India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மத்திய அரசுத்துறைகளில் 17,727 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இரண்டு நிலை தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பதாரர்கள் 18-30 வயதிற்குள் இருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், ஜூலை 24ஆம் தேதிக்குள் https://ssc.gov.in/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன் நடிப்பில் ஜூன் 27ஆம் தேதி வெளியான படம் ‘கல்கி 2898 ஏடி’. படத்திற்கு பாசிடிவ் விமர்சனம் வந்ததையடுத்து வெளியான நாள் முதல் வசூலை குவித்து வருகிறது. வெளியாகி 6 நாள்களில் உலகம் முழுவதும் ₹700 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ள இப்படம், விரைவில் ₹1,000 கோடியை வசூலிக்கும் என கணிக்கப்படுகிறது.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: ஊழியல் ▶அதிகாரம்: ஊழ் ▶குறள் எண்: 373 ▶குறள்: நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும். ▶பொருள்: ஒருவன் நுட்பமான நூல் பலவற்றைக் கற்றாலும் ஊழுக்கு ஏற்றவாறு அவனுக்கு உள்ள தாகும் அறிவே மேம்பட்டுத் தோன்றும்.
உலக லெஜண்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளது பாகிஸ்தான். முதலில் பேட்டிங் செய்த ஆஸி., 20 ஓவரில் 189/7 ரன்கள் எடுத்து. பின்னர் ஆடிய பாக்., அணியில் யூனிஸ் கான் (63), மிஸ்பா உல் ஹக் (46) அதிரடியாக ஆடவே, பாக்., 19.4 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் எடுத்து அபார வெற்றிபெற்றது.
நீட் விலக்கு கோரி தவெக தலைவர் விஜய் பேசியது வரவேற்கத்தக்கது என முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். நீட் தேர்வு வேண்டாம், மாநிலப் பட்டியலுக்கு கல்வி வரவேண்டும் என்பது தான் அதிமுகவின் நிலைப்பாடு என்ற அவர், நல்ல விஷயத்திற்காக விஜய் மட்டுமல்ல, யார் குரல் கொடுத்தால் நல்லதுதான் என்றார். மேலும், நீட் தேர்வு வர காரணமே காங்கிரசும், திமுகவும்தான் என விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அதிகாலை 4 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் எனக் கூறப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா?
இன்று (ஜூலை 4) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், பிரசாந்த், மீனாட்சி சவுத்திரி, சினேகா, லைலா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘GOAT’. இதன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் VFX காட்சிக்கான வேலைகள் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதற்காக இயக்குநர் வெங்கட் பிரபு அமேரிக்கா சென்றுள்ளார். இப்படத்தை செப்டம்பர் 5ஆம் தேதி திரைக்கு கொண்டுவர வேலைகள் நடைபெற்று வருகின்றன.
பிஹாரில் மேலும் ஒரு பாலம் இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 15 நாள்களில் 6 பாலங்கள் இடிந்த நிலையில், இன்று மேலும் ஒரு பாலம் இடிந்து விழுந்துள்ளது. சிவான் மாவட்டத்தில் கண்டகி ஆற்றில் கட்டப்பட்டிருந்த அந்த பாலம், கனமழை காரணமாக இடிந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து பாலங்கள் இடிந்து விழுவதற்கு அம்மாநில எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இன்று (ஜூலை 4) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
Sorry, no posts matched your criteria.