news

News July 3, 2024

மனைவியின் நடிப்பை பாராட்டிய கணவன்

image

கல்கி 2898 AD படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த தீபிகா படுகோனை, அவரது கணவர் ரன்வீர் சிங் பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது இன்ஸ்டா பதிவில், “படத்தின் ஒவ்வொரு நொடியையும் தங்களது கண்ணியமிக்க நடிப்பால் உயர்த்தியுள்ளீர்கள். உங்களது நடிப்பின் கவிதைத்தன்மை, விறுவிறுப்பினால் கவர்ந்துள்ளீர்கள். உங்களை எதனுடனும் ஒப்பிட முடியாது. ஐ லவ் யூ” எனக் குறிப்பிட்டுள்ளார்.

News July 3, 2024

அடுத்த 20 ஆண்டுகளுக்கு பாஜக ஆட்சிதான்: மோடி

image

கடந்த 10 ஆண்டுகளை விட அடுத்துவரும் 5 ஆண்டுகள் எங்களது ஆட்சி சிறப்பாக இருக்கும் என்று பிரதமர் மோடி மாநிலங்களவையில் பேசினார். சர்வதேச அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்திருப்பதாக கூறிய அவர், அடுத்த 20 ஆண்டுகளுக்கு பாஜகதான் ஆட்சியில் இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். தற்போது பொருளாதாரத்தில் 5ஆவது இடத்தில் இருக்கும் இந்தியா, 3ஆவது இடத்திற்கு முன்னேறும் என்றும் அவர் பேசினார்.

News July 3, 2024

மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு

image

நாடாளுமன்ற மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அதனை எதிர்த்து எதிர்க்கட்சியினர் முழக்கத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பொய் சொல்வதை நிறுத்துங்கள் என்றும் உண்மைக்கு மாறாக பேச வேண்டாம் என்றும் அவர்கள் பிரதமரை நோக்கி முழக்கங்களை எழுப்பினர். இதனையடுத்து அவர்கள் அனைவரும் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

News July 3, 2024

விஜய்க்கு நன்றி தெரிவித்த அரசியல் தலைவர்கள்

image

தவெக சார்பில் நடத்தப்பட்ட கல்வி விருது வழங்கும் விழாவில் பேசிய விஜய், தனது நீட் தேர்வு எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதனை வரவேற்று, திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்தும் நன்றியும் தெரிவித்துள்ளனர்.

News July 3, 2024

அரசியல் சாசனத்தை புனிதமாக கருதுகிறேன்: மோடி

image

தங்களது ஆட்சி கலங்கரை விளக்கம் போல இருக்கும் என்று பிரதமர் மோடி மாநிலங்களவையில் பேசினார். அரசியல் சாசனத்தை புனிதமாக கருதுவதாகவும், அதனை எழுதிய அம்பேத்கரின் தத்துவத்தை புனிதமாக கருதுவதாகவும் அவர் உரையாற்றினார். முன்னதாக, 60 ஆண்டுகளுக்கு பின் ஒரே கட்சி மூன்றாவது முறையாக ஆட்சியமைத்திருக்கிறது என்று பேசிய அவர், அதனை சிலர் ஏற்க மறுப்பதாக காங்கிரஸ் கட்சியை சாடினார்.

News July 3, 2024

நீட் தேர்வை ரத்து செய்ய விட மாட்டார்கள்: விஜய்

image

நீட் தேர்வால் ஏற்படும் பிரச்னைகளுக்கு அதனை ரத்து செய்வதே ஒரே தீர்வு என்று தவெக தலைவர் விஜய் பேசினார். மேலும், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்திய அவர், இவற்றையெல்லாம் நான் பரிந்துரை மட்டுமே செய்கிறேன் என்றார். இவையெல்லாம் உடனே நடக்க வாய்ப்பில்லை, நடக்கவும் விட மாட்டார்கள் என்று அழுத்தமாக பேசி அரசியல் பஞ்ச் கொடுத்தார்.

News July 3, 2024

யார் இந்த போலே பாபா? (2/2)

image

1990களின் பிற்பாதியில் இவரது சமய சொற்பொழிவுகளில் மயங்கி ஹரியானா, உத்தரகண்ட், ராஜஸ்தான் உள்ளிட்ட பல வட மாநிலங்களில் பல அப்பாவி மக்கள் இவரை பின்பற்றுபவர்களாக உள்ளனர். ஆன்மிகத்தில் இருந்தாலும், மத அடையாளத்தை வெளிக்காட்டாத இவருக்கு அரசியல் கட்சிகளுடனும் தொடர்புள்ளது. அவ்வபோது அரசியல் தலைவர்களை சந்திப்பதையும் வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார். இவர் மீது பல குற்ற வழக்குகளும் உள்ளதாக கூறப்படுகிறது.

News July 3, 2024

யார் இந்த போலே பாபா? (1/2)

image

ஹாத்ரஸில் 161 பேர் உயிரிழக்க முக்கிய காரணம் என போலே பாபாவை பலரும் குறிப்பிடுகின்றனர். யார் இந்த போலே பாபா? உ.பி., மாநிலத்தின் எடா மாவட்டத்தை சேர்ந்தவர் இவரது இயற்பெயர் நாராயண் சகார் ஹரி. கல்வியை முடித்த கையோடு பாபா உளவுத்துறையில் பணியாற்றியதாக கூறப்படுகிறது. (சான்றுகள் இல்லை.) ஆன்மிகத்தில் நாட்டம் கொண்ட பாபா, தனது அரசுப் பணியை ராஜினாமா செய்துவிட்டு முழுநேர ஆன்மிகப் பணியில் ஈடுபட்டுள்ளார்.

News July 3, 2024

‘போலே பாபா’ தலைமறைவு

image

உ.பியில் மத வழிபாட்டு கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மத போதகர் நாராயண் சாகர் விஷ்வ ஹரி எனும் ‘போலே பாபா’ உள்பட பலர் தலைமறைவாகியுள்ளனர். ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி என 80,000 பேருக்கு மட்டுமே அனுமதி வாங்கியதாகவும், ஆனால் கூட்டத்தில் 2.5 லட்சம் பேர் பங்கேற்றதாகவும் அவர்கள் மீதான எஃப்ஐஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

News July 3, 2024

NDA வெற்றியை இருட்டடிப்பு செய்ய முயற்சி: மோடி

image

நேற்று மக்களவையில் பேசிய பிரதமர் மோடி, இன்று மாநிலங்களவையில் உரை நிகழ்த்தினார். முதற்கட்டமாக, குடியரசுத் தலைவர் உரையின் மீது தங்களது கருத்துகளை தெரிவித்த மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். தேசிய ஜனநாயகக் கூட்டணியை நம்பியே மக்கள் மூன்றாவது முறையாக வாய்ப்பளித்திருப்பதாக கூறிய மோடி, தங்களது வெற்றியை இருட்டடிப்பு செய்ய முயற்சிகள் நடப்பதாக சாடினார்.

error: Content is protected !!