news

News July 2, 2024

காங்கிரஸ் ஒட்டுண்ணி கட்சி: மோடி

image

சிறுபிள்ளைத்தனமான சேட்டைகளை நேற்று நாம் பார்த்ததாக பிரதமர் மோடி கிண்டல் செய்துள்ளார். ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு குறித்து மக்களவையில் பேசிய அவர், காங்கிரஸ் 13 மாநிலங்களில் ஜீரோ எடுத்துவிட்டு, ஹீரோ போல பேசி வருவதாக சாடியுள்ளார். மேலும், வரும் சட்டப்பேரவை தேர்தல்களிலும் பாஜகவே வெல்லும் என கூறிய அவர், இனி காங்கிரஸ் ஒட்டுண்ணி கட்சி என அழைக்கப்படும் எனவும் விமர்சித்துள்ளார்.

News July 2, 2024

திராவிட மாடல் அல்ல, போதைப் பொருள் ஆட்சி: செல்லூர் ராஜூ

image

திமுக ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என்றழைப்பதற்கு பதிலாக போதைப்பொருள் ஆட்சி எனக் கூறலாம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார். திமுக பொறுப்பேற்று 3 ஆண்டுகளாகியும் அரசு இதுவரை எந்தவொரு வளர்ச்சி பணியையும் மேற்கொள்ளவில்லை எனக் குற்றம்சாட்டிய அவர், மக்களுக்கான நலத் திட்டங்களை நிறைவேற்ற அமைச்சர்கள் யாருமே முன் வருவதில்லை எனவும் சாடியுள்ளார்.

News July 2, 2024

ரேஷன் கார்டு கிடைக்காமல் புலம்பும் மக்கள்

image

தேர்தல் காரணமாக புதிய ரேஷன் கார்டு விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டதாகவும், தற்போது மீண்டும் ரேஷன் கார்டு வழங்கும் பணி தொடங்கியுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், புதிய ரேஷன் கார்டுக்காக விண்ணப்பித்து, மாத கணக்கில் காத்திருப்பதாக பலர் புலம்புகின்றனர். விண்ணப்பம் சரிபார்ப்பு நிலையிலேயே இருப்பதால், நலத்திட்ட உதவிகள் பெற முடியவில்லை என புகார் தெரிவித்து வருகின்றனர்.

News July 2, 2024

நீட் முதுகலை தேர்வு முக்கிய முடிவு?

image

நீட் (UG) தேர்வு வினாத்தாள் கசிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஜூன் 23இல் நடைபெறவிருந்த நீட் (PG) தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, தகுதி தேர்வில் நிலவும் குளறுபடிகளை களையவும், நடைமுறைகளை மேம்படுத்தவும் மத்திய அரசு உயர்மட்ட குழு அமைத்தது. இந்நிலையில், நீட் வினாத்தாளை, தேர்வு தொடங்கும் 2 மணி நேரத்திற்கு முன்பு இறுதிசெய்ய தேசிய தேர்வு முகமை முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News July 2, 2024

சீமான் போராடினால் ஆதரவு: இபிஎஸ்

image

நல்ல காரியத்திற்காக போராடினால், சீமானுக்கு ஆதரவு வழங்குவோம் என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கூறியுள்ளார். கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தை கண்டித்து அதிமுக நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியினர் ஆதரவு தெரிவித்திருந்தனர். இந்த நிகழ்வை சுட்டிக்காட்டிய அவர், நல்ல காரியத்திற்காக சீமான் ஆதரவு வழங்கினார். அதேபோல, போராட்டம் நடத்தினால் சீமானுக்கு அதிமுக ஆதரவளிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

News July 2, 2024

37 லட்சம் பேரின் உயிரை காவு வாங்கிய இயற்கை சீற்றம்

image

உலகில் பேரழிவை ஏற்படுத்திய இயற்கைச் சீற்றங்களில் சீனாவின் யாங்சி நதியில் 1931ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கும் ஒன்றாகும். அந்த வெள்ளப் பெருக்கால், நான்ஜிங், வூகான் நகரங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. அப்பகுதியில் வாழ்ந்த 50 லட்சம் பேர் உடைமைகளை இழந்தனர். அதில் சுமார் 37 லட்சம் பேர் உயிரிழந்ததாக அரசு அமைப்புகளும், தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகமும் மதிப்பிட்டுள்ளன.

News July 2, 2024

80/80 வென்றாலும் நம்ப மாட்டேன்: அகிலேஷ்

image

உ.பியில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளிலும் வென்றாலும், EVM இயந்திரங்களை நம்ப மாட்டேன் என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். மக்களவையில் உரையாற்றிய அவர், EVM தொடர்பான புகார்கள் சாகவில்லை என்பதால், தாங்கள் பிடிவாதமாக இருப்பதாகவும் கூறினார். மேலும், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தபோது, அரசாங்கமும், தேர்தல் ஆணையமும் சிலருக்கு ஆதரவாக நடந்து கொண்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

News July 2, 2024

அதிக மெய்டன் ஓவர்கள் வீசி வரலாற்று சாதனை

image

2007 – 2024 வரையிலான டி20 உலகக் கோப்பை தொடர் வரலாற்றில் இதுவரை 152 மெய்டன் ஓவர்கள் வீசப்பட்டுள்ளன. நடந்து முடிந்த 9 ஆவது டி20 உலகக் கோப்பை தொடரில் 44 மெய்டன் ஓவர்கள் வீசப்பட்டன. இதுவே அதிகபட்ச மெய்டன் ஓவர்களை கொண்ட தொடராக கருதப்படுகிறது. டி20 உலகக் கோப்பை தொடரில் வீசப்பட்ட மெய்டன் ஓவர்கள் விவரம்: *2007 – 15 *2009 – 05 *2010 – 11 *2012 – 21 *2014 – 13 *2016 – 09 *2021 – 17 *2022 – 17 *2024 – 44.

News July 2, 2024

குட்டி ஸ்டோரி கூறி ராகுலை கிண்டல் செய்த பிரதமர்

image

சிறு கதை கூறி, ராகுல் காந்தியை பிரதமர் கிண்டல் செய்துள்ளார். அதாவது, “ஒரு குழந்தை பள்ளியில் இருந்து வீடு திரும்பியதும், தாயிடம் அழுது கொண்டே மற்றொரு சிறுவன் தன்னை அடித்து விட்டதாக புகார் தெரிவித்தான். ஆனால், பள்ளியில் அந்த சிறுவனின் தாய் குறித்தும், ஆசிரியர் குறித்தும் தான் தவறாக பேசியதையும், புத்தகத்தை கிழித்ததையும் அவன் கூறவில்லை” என்றார். அதே போன்ற காட்சிதான் நேற்று நடந்தது எனக் கூறியுள்ளார்.

News July 2, 2024

107 பேர் பலி: பிரதமர் மோடி இரங்கல்

image

உத்தர பிரதேசத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 100க்கும் அதிகமானோர் பலியான நிகழ்வை அறிந்து வேதனை அடைந்ததாக பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக மக்களவையில் இரங்கல் தெரிவித்த அவர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும், இந்த கோர சம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள் விரைவில் நலம்பெற பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!