India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாய் கூட பிஏ பட்டம் வாங்குகிறது என்று கூறி, மாணவ சமுதாயத்தையே ஆர்.எஸ்.பாரதி அவமதித்துவிட்டதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். கள்ளச்சாராயத்தால் 65 பேர் பலியானதை மடைமாற்ற ஆர்.எஸ்.பாரதியை திமுக களமிறக்கியுள்ளதாக விமர்சித்த அவர், பொதுமக்களிடம் திமுகவுக்கு எதிர்ப்பு வரும்போதெல்லாம் இதே போன்று அவர் கீழ்த்தரமாக பேசுவதாக தெரிவித்துள்ளார்.
19 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு தவெக சார்பில் கல்வி விருது வழங்கும் விழா இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட விஜய் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இதில் பேசிய விஜய், மாணவர்கள் மகிழ்ச்சியாக படிக்க வேண்டும் என்றும், நிறைய வாய்ப்புகள் கொட்டி கிடப்பதாகவும் கூறினார். இந்நிகழ்ச்சியில் மாணவிகள் சிலர் அவருக்கு பூக்கள் கொடுத்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மாணவர்களை நாங்கள் படிக்க சொல்கிறோம், தமிழக ஆட்சியாளர்கள் குடிக்க அழைக்கிறார்கள் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார். விக்கிரவாண்டியில் பேசிய அவர், தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு சாராயத்துடன், கஞ்சாவையும் கொடுத்து கெடுத்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுத்தால் வன்னியர்கள் அதிகம் இருப்பது தெரிந்துவிடும் என்று சிலர் அஞ்சுகிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
2, 11, 20 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் 2ஆம் எண் ஆதிக்கம் கொண்டவர்கள் என எண் கணித ஜோதிடர்கள் கூறுகின்றனர். ஆளுமைத் திறன், பிறர் நலனில் அக்கறை, உணர்ச்சிவயப்படுதல் ஆகிய பண்புகளை கொண்டிருப்பார்கள் எனவும், பொறுமையானவர்கள் என்றும் கூறப்படுகிறது. இதனால், யாருடனும் எளிதில் பழகக்கூடியவர்களாக இருப்பார்கள். இசை, ஊடகம், சமையல், ஓவியம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்குவார்கள்.
நீங்கள் நிம்மதியாக தூங்க முடியாமல் இரவில் கஷ்டப்படுகிறீர்கள் என்றால், அதற்கு வாஸ்து காரணமாக இருக்கலாம் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். வாஸ்து சாஸ்திரத்தின்படி, தெற்கு மற்றும் கிழக்கு திசை நோக்கி தலை வைத்து தூங்குவது சிறந்த முறையாக பரிந்துரைக்கப்படுகிறது. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, தரமான தூக்கத்தை தரும் என்கிறார்கள். ஆனால், வடக்கு நோக்கி தலை வைத்து படுப்பதை தவிர்க்கும்படி அறிவுறுத்துகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரண விவகாரத்தில், வன்முறை தொடர்பான விசாரணையை 4 மாதத்திற்குள் முடிக்க விசாரணை அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், பள்ளியில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை மீட்கவும், 4 மாதங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யவில்லை என்றால் மனுதாரர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம் என்றும் நீதிபதி ஆணையிட்டுள்ளார்.
ஜார்கண்ட் முதல்வர் பதவியை, சம்பாய் சோரன் ராஜினாமா செய்துள்ள நிலையில் புதிய முதல்வராக ஹேமந்த் சோரன் விரைவில் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று நடைபெற்ற ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஹேமந்த் சோரன், சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கான கடிதத்தை, ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் வழங்கிய அவர், ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
தமிழ்நாடு நாள் விழாவையொட்டி, 6-12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரைப் போட்டிகள் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ் வளர்ச்சி இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நவ.1 தமிழ்நாடு நாள் கொண்டாடப்படுவதால், ஜூலை 18இல் அனைத்து மாவட்டங்களிலும் மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தஅஆஅ
நடிகர் சூர்யா தற்போது கங்குவா படத்தில் நடித்து வரும் நிலையில், அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில், அவரது பிறந்தநாளான ஜூலை 23 அன்று இந்த 2 படங்கள் குறித்த அப்டேட் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கங்குவா படத்தின் டீசர் அல்லது முதல் பாடல் வெளியீடு குறித்த அறிவிப்பு மற்றும் சூர்யா – 44 படத்தின் டைட்டிலுடன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேசும்போது எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்ததற்கான காரணத்தை மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். காங்கிரஸ் அரசியலமைப்பை எதிர்ப்பதாக பிரதமர் பேசியதாகவும், அவரின் இயல்பே பொய் சொல்வதும், மக்களை திசைதிருப்புவதும்தான் என்றும் கார்கே விமர்சித்துள்ளார். மேலும், அரசியலமைப்பு சாசனம் உருவாக்கப்பட்டபோது அம்பேத்கர் உருவ பொம்மையை எரித்தவர்கள் தான் அவர்கள் எனவும் பேசியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.