India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, சிறுநீரகம் தொடர்பான உபாதை காரணமாக கடந்த வாரம் அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து, சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இந்நிலையில், மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து சாம்பியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில், இந்திய சாம்பியன்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய கெவின் பீட்டர்சன் தலைமையிலான இங்கிலாந்து, 4 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்களைச் சேர்த்தது. இயன் பெல் அதிகபட்சமாக 59 ரன்களை சேர்த்தார். அடுத்து விளையாடி இந்தியா,19 ஓவரில் இலக்கை எட்டியது. ராபின் உத்தப்பா 50 ரன்களை எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார்.
X தளத்திற்கு (ட்விட்டர்) மாற்றாக களமிறங்கிய இந்தியாவின் ‘கூ’ சமூக வலைதளத்தின் சேவை நிறுத்தப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்து, அந்நிறுவனத்தின் இணை நிறுவனர் அபர்மேய ராதாகிருஷ்ணா பேசுகையில், மிகப்பெரிய இணையதள நிறுவனத்துடன் இணைந்து செயல்பட வாய்ப்புகளை ஆராய்ந்ததாகவும், அந்த பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படாததாலும், இதன் காரணமாக இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்துள்ளார்.
புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சையை வேகப்படுத்த உதவும் புதிய செயற்கை நுண்ணறிவு (AI) கருவியை ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். ENLIGHT என்ற கருவியுடன் இணைந்து, இந்த கருவி செயல்படுகிறது. மார்பக, நுரையீரல், தலை, கழுத்து, கர்ப்பப்பை வாய் மற்றும் கணைய புற்றுநோய்கள் உட்பட 16 புற்றுநோய் வகைகளில், 5,500 க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு இந்த கருவி மூலம் சிகிச்சை அளித்து சோதிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், தவெக தலைவர் விஜய் பங்கேற்று மாணவர்களுடன் உரையாடினார். இந்த நிகழ்வில் விஜய்யின் தீவிர ரசிகர் ஒருவர் பங்குபெற்று தன்னுடைய 2 மாத பெண் குழந்தைக்குப் பெயர் வைக்குமாறு அவரிடம் கோரிக்கை வைத்தார். அதன் பிறகு, குழந்தையின் பெற்றோருக்கு 3 பெயர்களை பரிந்துரைத்த விஜய், அவர்களின் ஒப்புதலோடு ‘தமிழரசி’ என பெயர் சூட்டியுள்ளார்.
எமிஸ் வலைதளம் மூலம் இலவச பஸ் பாஸுக்கு விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. அரசுப் பள்ளிகளில் 1-12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, தமிழக அரசு பஸ் பாஸ் வழங்குகிறது. நடப்பாண்டு பள்ளிகள் திறக்கப்பட்ட 20 நாள்களான நிலையில், 2024-25 கல்வியாண்டுக்கான இலவச பஸ் பாஸ் தேவைப்படும் மாணவர்கள், எமிஸ் வலைதளம் மூலமாக விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
அர்ஸ்தீப் சிங் பந்து வீச்சுக்கு பத்துக்கு எட்டு மதிப்பெண்கள் தரலாம் என பாக்., அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். அர்ஸ்தீப் சிங் மிக சிறப்பாக பந்துவீசுவதாக தெரிவித்த அவர், டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதில் அவர் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என்றார். நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் அர்ஸ்தீப் சிங் 8 போட்டிகளில் 17 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்திருந்தார்.
பொய் தகவல்களை பிரதமர் மோடி கூறுவதாக திமுக எம்பி. திருச்சி சிவா குற்றம் சாட்டியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் கார்கே பேசுவதற்கு கூட போதிய வாய்ப்பு வழங்கப்படுவதில்லை என்ற அவர், தான் விரும்பும் செய்தி மட்டுமே நாடாளுமன்றத்தில் பேசப்பட வேண்டும் என மோடி விரும்புவதாக விமர்சித்துள்ளார். மாநிலங்களவையில் பிரதமரின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சி எம்பிக்கள் இன்று வெளிநடப்பு செய்தனர்.
நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமியின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலய் சச்தேவ் என்பவரை, உறவினர்கள், நண்பர்கள் புடைசூழ இன்று அவர் திருமணம் செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து சென்னையில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின், உதயநிதி உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். இதேபோல, தமிழ் சினிமா நட்சத்திரங்களும் மணமக்களை வாழ்த்தினர்.
மத்திய பாஜக அரசு, கேபினட் குழுக்களை அறிவித்துள்ளது. முக்கிய நியமனங்களுக்கான கேபினட் குழுவில் பிரதமர் மோடி, அமைச்சர் அமித்ஷா இடம் பெற்றுள்ளனர். பொருளாதார விவகாரங்களுக்கான கேபினட் குழுவில் மஜத தலைவரும், அமைச்சருமான குமாரசாமி இடம்பெற்றுள்ளார். அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவில் பிரதமர் உள்பட 14 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.