India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஹத்ராஸ் உயிரிழப்புக்கு மாநில அரசின் அலட்சியமே காரணம் என அம்மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார். மாநில அரசு இந்த விவகாரத்தை முறையாக அணுகவில்லை என்று குற்றம்சாட்டிய அவர், அப்பாவி மக்கள் தங்களின் உயிரை இழந்துள்ளதாகவும் வேதனை தெரிவித்துள்ளார். மேலும், காயம் அடைந்தவர்களுக்கு முறையான சிகிச்சை கிடைக்காததால் உயிரிழப்பு அதிகரித்து வருவதாகவும் கூறியுள்ளார்.
121 பேரை பலிகொண்ட ஹத்ராஸ் நெரிசல் சம்பவம் தொடர்பாக, நீதி விசாரணைக்கு, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான இக்குழுவில், அரசு அதிகாரிகள், காவல் அதிகாரிகளும் இடம்பெறுவர் என்றும் அறிவித்துள்ளார். ஹத்ராஸ் சம்பவத்தில் உத்தரபிரதேசம் மட்டுமின்றி, ஹரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தை சேர்ந்த பக்தர்களும் உயிரிழந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களை கொண்டு முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தனது கனவு அணியை உருவாக்கியுள்ளார். ரோஹித் ஷர்மா (கேப்டன்), குர்பாஸ், நிக்கோலஸ் பூரன், சூர்யகுமார் யாதவ், ஹென்ரிச் கிளாசென், ஹர்திக் பாண்டியா. ரஷித் கான், ரிஷாத் ஹுசைன், ஜஸ்பிரித் பும்ரா, ஃபசல்ஹாக் ஃபரூக்கி, அர்ஷ்தீப் சிங் உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் ‘கூலி’ படத்தில் நடிக்கிறார். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விரைவில் தொடங்க உள்ளது. இதுவரை நடிகர் சத்யராஜ் மட்டுமே படக்குழுவில் இணைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் முன்னதாக கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தில் லோகேஷுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.
கோவை, நெல்லை மேயர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக கவுன்சிலர்களுக்கு இடையே மோதல் போக்கு இருந்து வந்த நிலையில், பிரச்னை குறித்து கட்சி தலைமை விசாரித்தாக கூறப்படுகிறது. கட்சியினர் மற்றும் அதிகாரிகளிடம் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், இருவரையும் ராஜினாமா செய்ய திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, இருவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
நெல்லை மாநகராட்சி திமுக மேயர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். நெல்லை மாவட்ட திமுக கவுன்சிலர்கள் மற்றும் நிர்வாகிகள், சரவணன் மீது அடுக்கடுக்கான புகார்களை தலைமையிடம் கூறியதாக தகவல் வெளியானது. இந்நிலையில், மேயர் பதவியில் இருந்து விலகுவதாகக் கூறியுள்ள அவர், தனது ராஜினாமா கடிதத்தையும், மாநகராட்சி ஆணையரிடம் வழங்கினார். முன்னதாக, கோவை ஆணையர் கல்பனாவும் ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.
வங்கி கணக்கு தொடங்கி டீமேட் கணக்கு வரை PAN கார்டு பயன்படுத்தப்படுகிறது. வங்கியில் ₹50,000க்கு மேல் பணம் அனுப்புவதற்கும் PAN கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தவிர, கடன்களுக்கு விண்ணப்பிக்கவும், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு பெறவும் PAN கார்டு எண் கட்டாயமாகும். ஒருவர் தன் வாழ்நாளில் ஒரே ஒரு PAN கார்டு மட்டுமே பெற முடியும். பணபரிவர்த்தனையை கண்காணிக்க PAN கார்டு பயன்படுகிறது.
ஊழல்வாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறை போன்ற விசாரணை ஏஜென்சிகளுக்கு சுதந்திரம் அளித்துள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். ஊழலுக்கு எதிரான எந்தவொரு சலுகையும் காட்டக் கூடாது என்பதே மத்திய அரசின் நோக்கம் எனக் கூறிய அவர், விசாரணைகளில் அரசு ஒருபோதும் தலையிடாது என்றார். அத்துடன், ஊழல்வாதிகள் சட்டத்தில் இருந்து தப்பிக்க முடியாது என்பது மோடி அரசின் கேரண்டி எனத் தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் குடிநீர் சுத்திகரிப்புக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. டெங்கு, மலேரியா காய்ச்சலை தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தியுள்ள பொது சுகாதாரத்துறை, உள்ளாட்சி அமைப்புகள் மூலம் மக்களுக்கு விநியோகம் செய்யப்படும் குடிநீரின் தரத்தை அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
உறுதியான எலும்புகளுக்கு கால்சியம் சத்து மிகவும் அவசியம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அதற்கு பால், தயிர், பீட்ரூட், எள், திராட்சை, முட்டை, மீன், முருங்கைக் கீரை, பேரிட்சை, கேழ்வரகு, முந்திரி ஆகிய கால்சியம் நிறைந்த உணவுகளை தினமும் சாப்பிட பரிந்துரைக்கின்றனர். மேலும், அதிகாலை வெயில் மற்றும் மாலை இளவெயிலில் சிறிது நேரம் நடைப்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் வைட்டமின் டி-யை பெறலாம் என்கிறார்கள்.
Sorry, no posts matched your criteria.