India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகம் முழுவதும் உள்ள பானிபூரி கடைகளில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். சென்னையில் விற்கப்படும் பானிபூரிகளில், புற்றுநோயை வரவழைக்கும் நிறமிகள் சேர்க்கப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து பானிபூரி விற்கும் கடைகளில் ஆய்வு செய்ய அரசு நேற்று உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஆய்வு செய்துவரும் அதிகாரிகள், பானிபூரியின் தரம் குறித்து சோதித்து வருகின்றனர்.
அமெரிக்க ஐ.டி.எஃப்., தொடரில் இந்திய வீராங்கனை சஹாஜா யமலபள்ளி கோப்பையை வென்றுள்ளார். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மகளிருக்கான டென்னிஸ் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில், அவர், அமெரிக்காவின் அமி ஜூவுடன் மோதினார். இதில் சஹாஜா 6-4, 7-6 என நேர் செட்டில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார். புரோ டென்னிஸில் சானியா, கர்மானுக்குப் பின் கோப்பை வென்ற 3ஆவது இந்திய வீராங்கனை என்ற பெருமையை அவர் தானதாக்கியுள்ளார்.
நீட் தேர்வு முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்று தவெக தலைவர் விஜய் இன்று குரல் கொடுத்தார். ஏற்கெனவே திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், அதிமுக, தேமுதிக, பாமக என அனைத்து முன்னணி கட்சிகளுமே நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டுள்ளனர். இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் நீட் தேர்வுக்கு ஆதரவான நிலைப்பாடு கொண்ட ஒரே கட்சி பாஜக மட்டும்தான்.
18ஆவது மக்களவையின் முதல் கூட்டத்தொடர், ஜூன் 24ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. அலுவல்கள் முடிந்ததும் ஒரு நாளுக்கு முன்னதாகவே நேற்றைய தினம் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பிரதமர் மோடி இன்று பதிலளித்தார். அதையடுத்து மாநிலங்களவை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இனி பட்ஜெட் தாக்கலின் போது நாடாளுமன்றம் கூடும்.
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. அதேநேரத்தில், கேப்டன் ரோஹித் ஷர்மாவும், விராட் கோலியும் டி20 போட்டிகளில் ஓய்வை அறிவித்தனர். புயல் காரணமாக மேற்கிந்திய தீவுகளில் உள்ள இந்திய அணி தாயகம் திரும்புவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், நாளை அதிகாலை நாடு திரும்புகிறது. இந்நிலையில், நாளை முற்பகல் 11 மணிக்கு கோப்பையுடன் வரும் இந்திய அணியை பிரதமர் மோடி சந்திக்க உள்ளார்.
நடிகர் அஜித்தின் மனைவியும், நடிகையுமான ஷாலினி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து, ஆஜர்பைஜானில் விடாமுயற்சி படப்பிடிப்பில் இருந்த அஜித் அவசரமாக சென்னை திரும்பியதாக கூறப்படுகிறது.
விராட் கோலி, ரோஹித் ஷர்மா ஒரே நேரத்தில் ஓய்வை அறிவித்தது, தனக்கு அதிர்ச்சியளிப்பதாக முகமது ஷமி தெரிவித்துள்ளார். இந்தியாவிற்காக 10-15 ஆண்டுகளாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி KING என பெயர் எடுத்தவர்கள் எனவும், அவர்களுக்கு மாற்று வீரர்களை தேர்ந்தெடுப்பது சவாலான காரியம் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், கோப்பையை வென்ற பிற்கு ஓய்வை அறிவித்தது நெகிழ்ச்சியான தருணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பான் இந்தியா ஸ்டார் பிரபாஸுடன் திஷா பதானி டேட்டிங் செய்து வருவதாக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இதற்கு வலுசேர்க்கும் விதமாக, திஷா பதானி அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த புகைப்படத்தினை ரசிகர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். அந்த படத்தில், அவரது கையில் ‘P.D’ என பச்சை குத்தியிருப்பது தெரிகிறது. இதனை ‘பிரபாஸ் & திஷா’ என்பதன் சுருக்கமென பலரும் அனுமானத்தின் அடிப்படையில் கூறிவருகின்றனர்.
ஊழலை ஒழிப்பதே தமது இலக்கு, தீர்மானம் என்று, பிரதமர் மோடி சூளுரைத்துள்ளார். ஊழல் என்பது, நாட்டை அரிக்கும் கரையான்கள் போன்றது என குறிப்பிட்ட அவர், ஊழலை வெறுக்கும் மனநிலையை மக்கள் மனதில் ஏற்படுத்தவே, தாம் முழு வீச்சில் போராடுவதாகவும் தெரிவித்துள்ளார். ஊழல் எதிர்ப்பு என்பது, தேர்தலில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் ஒரு அளவீடாக கருதவில்லை என்றும் பிரதமர் கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 65 பேர் உயிரிழந்த விவகாரம் தமிழகத்தையே உலுக்கியது. இதனிடையே, உயிரிழந்தவர்கள் குடித்தது சாராயம் அல்ல, வெறும் மெத்தனால் கலந்த தண்ணீர் என்பது சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில், அந்த தண்ணீரில் 29.5% மெத்தனால் கலக்கப்பட்டது ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. தண்ணீரில் 4.5% மெத்தனால் கலந்திருந்தாலே அது உயிரை பறிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.