news

News July 4, 2024

கள்ளச்சாராயம் குடித்த ஒருவர் மரணம்

image

விழுப்புரம் திருவெண்ணெய்நல்லூர் அருகே கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை பெற்ற முதியவர் ஜெயராமன் மரணமடைந்தார். டி.குமாரமங்கலத்தில் கள்ளச்சாரயம் வாங்கி குடித்த அவர் உட்பட மூவருக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தமிழகத்தையே உலுக்கிய கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் நடந்து முடிந்த சில நாள்களில், அதேபோன்ற சம்பவம் தொடர்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News July 4, 2024

ஆதாரில் பிறந்த தேதி திருத்தம் செய்ய வேண்டுமா?

image

ஆதாரில் பிறந்த தேதியை திருத்தம் செய்ய பிறப்புச் சான்றிதழ், பான் கார்டு, பாஸ்போர்ட், வங்கி பாஸ்புக்கில் ஏதேனும் ஒன்று வேண்டும். இதில் ஏதாவது ஒரு சான்றின் நகலுடன் ஆதார் ஆணையம், இ-சேவை மையம் சென்று, திருத்த வடிவத்தைப் பெற்று, பெயர், ஆதார் எண், சரியான பிறந்த தேதியை எழுதி, பயோமெட்ரிக் பதிவிட வேண்டும். இதன்பிறகு சில நாள்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கும். இதற்கு ₹50 கட்டணம் வசூலிக்கப்படும்.

News July 4, 2024

ராகுல் மன்னிப்பு கேட்கும்வரை போராட்டம் நீடிக்கும்

image

மக்களவையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, வலதுசாரி இந்துக்களை ‘வன்முறையாளர்கள்’ என கூறியதாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் அவருக்கு எதிராக பாஜக & சங்பரிவார அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து பேசிய டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா, “தேர்தல் நேர இந்துவான ராகுல் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்கும்வரை தொடர்ந்து போராடுவோம்” என்று தெரிவித்தார்.

News July 4, 2024

காலையில் வெறும் வயிற்றில் கிரீன் டீ குடிக்கலாமா?

image

காலையில் வெறும் வயிற்றில் கிரீன் டீயை குடிக்கலாமா என சந்தேகம் இருப்பதுண்டு. உடல்நல ஆலோசகர்கள், கிரீன் டீயை காலையில் வெறும் வயிற்றில் குடிக்கக் கூடாது என பரிந்துரைக்கின்றனர். கிரீன் டீ உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றுவதால் காலையிலேயே அதை குடிப்பது பாதிப்பை ஏற்படுத்தும் எனவும், வயிற்றில் அமிலத்தை அதிகரித்து செரிமானப் பிரச்னையை உண்டாக்கும் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.

News July 4, 2024

ரேஷன் கார்டில் பெயர் நீக்க ஒப்புதல் தர தாமதம்?

image

புதிய ரேஷன் கார்டு பெற ஏற்கெனவே உள்ள கார்டில் பெயர் இருக்கக்கூடாது. இதனால், திருமணமானவர்கள் பெற்றோர் கார்டுகளில் இருந்து பெயரை நீக்கி புதிய கார்டுக்கு விண்ணப்பம் செய்வர். ஆனால், பெயர் நீக்கம் கோரினால், ஒப்புதல் தராமல் அதிகாரிகள் தாமதம் செய்வதாக புகார் எழுந்துள்ளது. ₹1000 உரிமைத்தொகை பெற பெற்றோருடன் ஒரே வீட்டில் வசிப்பவர்கள் கூட புதிய கார்டுக்கு விண்ணப்பிப்பதால் இச்சிக்கல் நிலவுவதாக கூறப்படுகிறது.

News July 4, 2024

புதிய மாடல் Swift கார் விலையில் திடீர் தள்ளுபடி

image

முன்னணி கார் நிறுவனங்கள், ஜூன், ஜூலை மாதங்களில் கார் விலையில் தள்ளுபடி செய்துள்ளன. இந்தியாவின் நம்பர் 1 நிறுவனமான மாருதி சுசூகி, புதிய மாடல் Swift கார் விலையை முதல்முறையாக விலை குறைப்பு செய்துள்ளது. ₹10,000- ₹15,000 வரை விலை தள்ளுபடியும், கார் எக்சேஞ்சுக்கு ₹15,000 தள்ளுபடியும், பழைய மாடல் பெட்ரோல் Swift கார் விலையில் ரூ.35,000, சிஎன்ஜி கார் விலையில் ரூ.15,000மும் தள்ளுபடி செய்துள்ளது.

News July 4, 2024

6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் கணித்துள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளது. இதனால், பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்வோர் முன்னெச்சரிக்கையாக குடை, ரெயின் கோட் எடுத்துச்செல்லுங்கள்.

News July 4, 2024

‘முதல் இந்தியர்’ சாதனை படைத்த பாண்டியா

image

ஐசிசி வெளியிட்ட டி20 தரவரிசையில் ஆல்-ரவுண்டர்கள் பிரிவில் இந்தியாவின் ஹர்திக் பாண்டியா நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளார். அத்துடன், இந்தப் பிரிவில் முதலிடம் பிடித்த முதல் இந்தியர் என்ற பெருமையையும் அவர் தனதாக்கியுள்ளார். டி20 உலகக் கோப்பைத் தொடரில், இந்தியாவின் வெற்றிக்கு அவர் முக்கிய காரணமாக இருந்தார். இதன் காரணமாக தரவரிசையில், 2 இடங்கள் ஏற்றம் பெற்று, முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

News July 4, 2024

மாணவர்களுக்கு நாளை வரை அவகாசம்

image

அரசு கலைக் கல்லூரிகளில் சேர மாணவர்கள் நாளை வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 கட்ட கலந்தாய்வு முடிவடைந்திருக்கும் நிலையில் 63% இடங்கள் மட்டுமே நிரம்பியிருப்பதால் மீண்டும் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை கடைசி நாள் என்பதால் மேலும், கூடுதலான மாணவர்கள் விண்ணப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கல்லூரியில் சேர்க்கும் நடவடிக்கைகள் ஜூலை 8முதல் தொடங்கவுள்ளது.

News July 4, 2024

மக்களவை விதிகளில் திருத்தம்

image

மக்களவை உறுப்பினராக பதவியேற்கும்போது கோஷம் எழுப்புவதை தடுக்கும் வகையில் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. மக்களவை எம்பியாக பதவியேற்ற ஓவைசி, ஜெய் பாலஸ்தீனம் என கோஷம் எழுப்பியிருந்தார். மேலும் சில உறுப்பினர்கள், ஜெய் சம்விதான், ஜெய் ஹிந்துராஷ்டிரா என முழக்கமிட்டிருந்தனர். இதனால் சர்ச்சை எழுந்ததையடுத்து, மக்களவை சபாநாயகர் உத்தரவின்படி விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

error: Content is protected !!