India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அசாமில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கனமழையால் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது. கனமழை காரணமாக மொத்தம் 29 மாவட்டங்களை சேர்ந்த 16 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை 38 ஆக இருந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 8 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன மேலும் 3 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
▶ஜூலை – 04 | ▶ஆனி – 20 ▶கிழமை: வியாழன் | ▶திதி: சதுர்தசி ▶நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM வரை ▶கெளரி நல்ல நேரம்: 12:15 AM – 1:15 AM வரை, 6:30 PM – 7:30 PM வரை ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM வரை ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM வரை ▶குளிகை: 9:00 AM – 10:30 AM வரை ▶சந்திராஷ்டமம்: சித்திரை ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம்
டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் இன்று பிரதமர் மோடியை சந்திக்கின்றனர். விமானம் மூலம் இன்று டெல்லி வரும் இந்திய அணியினர் காலை 11 மணிக்கு பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற உள்ளனர். பின்னர் விமானம் மூலமாக மும்பை கிளம்பி, மாலை வான்கடே மைதானத்தில் ரசிகர்கள் முன் கோப்பையுடன் உலா வர உள்ளனர். இன்று டெல்லி வரும் இந்திய அணியினருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
சிலருக்கு பழங்களை சாப்பிடுவது நல்லதா அல்லது பழங்களை ஜுஸ் செய்து குடிப்பது நல்லதா என சந்தேகம் இருக்கும். இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வில், ஜுஸை காட்டிலும் பழங்களை அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது என தெரிய வந்துள்ளது. பழங்களில் இருப்பது போல பழ ஜுஸிலும் விட்டமின்ஸ், மினரல்ஸ் இருக்கும். ஆனால் பழங்களில் இருக்கும் பைபர் சத்தானது, அதை ஜுஸ் செய்து சாப்பிடுவதால் கிடைக்காது என அந்த ஆய்வு கூறுகிறது.
* கபடம் இல்லாத நாத்திகன் வஞ்சகனை விடச் சிறந்தவன் ஆவான்.
* எவர் ஒருவருடைய நெஞ்சு ஏழை மக்களுக்காகத் துயரத்தில் அழுமோ, அவரையே நான் மகாத்மா என்பேன்.
* கோழைகளே பாவ காரியங்களைப் புரிந்திடுவர். தைரியமுடையோர் ஒருக்காலும் பாவம் செய்யார்.
* முதலில் வேலைக்காரனாயிருக்கக் கற்றுக் கொண்டால், எஜமானாகும் தகுதி பின்னர் தானாகவே வரும். * சேர்ந்து வாழ்தலே சிறந்த வலிமையாகும்.
இந்தியா – பாகிஸ்தான் 2012 – 2013 ஆம் ஆண்டுக்குப் பின் இருதரப்பு தொடரில் விளையாடவில்லை. இந்நிலையில், இந்தியா – பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா இடையே முத்தரப்பு தொடரில் விளையாட ஆஸ்திரேலியா விருப்பம் தெரிவித்துள்ளது. ஆனால், இதன் இறுதி முடிவு அந்த இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் கையில்தான் உள்ளது என ஆஸி., கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
‘அடுத்த சாட்டை’, ‘நாடோடிகள் 2’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி. கோவையில் உள்ள இவரது வீட்டில் சமீபத்தில் பாஸ்போர்ட் மற்றும் பணம் ₹2,000 திருடுபோயுள்ளது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் வீட்டில் வேலை செய்யும் இரண்டு பணிப்பெண்கள் சிக்கியுள்ளனர். திருடியதை ஒப்புக்கொண்ட அவர்களிடமிருந்து பணம் கைப்பற்றப்பட்டநிலையில், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கும், மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோல் சச்தேவ் என்பவருக்கும் திருமண வரவேற்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின் மணமக்களுக்கு மரக்கன்று பசுமைக்கூடை வழங்கி வாழ்த்தினார். முதல்வருடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் இந்த விழாவில் கலந்துகொண்டார்.
* 1776 – பிரிட்டனிடம் இருந்து ஐக்கிய அமெரிக்கா விடுதலை பெற்றது.
* 1902 – விவேகானந்தர் நினைவு நாள்
* 1998 – ஜப்பான் நொசோமி விண்கலத்தை செவ்வாய்க் கோளை நோக்கி ஏவியது.
* 1997 – நாசாவின் பாத்ஃபைண்டர் விண்கலம் செவ்வாய்க் கோளில் இறங்கியது.
* 1988 – வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் முதல் தமிழ் மாநாடு பென்சில்வேனியாவில் நடைபெற்றது.
* 1903 – பிலிப்பைன்-அமெரிக்கப் போர் அதிகாரபூர்வமாக நிறைவடைந்தது.
ராஜஸ்தானில் ₹1 மற்றும் ஒரு தேங்காய் பெற்று வரதட்சணை வேண்டாம் எனக் கூறி நடைபெற்ற திருமணம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. சிகார் மாவட்டத்தை சேர்ந்த ஜெயா நாராயணன் என்பவர், வரதட்சணைக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார். இவர் அனிதா வர்மா என்ற முதுநிலை பட்டதாரியை வரதட்சணை வாங்காமல் மணந்துள்ளார். அத்துடன் அவர் வேலைக்கு சென்று சம்பாதிக்கும் பணத்தை சில காலம் அவரது பெற்றோரிடம் கொடுக்கவும் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.