news

News July 3, 2024

பரந்தூர் போராட்டக்காரர்கள் கைதுக்கு தினகரன் கண்டனம்

image

பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு கண்டனம் தெரிவித்த அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், “அறவழியில் உண்ணாவிரதம் மேற்கொண்டவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளனர். வாழ்வாதாரத்திற்கு போராடும் மக்களை ஒடுக்கும் திமுக அரசின் ஜனநாயக விரோதப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

News July 3, 2024

மது போதையும், மத போதையும் ஒன்று தான்: வைரமுத்து

image

உ.பி.யில் மதவழிபாட்டின் போது உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கவிஞர் வைரமுத்து எக்ஸ் பக்கத்தில், “ஆன்மிக நெரிசலில் இறந்த அத்துணை உயிர்களுக்கும் அஞ்சலி செலுத்துகிறேன். மது போதைக்கும் மத போதைக்கும் உள்ளது பூவுக்கும் புஷ்பத்துக்கும் உள்ள வேறுபாடு தான். கல்வி, பொருளாதாரம், பகுத்தறிவில் மேம்படாத தேசம் இப்படித்தான் தவணை முறையில் இறந்து கொண்டிருக்கும்” என பதிவிட்டுள்ளார்.

News July 3, 2024

3 ஆண்டுகளில் 31,000 பெண்களை காணவில்லை

image

மத்தியப் பிரதேசத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 31,000க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு நாளும் சராசரியாக 28 பெண்கள் மற்றும் 3 சிறுமிகள் காணாமல் போவதாக தெரியவந்துள்ளது. அதே நேரம், 724 வழக்குகள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளன. உஜ்ஜயினியில் 676 பெண்கள் காணாமல்போன நிலையில், ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை.

News July 3, 2024

அப்போது ஜிஎஸ்டி… இப்போது நீட்…

image

நீட் தேர்வுக்கு எதிராக தவெக தலைவர் விஜய் பேசியது, பாஜகவினரை கோபமடைய செய்துள்ளது. அரசியலில் அடியெடுத்து வைத்துள்ள அவர், தங்களுக்கு ஆதரவாக செயல்பட வாய்ப்பிருப்பதாக பாஜகவினர் கூறி வந்தனர். ஆனால், அந்த எதிர்பார்ப்பை தவிடு பொடியாக்கியுள்ளார் விஜய். முன்னதாக, ‘மெர்சல்’ படத்தில் ஜிஎஸ்டி குறித்து பேசி, பாஜகவினரின் வெறுப்பை சம்பாதித்த அவர், தற்போது நீட் தேர்வுக்கு எதிராக பேசியுள்ளார்.

News July 3, 2024

FIR-ல் சேர்க்கப்படாத போலே பாபா பெயர்

image

உத்தரபிரதேசத்தில் நேற்று நடைபெற்ற ஆன்மிக நிகழ்ச்சியில், கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்தனர். இந்த மரணங்களுக்கு 80 ஆயிரம் பேருக்கு அனுமதி பெற்று, 2.50 லட்சம் பேரை வரவழைத்தது தான் காரணம் என தெரியவந்துள்ளது. இதையடுத்து நிகழ்ச்சி நடத்திய சாமியார் போலே பாபா தலைமறைவானார். இந்நிலையில், போலீசாரின் FIR-ல் போலே பாபா பெயர் சேர்க்கப்படாதது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

News July 3, 2024

இந்திய அணிக்கு பிரமாண்ட பாராட்டு விழா

image

டி20 உலகக்கோப்பையுடன் இந்திய அணி நாளை அதிகாலை நாடு திரும்புகிறது. தாயகம் திரும்பும் வீரர்களுக்கு பிரமாண்ட வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி நாளை முற்பகல் 11 மணிக்கு இந்திய அணி வீரர்களை சந்திக்க உள்ளார். மும்பையில் திறந்தவெளி பேருந்து மூலம் வீரர்களை பேரணியாக அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை மாலை 4 மணிக்கு வான்கடே மைதானத்தில் பாராட்டு விழா நடைபெற உள்ளது.

News July 3, 2024

ஜிகா வைரஸ்: மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை

image

மகராஷ்டிராவில் ஜிகா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதால், மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கர்ப்பிணிகள், குழந்தைகளை தீவிரமாக பரிசோதித்து கண்காணிக்க அறிவுறுத்தியுள்ள மத்திய சுகாதாரத்துறை, இந்த விவகாரத்தில் மாநில அரசுகள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் இதுவரை 8 பேர் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

News July 3, 2024

அமைதி திரும்ப நடவடிக்கை: பிரதமர்

image

மணிப்பூரில் அமைதி திரும்ப மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து மாநிலங்களவையில் பேசிய அவர், இதுவரை 11 ஆயிரம் FIR-கள் பதிவு செய்யப்பட்டு, 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும், அங்கு கல்வி நிறுவனங்களும், அலுவலகங்களும் தற்போது திறக்கப்பட்டுள்ளதாகவும், உள்துறை அமைச்சர் பல வாரங்கள் அங்கு தங்கி இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

News July 3, 2024

கீர்த்தி சுரேஷ் படத்தில் அட்லி, சல்மான் கான்

image

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த ‘தெறி’ திரைப்படம், தற்போது பாலிவுட்டில் ‘பேபி ஜான்’ என்ற பெயரில் உருவாகி வருகிறது. வருண் தவான் கதாநாயகனாகவும், கீர்த்தி சுரேஷ் மற்றும் வாமிகா கபி கதாநாயகிகளாகவும் நடித்து வருகின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு படம் வெளியாக உள்ளது. இந்நிலையில், சல்மான் கான், அட்லி ஆகியோர் படத்தில் கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

News July 3, 2024

அதிமுக தொண்டர்களின் வாக்கு யாருக்கு?

image

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளதால், அக்கட்சியினரின் வாக்குகளை பெற திமுக, பாமக, நாதக ஆகிய கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. பாமகவின் பேனர்களில் ஜெயலலிதாவின் புகைப்படம் இடம்பெற்றதோடு, அன்புமணி நேரடியாகவே அதிமுகவினரின் ஆதரவை கோரியுள்ளார். இதே போல, அமைச்சர் எ.வ.வேலு, சீமான் ஆகியோரும் ஆதரவை கேட்டுள்ளனர். ஆனால், அதிமுகவினரின் ஆதரவு யாருக்கு என்பது தேர்தல் முடிவிலேயே தெரியவரும்.

error: Content is protected !!