news

News July 3, 2024

நாட்டில் ஏழ்மை குறைந்துள்ளது

image

2011ஆம் ஆண்டு 21 சதவீதமாக இருந்த நாட்டின் ஏழ்மை, தற்போது 8.5 சதவீதமாக குறைந்துள்ளது. NCAER அமைப்பு வெளியிட்ட ஆய்வு அறிக்கையின்படி, பணவீக்க மதிப்பு சரிசெய்யப்பட்டு இந்த ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் ஏழ்மை 24.8 சதவீதத்தில் இருந்து 8.6 சதவீதமாக சரிந்திருப்பதாகவும், நகர்ப்புறங்களில் ஏழ்மை 13.4 சதவீதத்தில் இருந்து 8.4 சதவீதமாக சரிந்திருப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 3, 2024

நெரிசல்களும் உயிரிழப்பு சோகங்களும்…

image

*2024: ஹத்ராஸ் (UP)-116 *2023: ராம நவமி புனித நீராடல் இந்தூர்(MP)-36 *2022: வைஷ்ணவி தேவி கோவில் கூட்ட நெரிசல் (J&K) -12 *2014: பாட்னா தசரா விழா கூட்ட நெரிசல் (BIHAR) – 32 *2013: டாடியா கோவில் கூட்ட நெரிசல் (MP) – 115 *2011: சபரி யாத்திரை இடுக்கி (KL) – 104 *2008: சாமுண்டி தேவி கோயில் கூட்ட நெரிசல் (RS) – 250 *2008: நைனா கோயில் கூட்ட நெரிசல் (HP)-162 *2005: மந்தர் கோயில் கூட்ட நெரிசல் (MH) – 340.

News July 3, 2024

நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு

image

உ.பியில் மத வழிபாட்டு கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 121ஆக உயர்ந்துள்ளது. ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள ரதி பன்பூர் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியாரின் மத வழிபாட்டு நிகழ்ச்சி நேற்று நடந்தது. சுமார் 50,000க்கும் மேற்பட்டோர் திரண்ட இக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 90 பெண்கள் உட்பட 121 பேர் உயிரிழந்தனர். மேலும், 28 பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

News July 3, 2024

13.5% நிறுவனங்கள் தமிழகத்தில்தான் உள்ளன

image

இந்தியாவில் மகளிரால் நடத்தப்படும் தொழில் நிறுவனங்களில் 13.5% நிறுவனங்கள் தமிழ்நாட்டில்தான் உள்ளதென அமைச்சர் உதயநிதி பெருமிதம் தெரிவித்துள்ளார். தொழில் முனைவோராக விரும்பும் மகளிருக்கு திமுக என்றுமே உறுதுணையாக இருக்கும் எனக் கூறிய அவர், அதற்காகதான் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் 2.0, கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் போன்ற திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் நடைமுறைப்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்தார்.

News July 3, 2024

குற்றவியல் சட்டங்கள் குறித்து கருத்து தெரிவிக்க முடியாது!

image

புதிய குற்றவியல் சட்டங்கள் பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளார். 3 குற்றவியல் சட்டங்கள் தொடர்பான மனுக்கள், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகக் கூறிய அவர், இது குறித்து தான் பேசக்கூடாது எனத் தெரிவித்தார். மத்திய அரசு கொண்டு வந்த புதிய சட்டங்களுக்கு எதிராக பல மாநிலங்களில் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

News July 3, 2024

மின் கட்டணம் உயர்கிறது?

image

தமிழக அரசு ஒழுங்குமுறை ஆணைய அறிவுறுத்தலின் பேரில், ஆண்டுதோறும் தொழிற்சாலைகளுக்கான மின்கட்டணத்தை உயர்த்த மின்வாரியத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, இம்மாதம் மின் கட்டணம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அச்சத்தில் உள்ள தொழில் துறையினர் தமிழக அரசின் முடிவு குறித்த எதிர்பார்ப்பில் உள்ளனர். தொழில் துறை தத்தளித்து வருவதை கருத்தில் இம்முடிவை நிறுத்தி வைக்கவும் வலியுறுத்தியுள்ளனர்.

News July 3, 2024

டெல்லி குழுவின் அறிக்கை… நிர்வாகிகளுக்கு சிக்கல்!

image

தமிழக பாஜக மீதான தேர்தல் செலவினப் புகார்களை விசாரிக்க டெல்லியில் இருந்து குழு வந்தது அனைவரும் அறிந்ததே. மாவட்ட வாரியாக அக்குழு மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், தேர்தல் நிதியை கையாடல் செய்த வேட்பாளர்கள், நிர்வாகிகள் குறித்த ரிப்போர்ட் தயார் செய்து, கட்சி மேலிடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, நடவடிக்கை எடுத்தால் மாநில நிர்வாகிகளுக்குகூட சிக்கல் எழலாம் என கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

News July 3, 2024

இலவச ஆன்மிக சுற்றுலாவுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி

image

அம்மன் கோயில்களுக்கு முதியோரை இலவச ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை செயல்படுத்தி வருகிறது. ஆடி மாதம் அழைத்துச் செல்லப்படும் இந்த சுற்றுலாவுக்கு ஜூலை 17ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இந்து மதத்தை பின்பற்றும் 60 முதல் 70 வயது கொண்ட முதியோர் இத்திட்டத்திற்கு <>HRCE<<>> இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

News July 3, 2024

சட்டப்படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

image

தமிழ்நாட்டில் 3 ஆண்டு LLB சட்டப்படிப்புக்கு இன்று முதல் வரும் 24ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலை.,யுடன் இணைவுபெற்ற அனைத்து சட்டக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவரும் சட்டப் பள்ளிகளில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு <>www.tndalu.ac.in<<>> என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 3, 2024

இன்றும் மாணவர்கள் மத்தியில் பேசுகிறார் விஜய்

image

10, +2 பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வில் விஜய் இன்று உரையாற்ற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 2ஆம் கட்ட நிகழ்வில் பேசமாட்டேன் என விஜய் அன்று கூறிய நிலையில், திடீர் திருப்பமாக அந்த முடிவை மாற்றிக்கொண்டதாகத் தெரிகிறது. கடந்த நிகழ்வில் தமிழ்நாட்டிற்கு நல்ல தலைவர்கள் தேவை என பேசி அவர் பரபரப்பை ஏற்படுத்தியதால், இன்று என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

error: Content is protected !!