news

News July 3, 2024

வெற்றியுடன் தொடங்கிய நோவக் ஜோகோவிச்

image

விம்பிள்டன் (லண்டன்) டென்னிஸ் தொடரின் 2வது சுற்றுக்கு செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச் முன்னேறியுள்ளார். முழங்கால் அறுவை சிகிச்சைக்குப் பிறகு, ஆடுகளத்தில் இறங்கிய அவர், தொடரின் முதலாவது சுற்றில், செக் வீரர் கோப்ரிவாவை 3-0 என்ற நேர் செட்டில் வீழ்த்தியுள்ளார். இந்த வெற்றியின் மூலம் ஃபார்ம் இழந்துவிட்டதாக தன்னை விமர்சித்தவர்களுக்கு நோவக் பதிலடி கொடுத்திருப்பதாக, அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

News July 3, 2024

கல்வி கற்பதே கொண்டாட்டம்; ஜாலியா படிங்க: விஜய்

image

விருது வழங்கும் விழாவில் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக விஜய் பேசினார். “கல்வி கற்பதே கொண்டாட்டம்தான். ஜாலியா படிங்க. மன அழுத்தம் அடையாதீங்க. உலகம் ரொம்ப பெருசு. வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கு. ஒண்ணு ரெண்டு மிஸ் ஆனாலும் கவலைப்பட வேண்டாம். கடவுள் உங்களுக்கு வேறு வாய்ப்பு வழங்க காத்திருக்கிறார். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்.” என்று அவர் பேசியது மாணவர்களை உற்சாகப்படுத்தியது.

News July 3, 2024

மாநில உரிமைகள், தமிழக உணர்வுகளை பேசிய விஜய்

image

தனது அரசியல் அத்தியாயத்தை அதிரடியாகத் தொடங்கியிருக்கிறார் தவெக தலைவர் விஜய். நீட் தேர்வுக்கு எதிராக இன்று பேசிய அவர், மாநில உரிமைகள், தமிழர்களின் உணர்வுகள் ஆகிய ஆயுதங்களை கையில் எடுத்தார். சுதந்திரம் கிடைத்தது முதலே தமிழக அரசியல் இந்த இரண்டையும் சுற்றியே வந்திருக்கிறது. தற்போது விஜய்யின் அரசியல் கொள்கைகளும் அதனை மையப்படுத்தியே அமைகிறது. இதுகுறித்து உங்களது கருத்து என்ன?

News July 3, 2024

மாநில அரசுகளுக்கு முழு சுதந்திரம் தேவை: விஜய்

image

நீட் தேர்வு பிரச்னைகளுக்கு அதனை ரத்து செய்வதே ஒரே தீர்வு என்று தவெக தலைவர் விஜய் பேசியிருக்கிறார். இதுபோன்ற பிரச்னைகளுக்கு கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவதே ஒரே தீர்வு என்று கூறிய அவர், தற்காலிக தீர்வாக சிறப்பு பொதுப் பட்டியல் உருவாக்கி கல்வியை அதில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதன்மூலம், மாநில அரசுகளுக்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும் என்றும் விஜய் பேசினார்.

News July 3, 2024

நீட்டை எதிர்த்து போராட்டத்தில் இறங்கிய திமுக

image

நீட் எதிர்ப்பு தமிழக அரசு மற்றும் திமுகவின் நிலைப்பாடாக உள்ளது. இதன் காரணமாகவே நீட் விலக்கு கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல் திமுகவின் மாணவரணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நீட் விலக்கு அளிக்காத மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடைப்பெற்று வருகிறது. இதில், கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.

News July 3, 2024

தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்: விஜய்

image

மாநில பாடத்திட்டத்தில் படித்த தமிழக மாணவர்கள் NCERT பாடத்திட்டத்தில் நடத்தப்படும் நீட் தேர்வினை எழுத வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம் என்று தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார். இதனை சரிசெய்ய, தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மத்திய அரசு கால தாமதம் செய்யாமல் நீட் தேர்வினை ரத்து செய்ய வேண்டும் என்றும் விஜய் வலியுறுத்தினார்.

News July 3, 2024

அசாமை புரட்டிப்போட்ட மழை, வெள்ளம்: 38 பேர் பலி

image

அசாமில் கன மழை, வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது. அம்மாநிலத்தின் 28 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 11 லட்சத்து 34 ஆயிரம் பேர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். 489 நிவாரண முகாம்களில் சுமார் 3 லட்சம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பிரம்ம புத்திரா ஆற்றில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் கரைபுரள்வதால், அசாம் மக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

News July 3, 2024

நீட் தேர்வால் வந்த 3 பிரச்னைகள்: விஜய்

image

நீட் தேர்வு 3 பிரச்னைகளை உருவாக்கியிருப்பதாக விஜய் பேசியிருக்கிறார்.

* நீட் தேர்வால் மாநில உரிமைகள் பறிபோகிறது
* ஒரே நாடு, ஒரே பாடத்திட்டம், ஒரே தேர்வு என்பது கல்வி கற்கும் நோக்கத்திற்கே எதிராக உள்ளது.
* முறைகேடுகளால், நீட் தேர்வு மீது இருந்த மக்களின் நம்பகத்தன்மை போய்விட்டது. ஆகையால் நாடு முழுக்க நீட் தேர்வு தேவையில்லை என்ற நிலை உருவாகியிருக்கிறது. இதற்கு ஒரே தீர்வு ‘நீட் விலக்கு’ மட்டும்தான்

News July 3, 2024

கல்வி உரிமையை மீட்க திமுக என்ன செய்தது?

image

மத்திய அமைச்சரவையில் 18 ஆண்டுகள் இடம்பெற்ற திமுக, கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர என்ன செய்தது என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். ஆட்சியில் இல்லாதபோது, கல்வி உரிமைக்கு திமுக குரல் கொடுக்கும் எனக் கூறிய அவர், அதிகாரத்தில் இருக்கும்போது பேசாது என்றார். மேலும், மாநில உரிமைகளைப் பறித்த இந்திரா காந்தியுடன் வெட்கமில்லாமல் கூட்டணி வைத்த கட்சி திமுக எனவும் சாடினார்.

News July 3, 2024

புதிய குற்றவியல் சட்டங்களின் முக்கிய அம்சங்கள் (2/2)

image

*சோதனைகளை வீடியோ பதிவாக எடுக்க வேண்டும். *பெண்ணை திருமணம் செய்வதாகக் கூறி உடலுறவில் ஈடுபட்டு ஏமாற்றினால் 10 ஆண்டு சிறை. *முதல்கட்ட விசாரணை முடிந்து 60 நாள்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் *நீதிமன்ற நடைமுறையை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்கவும், விசாரணை முடிந்த 45 நாள்களுக்குள் தீர்ப்பு வழங்குவதையும் உறுதிசெய்வது *காவல்நிலைய விசாரணையில் இருந்து பெண்கள், முதியவர்கள் & சிறார்களுக்கு விலக்கு.

error: Content is protected !!