news

News July 3, 2024

எனக்கும் ரஜினிக்கும் இடையே பொறாமை இல்லை: கமல்

image

மற்ற நடிகர்களைப் போல தங்களுக்குள் பொறாமை இல்லை என்று ரஜினி குறித்து கமல்ஹாசன் பேசியுள்ளார். மும்பையில் நடைபெற்ற இந்தியன் – 2 பட நிகழ்ச்சியில் ரஜினி முன் பேசிய கமல், “எங்கள் இருவருக்கும் குரு ஒருவர்தான். எங்களுக்குள் போட்டி இருக்கிறது. ஆனால், பொறாமை இல்லை. இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி பேசிக் கொண்டது கிடையாது. அது எங்களுக்குள் செய்துகொண்ட ஒப்பந்தம்” என்றார்.

News July 3, 2024

கல்லூரிகளில் இன்று முதல் வகுப்புகள் ஆரம்பம்

image

தமிழக கலை & அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் தொடங்குகிறது. பள்ளிப் படிப்பை முடித்து வரும் மாணவ மாணவியருக்கு எடுத்தவுடனே மலைப்பை ஏற்படுத்தாமல் வழிகாட்டு பயிற்சிகளை நடத்த கல்லூரிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனிடையே அரசு கல்லூரிகளில் 63% இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளதால், இன்று முதல் 3 நாட்கள் விண்ணப்பிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

News July 3, 2024

கள்ளக்குறிச்சியில் விற்கப்பட்டது சாராயமே அல்ல

image

கள்ளக்குறிச்சியில் இறந்த 65 பேர் குடித்தது சாராயமே அல்ல என்பதும் வெறும் மெத்தனால் கலந்த தண்ணீர் என்பதும் சிபிசிஐடி விசாரணையில் தெரிய வந்துள்ளது. வழக்கமாக சாராயம் காய்ச்சி, அதில் போதையை அதிகப்படுத்த மெத்தனால் கலக்கப்படுவதுண்டு. ஆனால், கள்ளக்குறிச்சியில் மெத்தனாலை நேரடியாக தண்ணீரில் கலந்து குடித்திருக்கின்றனர். இதற்கு காரணமானவர்கள் யார் என்று தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

News July 3, 2024

சல்மான் கானை கொல்ல ₹25 லட்சம்

image

சிறையில் இருக்கும் தாதா லாரன்ஸ் பிஷ்னோய், நடிகர் சல்மான் கானை கொல்ல கூலிப்படையினருக்கு ₹25 லட்சம் கொடுத்ததாக போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். ஏப்ரல் மாதம் மும்பையில் உள்ள சல்மான் கான் வீட்டை நோக்கி சிலர் துப்பாக்கியால் சுட்டனர். அவர்களை கைது செய்த போலீசார், துப்பாக்கி வாங்கிக் கொடுத்த 2 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணையில், இது திட்டமிடப்பட்ட சதி என்பது தெரியவந்துள்ளது.

News July 3, 2024

சுயநலமே தோல்விக்கு காரணம்: பார்தீவ் பட்டேல்

image

PAK அணியின் கேப்டன் பாபர் அசாம் தனது சுயநலத்தை முன்னிறுத்தியதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் பார்தீவ் படேல் குற்றஞ்சாட்டியுள்ளார். மிக திறமையான தொடக்க ஆட்டக்காரரான ஃபகார் ஜமானை முதலில் களமிறக்கி இருக்க வேண்டுமென விமர்சித்த அவர், ஆனால் பாபர் அசாம் அதனை செய்யவில்லை என்று கூறினார். மேலும், சர்வதேச அணிகளில் PAK அணி மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதற்கு அவரே காரணம் எனவும் சாடினார்.

News July 3, 2024

ஏர்டெல், ஜியோ கட்டண உயர்வு இன்று முதல் அமல்

image

AIRTEL, JIO நிறுவனங்களின் உயர்த்தப்பட்ட புதிய கட்டணங்கள் இன்று முதல் அமலுக்கு வருகிறது. இரண்டு நிறுவனங்களும் பிரீபெய்டு, போஸ்ட் பெய்டு கட்டணங்களை 10-27% வரை உயர்த்தியுள்ளன. இதனால், ஆண்டுக்கு தற்போது செலுத்தும் கட்டணத்தை விட ₹650 வரை அதிகமாக செலுத்த வேண்டிய நிலை வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. வோடஃபோன் நிறுவனமும் கட்டணத்தை உயர்த்திய நிலையில், அதன் கட்டண உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது.

News July 3, 2024

வாடிக்கையாளருக்கு ₹3.8 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

image

டூப்ளிகேட் சிம் வழங்கியதற்காக வாடிக்கையாளருக்கு இழப்பீடு வழங்குமாறு ஏர்டெல் நிறுவனத்திற்கு தேசிய நுகர்வோர் இடர் தீர்வு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 2017இல் அடையாளம் தெரியாத ஒருவர், ராணுவ வீரர் ஷியாம் குமாரின் மொபைல் எண் கொண்ட டூப்ளிகேட் சிம் கார்டை பெற்று, அவரது வங்கிக் கணக்கில் இருந்து ₹2.8 லட்சத்தை எடுத்துள்ளார். இது தொடர்பான வழக்கில் அவருக்கு ₹3.8 லட்சத்தை இழப்பீடாக வழங்க NCDRC உத்தரவிட்டுள்ளது.

News July 3, 2024

2ம் கட்ட விருது வழங்கும் விழாவுக்கு விஜய் வருகை

image

10, +2 பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு 2ஆம் கட்டமாக தவெக சார்பில் நடிகர் விஜய் இன்று ஊக்கத்தொகை வழங்குகிறார். முதல் கட்டமாக 21 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு கடந்த 28ஆம் தேதி விருது வழங்கப்பட்ட நிலையில், இன்று 18 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 700 மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்காக விஜய் காலையிலேயே சென்னை திருவான்மியூரில் உள்ள திருமண மண்டபம் வந்துள்ளார்.

News July 3, 2024

சொத்துப் பிரச்னைகளை தீர்க்கும் ஸ்ரீபூவராகவர்

image

பாதாளத்துக்குள் புகுந்து தன் முகக்கோட்டால் தண்டகாசுரனது தலையைக் கிழித்து எறிந்து, மண் முட்டி, விண் எழுந்தவர் ஸ்ரீபூவராகவர் என மந்திரநூல்கள் போற்றுகின்றன. இத்தகு பெருமை கொண்ட அவர் வீற்றிருக்கும் திருத்தலம் திருமுட்டத்தில் உள்ளது. ஆடி பெளர்ணமியன்று இக்கோயிலுக்கு சென்று, சந்தனம் சாற்றி செய்து, நெய் தீபமேற்றி, கோரைக்கிழங்கு படைத்து வழிபட்டால் நிலம் & சொத்துப் பிரச்னைகள் நீங்கும் என்பது ஐதீகம்.

News July 3, 2024

இன்று முதல் சிதம்பரம் கோயில் ஆனித் திருவிழா

image

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவம் இன்று காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள்கள் நடைபெற உள்ளது. நாளை காலை 6:00 – 7:30க்குள் கோயிலில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெறுகிறது. ஜூலை 11 ஆம் தேதி தேர் திருவிழாவும், 12ஆம் தேதி நடராஜ மூர்த்திக்கு பட்டாபிஷேகமும் நடைபெறுகிறது. பின்னர் 13ஆம் தேதி முத்துப் பல்லக்கில் வீதி உலாவுடன் உற்சவம் நிறைவுபெறுகிறது.

error: Content is protected !!