news

News July 3, 2024

விஜய்க்கு பாஜக கண்டனம்

image

நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது என்றும், OBC, SC, ST மாணவர்களை அதிகம் பாதிப்பதாகவும் நடிகரும், தவெக தலைவருமான விஜய் பேசி இருந்தார். இந்நிலையில், நீட் தேர்வை எதிர்க்கும் அரசியல் கட்சிகளுடன் விஜய் இணைந்துள்ளதாகவும், தமிழக மாணவர்கள் வரவேற்கும் நீட் தேர்வுக்கு எதிராக, திமுகவின் தீர்மானத்தை விஜய் ஆதரிப்பது வேடிக்கையானது என்றும் பாஜக துணைத்தலைவர் கரு.நாகராஜன் விமர்சித்துள்ளார்.

News July 3, 2024

புதுச்சேரி பாஜக-என்.ஆர்.காங்., கூட்டணியில் விரிசல்?

image

புதுச்சேரியில், பாஜக – என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக டெல்லி சென்றுள்ள பாஜக எம்எல்ஏ.க்கள், என்.ஆர்.காங்.க்கு வழங்கிவரும் ஆதரவை வாபஸ் பெறுமாறு ஜெ.பி. நட்டாவிடம் வலியுறுத்தியதாக தெரிகிறது. பட்ஜெட் உள்ளிட்ட விஷயங்களை, முதல்வர் ரங்கசாமி தங்களுடன் ஆலோசிக்கவில்லை என பாஜக எம்எல்ஏ கல்யாண சுந்தரம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

News July 3, 2024

எனது கருத்தில் உள்நோக்கம் இல்லை: ஆர்.எஸ்.பாரதி

image

நீட் எதிர்ப்பு போராட்டத்தில் ‘நாய் கூட பி.ஏ படிக்கிறது’ என்று தான் பேசியதில் உள்நோக்கமும் இல்லை என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். ஒரு காலத்தில், சில பிரிவினருக்கு மட்டுமே கிடைத்த கல்வி, அனைவருக்கும் கிடைக்க காரணம் திராவிட இயக்கம்தான் என்பதே தனது பேச்சின் நோக்கம் என்று கூறியுள்ளார். ஆர்.எஸ்.பாரதியின் சர்ச்சை கருத்துக்கு அதிமுக, பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

News July 3, 2024

மார்க்கெட் உச்சத்தில் சிவகார்த்திகேயன்?

image

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு அடுத்தடுத்த படங்கள் வரிசை கட்டி காத்திருப்பதாக திரை வட்டாரங்கள் கூறுகின்றன. ‘G.O.A.T’ படத்தை தொடர்ந்து, சிவகார்த்திகேயன் படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளதாக தெரிகிறது. மற்றொரு புறம், சிபி சக்கரவர்த்தி அவருக்காக ஸ்க்ரிப்ட் தயார் செய்து வருவதாகவும், ‘குட் நைட்’ இயக்குநர் விநாயக், சுதா கொங்கரா ஆகியோரும் ஒன் லைன் சொல்லி ஓகே வாங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

News July 3, 2024

ராஜினாமா செய்ய மறுக்கும் சம்பாய் சோரன்?

image

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் JMM தலைவர் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை ஜனவரி மாதம் கைது செய்தது. இதை தொடர்ந்து, அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், ஜார்கண்ட் உயர் நீதிமன்றம் தற்போது ஜாமின் வழங்கியுள்ளதை அடுத்து, அவர் மீண்டும் முதல்வர் பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் சம்பாய் சோரன், முதல்வர் பதவியை விட்டுத்தர மறுப்பதாக கூறப்படுகிறது.

News July 3, 2024

நெல்லை, கோவை மேயர்களை அடுத்து யார்?

image

நெல்லை, கோவை மேயர்களை போன்று, மதுரை, காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர்கள் மீதும் பல்வேறு புகார்கள் எழுந்தன. திமுக தலைமை அவர்களை அழைத்து எச்சரிக்கை விடுத்து அனுப்பியதாக கூறப்படுகிறது. அவர்கள் மட்டுமல்லாமல், 14 பேரூராட்சி தலைவர்கள், 7 நகராட்சி தலைவர்கள் லிஸ்டில் இருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு பிறகு ராஜினாமா பட்டியல் நீளும் என்கிறார்கள்.

News July 3, 2024

மீண்டும் முதல்வராகும் சோரன்?

image

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிறையில் இருந்த ஹேமந்த் சோரனுக்கு, சமீபத்தில் ஜாமின் வழங்கப்பட்டது. அவரது இல்லத்தில் இன்று நடந்த ஆலோசனைக்கூட்டத்தில், JMM சட்டமன்றக்குழு தலைவராக தேர்வானதால், அவர் மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய முதல்வர் சம்பாய் சோரன் இன்றிரவு 8 மணிக்கு ராஜினாமா செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

News July 3, 2024

சஞ்சு உள்ளே, பண்ட் வெளியே?

image

டெஸ்ட் போட்டிகளில் ரிஷப் பண்ட் சிறப்பாக ஆடினாலும், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அவரது செயல்பாடு நம்பிக்கை அளிக்கவில்லை என கவுதம் கம்பீர் முன்பு கூறியிருந்தார். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கம்பீர் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ள நிலையில், பண்ட்டுக்கு பதிலாக சஞ்சு சாம்சன் ஒருநாள், டி20-களில் சேர்க்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. சாம்சனுக்கு கம்பீர் ஆதரவாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

News July 3, 2024

கவிதா, சிசோடியா காவல் நீட்டிப்பு

image

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ்வின் மகள் கவிதா, கடந்த மார்ச் 15ஆம் தேதி கைதானார். முன்னதாக, இதே வழக்கில் டெல்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவும் கைதானார். திகார் சிறையிலுள்ள இருவருக்கும் இன்றுடன் நீதிமன்ற காவல் நிறைவடையும் நிலையில், வரும் 25ஆம் தேதி வரை காவலை நீட்டித்து, டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News July 3, 2024

ஜிகா வைரஸை தடுக்க என்ன செய்யலாம்?

image

ஜிகா வைரஸ் ஏடீஸ் வகை கொசு மூலம் பரவுகிறது. இதனால், கொசு விரட்டியை பயன்படுத்தவும், முழுக்கை சட்டைகளை அணியவும், ஜன்னல், கதவுகளை மூடிவைக்கும்படியும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர். வாளி, பூத்தொட்டிகளில் தேங்கியிருக்கும் தண்ணீரை அப்புறப்படுத்த வலியுறுத்துகின்றனர். ஜிகா வைரஸ் பாதித்தால் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புள்ளதால், கர்ப்பிணிகள் எச்சரிக்கையோடு இருக்கும்படி கூறுகின்றனர்.

error: Content is protected !!