news

News July 2, 2024

12 ராசிகளுக்கான பலன்கள்

image

* மேஷம் – லாபம் கிடைக்கும்
*ரிஷபம் – உதவி செய்யும் நாள்
*மிதுனம் – நட்பு வட்டம் பெருகும்
*கடகம் – பகை உருவாகும்
*சிம்மம் – ஆர்வம் அதிகரிக்கும்
*கன்னி – ஜெயம் உண்டாகும்
*துலாம் – புகழ் கிடைக்கும்
*விருச்சிகம் – எச்சரிக்கை தேவை
*தனுசு – அமைதியான நாள்
*மகரம் – யோகம் உண்டாகும் *கும்பம் – போட்டியை தவிர்க்கவும் *மீனம் – கவனம் தேவை

News July 2, 2024

கூகுள் குரோம் செயலியை உடனே அப்டேட் செய்யுங்கள்!

image

கூகுள் குரோம் பயனாளர்கள் தங்கள் சாதனங்களை உடனடியாக அப்டேட் செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கூகுள் குரோம் செயலியின் பழைய வெர்ஷனில் சைபர் தாக்குதல் நடக்க அதிக வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ள மத்திய அரசு, பாதிப்பில் இருந்து தப்பிக்க புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனை பயன்படுத்தும்படி கூறியுள்ளது. மேலும், சந்தேகத்திற்குரிய இணைய லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளது.

News July 2, 2024

இதை செய்தாலே நிம்மதியான தூக்கம் வரும்!

image

பசும்பாலில் ஜாதிக்காய்த் தூள் 2 சிட்டிகை போட்டு, அதில் அரை ஸ்பூன் அளவு அமுக்கராங்கிழங்கு பொடியையும் சேர்த்து, படுக்கும் முன்னர் இளஞ்சூட்டில் அருந்தினால் நிம்மதியான தூக்கம் வரும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும், மாலை நேரத்தில், 45 நிமிடங்களில் 3 கி.மீ. தூரம் வேக நடை பயிற்சி செய்துவிட்டு, வெந்நீரில் குளித்தால் இரவில் தடையற்ற தூக்கத்தை பெறலாம் என்கிறார்கள்.

News July 2, 2024

என்ஐஏ துணை ஆலோசகராக ரவிச்சந்திரன் நியமனம்

image

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு முகமையின் துணை ஆலோசகராக டி.வி.ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை பாதுகாப்பு அமைச்சகத்தின் முன்மொழிவு & மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு அளித்த ஒப்புதலை ஏற்று மத்திய பணியாளர் நல அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது. ஐ.பி., உளவுத்துறைத் தேசிய சிறப்பு இயக்குநராக பணியாற்றிவரும் அவர், 1990ஆம் ஆண்டு தமிழகப் பிரிவு ஐபிஎஸ் அதிகாரியாவார்.

News July 2, 2024

ஒழுக்கமற்ற மாணவரைப் போல் நடக்கும் ராகுல்: உமா பாரதி

image

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஒழுக்கமற்ற மாணவர் தலைவரைப் போல் நடந்து கொள்வதாக பாஜக மூத்த தலைவர் உமா பாரதி விமர்சித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில், “இந்துக்கள் வன்முறையால் பாதிக்கப்பட்டும், அதனை எதிர்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளார். மேலும், 50 வயதைக் கடந்த ராகுலின் நாடாளுமன்ற பேச்சு ஒரு எதிர்க்கட்சி தலைவரைப் போல் இல்லை என்பதால், மக்களுடன் தானும் ராகுலை கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்.

News July 2, 2024

பலி எண்ணிக்கை 116ஆக உயர்ந்தது

image

உத்தர பிரதேசத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 116ஆக உயர்ந்துள்ளது. ஹாத்ராஸ் மாவட்டத்தில் உள்ள முகல்கர்ஹி கிராமத்தில், ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், ஏராளமானோர் பங்கேற்றபோது நிகழ்ந்த கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் என இதுவரை 116 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

News July 2, 2024

முதல் ஒளிவட்டப் பாதையை நிறைவு செய்தது ‘ஆதித்யா எல்1’

image

‘ஆதித்யா எல்1’ விண்கலம் எல்1 புள்ளியைச் சுற்றி அதன் முதல் ஒளிவட்டப் பாதையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக, இஸ்ரோ அறிவித்துள்ளது. முதல் ஹாலோ சுற்றுப்பாதையை முடிக்க ‘ஆதித்யா எல்1’ விண்கலம் 178 நாள்களை எடுத்துக் கொண்டது. இந்நிலையில், 2ஆவது ஹாலோ சுற்றுப்பாதையில் ‘ஆதித்யா எல்1’ விண்கலம் பயணிப்பதை விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். சூரியனை ஆய்வு செய்வதற்காக ‘ஆதித்யா எல்1’ விண்கலம் செலுத்தப்பட்டது.

News July 2, 2024

பானிப் பூரி கடைகளில் ஆய்வு செய்ய உத்தரவு

image

தமிழகம் முழுவதும் உள்ள பானிப் பூரி கடைகளில் சோதனை மேற்கொள்ள, உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது. சென்னையில் உள்ள கடைகளில் விற்கப்படும் பானிப் பூரிக்களில், புற்றுநோயை உண்டாக்கும் நிறமிகள் பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்தது. இதனை தடுக்கும் வகையில், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கடைகளிலும் பானிப் பூரியின் தரத்தை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

News July 2, 2024

விஜய் சேதுபதியுடன் மீண்டும் இணையும் நித்யா மேனன்?

image

‘மகாராஜா’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் விஜய் சேதுபதி அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். அந்த வரிசையில், அவரது 52ஆவது படத்தை பாண்டிராஜ் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், இப்படத்தில் நித்யா மேனன் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. மலையாளத்தில் இந்த ஜோடி 19 (1) (ஏ) என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

News July 2, 2024

ரசாயனம் கலந்த கீரையை எப்படி கண்டுபிடிப்பது?

image

கீரையில் ரசாயனம் கலந்திருக்கும் வீடியோ வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கீரையில் ரசாயனம் கலந்திருப்பதை எளிதாக கண்டுபிடிக்கலாம் என்கிறார்கள் தோட்டக்கலை நிபுணர்கள். டவல் அல்லது டிஷ்யூ பேப்பரை சிறிதளவு நீரில் நனைத்து, கீரையின் மேல் தேய்க்கும்போது பச்சையாக மாறினால், அது ரசாயனத்தில் முக்கி எடுத்த கீரை என்றும், எந்த நிறமும் இல்லாமல் இருந்தால் ஃப்ரெஷ்ஷான கீரை எனவும் கூறுகின்றனர்.

error: Content is protected !!