சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை 80 காசுகள் உயர்ந்து ₹95.50க்கு விற்பனையாகிறது.
IOB வங்கியில் வாங்கிய ₹180 கோடி கடனை திருப்பிச் செலுத்தாத வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் பிணையில் வெளிவர முடியாத வாரண்டு உத்தரவை பிறப்பித்துள்ளது. அந்த வங்கியில் 2007-12இல் பெற்ற கடனை திருப்பிச் செலுத்தாமல் இந்தியாவை விட்டு வெளியேறி லண்டனுக்கு அவர் சென்றுவிட்டார். இதையடுத்து அவர் மீது 2016இல் வழக்குப்பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
நேற்றையை மக்களவைக் கூட்டத்தொடரில் எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பாஜக அரசை கடுமையாக சாடினார். சிறுபான்மை மக்களுக்கு எதிரான அரசு என்றும், சகிப்புத்தன்மையற்ற அரசாக பாஜக செயல்படுவதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதில், பலவற்றை அவைக் குறிப்பில் இருந்து சபாநாயகர் நீக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.
தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் ‘அப்ரென்டிஸ்’ பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மெக்கானிக்கல்/ ஆட்டோமொபைல் பிரிவில் கிராஜூவேட் அப்ரென்டிஸ் 18, டெக்னீசியன் 61 என மொத்தம் 79 இடங்கள் உள்ளன. 2020 முதல் 2023 வரை பி.இ., பி.டெக்., படித்தவர்கள் 15.07.2024ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கிராஜூவேட் மாதம் ₹9000. மேலும் விவரங்களுக்கு boat-srp.com என்ற இணையதளத்தில் பார்க்கவும்.
பாஜக நிர்வாகி பாலசுப்ரமணியம் அளித்த கொலை மிரட்டல் புகாரின்பேரில் அக்கட்சியின் கிழக்கு மாவட்டத் தலைவர் சாய் சத்யன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னையில் நேற்று அக்கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட தகராறின்போது பாலசுப்ரமணியத்தை சாய் சத்யன் மிரட்டியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது கரூரைச் சேர்ந்த தொழிலதிபர் பிரகாஷ், ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை போலி ஆவணம் மூலம் அபகரித்து விட்டதாக புகார் கொடுத்துள்ளார். இதேபோல் சார்பதிவாளர் முகமது அப்துல் காதரும் புகார் அளித்துள்ளார். இதில் முன்ஜாமின் கிடைக்காததால் விஜயபாஸ்கர் தலைமறைவான நிலையில், அவரைக் கைது செய்ய 5 தனிப்படைகளை சிபிசிஐடி போலீஸ் அமைத்துள்ளது.
Sorry, no posts matched your criteria.