news

News July 3, 2024

மத நிகழ்வில் ஏற்பட்ட விபத்துக்கள்

image

உ.பி.,யில் மத நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 116 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக 2023 மார்ச் 31ம் தேதி இந்தூரில் ராம நவமியன்று புனித நீராடும் போது 36 பேர் உயிரிழந்தனர். 2022 ஜன.2 ஜம்முவில் வைஷ்ணவி தேவி கோவில் கூட்ட நெரிசலில் 12 பேர், 2015 ஜூலை 14, கோதாவரியில் புனித நீராடலின்போது 25 பேர், 2014 அக்.3 பிஹார் தசரா கூட்ட நெரிசலில் 32 பேர் உயிரிழந்தனர்.

News July 3, 2024

கறிவேப்பிலை எனும் சத்துப் பெட்டகம்

image

உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உள்ள உடல் நலம் சார்ந்த பிரச்னைகளைத் தீர்க்கும் சத்துப் பெட்டகமாக கறிவேப்பிலையை சித்த மருத்துவ நூல்கள் போற்றுகின்றன. அதில் தயமின்‌, ரிபோஃபிளேவின், நியாசின், வைட்டமின் A & C, ஃபோலிக் அமிலம் போன்ற சத்துகள் உள்ளன. ரத்தம், புரோஸ்டேட், குடல் புற்றுநோய் வராமல் காக்கும் கார்பாஸோல் அல்கலாய்டு நிறைந்த அதனை பொடி, ஜூஸ் என்று அவரவருக்கு விருப்பமான வகையில்
சேர்த்து கொள்ளலாம்.

News July 3, 2024

இன்று ஓடிடியில் வெளியாகிறது ‘கருடன்’

image

காமெடி நடிகர் சூரி தற்போது கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாகப் பார்த்து நடித்து வருகிறார். சமீபத்தில் சசிகுமார், உன்னி முகுந்தனுடன் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளியான ‘கருடன்’ படம் அனைத்து தரப்பு மக்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. உலகம் முழுவதும் ₹50 கோடிக்கும் மேல் வசூலித்துள்ள இப்படம், இன்று அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இப்படம் ஓடிடியிலும் வரவேற்பைப் பெறுமா?

News July 3, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

image

இன்று (ஜூலை 3) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News July 3, 2024

சத்தீஸ்கரில் 5 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

image

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் தாக்குதல் சம்பவம் தொடர்கதையாக நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில், அங்கு நாராயண்பூர் நகர் பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படை வீரர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினர் மீது நக்சல்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். பதிலுக்கு பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 5 நக்சல்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

News July 3, 2024

இந்திய அணிக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர்கள்

image

ஐசிசி கோப்பைகளை இந்திய அணி வென்றபோது இந்திய அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலை இங்கே காணலாம்.
1983 ODI WC- கபில் தேவ் (303)
2007 T20 WC- கௌதம் கம்பீர் (227)
2011 ODI WC- சச்சின் டெண்டுல்கர் (482)
2013 சாம்பியன்ஸ் கோப்பை – ஷிகர் தவான் (363)
2024 T20 WC- ரோஹித் சர்மா (257)

News July 3, 2024

ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படும் பாலிவுட் படம்

image

பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் கரண் ஜோஹர் தயாரித்துள்ள ‘கில்’ படம் ஜூலை 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதிரடி ஆக்சன் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கீனு ரீவ்ஸ் நடித்த ‘ஜான் விக்’ படத்தை தயாரித்த 87 லெவன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்தப்படத்தை ரீமேக் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

News July 3, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

image

இன்று (ஜூலை 3) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News July 3, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்!

image

* தமிழ்நாட்டில் 3 அதிநவீன பரிசோதனை கூடங்கள் அமைக்க ஒப்பந்தம்
* மக்களவை ஒரு நாள் முன்னதாக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
* நெல்லையில் அரசுப் பள்ளியில் சாதி ரீதியிலான தாக்குதல் நடத்தியதாக 7 மாணவர்கள் கைது.
* அரசு கலைக் கல்லூரிகளில் சேர மாணவர்கள் (ஜூலை 5 வரை) மீண்டும் விண்ணப்பிக்கலாம்
* அதிமுகவினர் பாமகவுக்கு வாக்களிக்கக் கூடாது – இபிஎஸ்

News July 3, 2024

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினருக்கு சிறை

image

அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகிகள் ரிஷி ஷா, ஷ்ரதா அகர்வால். இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர்கள் தங்களது வாடிக்கையாளர்களிடம் சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய ரூபாயின் மதிப்பில் 8300 கோடி) மோசடி செய்ததாக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ரிஷி ஷாவுக்கு 7.5 ஆண்டுகளும், ஷ்ரதாவுக்கு 3 ஆண்டுகளும், சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

error: Content is protected !!