news

News July 4, 2024

அரசியல் நிலைத்தன்மைக்காக பிறரை சார்ந்திருக்கும் மோடி

image

பிரதமர் மோடி தலைமையிலான NDA கூட்டணி அரசு எந்த நேரத்திலும் கவிழலாம் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். தனிப்பட்ட முறையிலும், அரசியல் ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் மோடி தோற்றுவிட்டதாகக் கூறிய அவர், தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்து மோடி தனது அரசியல் நிலைத்தன்மைக்காக சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆகிய இரு நபர்களை சார்ந்திருக்கிறார் எனத் தெரிவித்துள்ளார்.

News July 4, 2024

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு அனுமதி: ஐகோர்ட்

image

ஆன்லைனில் மருந்துகள் விற்க தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி 2018இல் அளித்த தீர்ப்பை எதிர்த்து மருந்து நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு மனு, 2 நீதிபதிகளால் விசாரிக்கப்பட்டது. அப்போது மத்திய அரசு தரப்பில், ஆன்லைன் மருந்து விற்பனைக் கொள்கையை வகுக்க அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து, மேலும் சில மாதங்களுக்கு ஆன்லைனில் மருந்து விற்க அனுமதியளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

News July 4, 2024

அண்ணாமலை பயோபிக்கில் நடிக்கும் விஷால்

image

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்க்கை வரலாறு பயோபிக்காக எடுக்கப்பட இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ‘துப்பறிவாளன் 2’ படத்தை முடித்த கையோடு, இப்படத்தில் விஷால் நடிக்கவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக அண்ணாமலையும் விஷாலும் அடிக்கடி நேரில் சந்தித்துப் பேசிக்கொள்கிறார்கள். படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

News July 4, 2024

பெட்ரோல் பங்கில் மெத்தனால் பதுக்கல்

image

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் மாதேஷை சிபிசிஐடி போலீஸ் விசாரித்த போது, அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. பண்ருட்டி அருகே உள்ள இயங்காத பெட்ரோல் பங்கின் கீழே புதைக்கப்பட்டிருக்கும் பெட்ரோல் டேங்கில் 2000 லிட்டர் மெத்தனாலை பதுக்கி வைத்திருந்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து, நேரில் சென்று விசாரித்த போலீசார் அந்த பெட்ரோல் பங்கிற்கு சீல் வைத்தனர்.

News July 4, 2024

இந்திய உணவுச் சந்தை மதிப்பு ₹10 லட்சம் கோடியாக உயரும்!

image

இந்திய உணவுச் சேவை சந்தை மதிப்பு 2023-24 ஆம் நிதியாண்டில் ₹5.5 லட்சம் கோடியாக உயர்ந்திருப்பதாக Swiggy-Bain தெரிவித்துள்ளது. அதன் கூட்டறிக்கையில், 2030 ஆம் ஆண்டில் இது ₹10 லட்சம் கோடியாக உயரும் என்றும் ஆன்லைன் உணவு விநியோகத்தின் பங்கு 20% வரை அதிகரிக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. 32-34 கோடியாக இருக்கும் பயனர்களின் எண்ணிக்கை 6 ஆண்டுகளில் 43-45 கோடியை எட்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 4, 2024

இந்தியாவில் கல்வி பயிலும் வெளிநாட்டினரில் யார் அதிகம்?

image

இந்தியாவில் அதிகம் கல்வி பயிலும் வெளிநாட்டினர் குறித்த புள்ளி விவரம் வெளியாகியுள்ளது. மொத்தம் 46,878 பேர் பயில்கின்றனர். அவர்களில், நேபாள நாட்டினர் 13,126 பேர் ஆவர். இதற்கடுத்து ஆப்கானிஸ்தான் (3,151), அமெரிக்கா (2,893), வங்கதேசம் (2,606), யுஏஇ (2,287), பூடான் (1,562), நைஜீரியா (1,387), தான்சானியா (1,264), ஜிம்பாப்வே (1,058), பிற நாடுகளைச் சேர்ந்தோர் (17,544) ஆகிய நாடுகள் உள்ளன.

News July 4, 2024

அகழாய்வில் சங்கு வளையல்கள் கண்டெடுப்பு

image

விருதுநகர் வெம்பக்கோட்டை அகழாய்வில், மாவுக் கல் தொங்கணி, சங்கு வளையல்கள், கருப்பு நிறப் பதக்கம் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவற்றை பண்டைக் கால தமிழ்ப் பெண்கள் அணிகலன்களாகப் பயன்படுத்தி இருக்கலாம் என தொல்லியல் தள இயக்குநர் பொன் பாஸ்கர் தெரிவித்துள்ளார். 5,000 ஆண்டு நுண் கற்காலத்தை அறியும் வகையில், 3ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

News July 4, 2024

பாஜகவில் இணையும் பாலகிருஷ்ணா ரெட்டி?

image

அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, பாஜவில் இணைய உள்ளதாக தகவல் பரவி வருகிறது. 1998இல் அதிமுக அமைச்சராக இருந்தபோது பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாக, அவருக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை தண்டனையை ஐகோர்ட் நேற்று ரத்து செய்தது. இந்நிலையில், மீண்டும் அரசியல் செல்வாக்கு பெற ஆதரவாளர்களுடன் அவர் பாஜகவில் இணைய உள்ளதாக கூறப்பட்டது. எனினும், இத்தகவலை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

News July 4, 2024

போராட்டம் அறிவித்த கிருஷ்ணசாமி

image

மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்களில் இருந்து தொழிலாளர்களை வெளியேற்றக்கூடாது என புதக தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பேசிய அவர், “மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களை வெளியேற்றிவிட்டு, மறுவாழ்வு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறுவது மனிதநேயமற்றது. பட்டினி சாவு ஏற்பட்டால் திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும். நெல்லை ரயில் நிலையம் முன் ஜூலை 6 ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும்” என அறிவித்துள்ளார்.

News July 4, 2024

நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி டிவி, கட்டில் வாங்குகிறீர்களா?

image

தனியார் நிதிநிறுவனத்தில் கடன் வாங்கி டிவி, கட்டில், மெத்தை உள்ளிட்டவற்றை வாங்கும் வழக்கம் அதிகரித்து வருகிறது. அப்படி வாங்குவோர், தவணை பணத்தை கட்டி முடித்ததும் NOC சான்றிதழ் பெறுவது அவசியமாகும். இல்லையெனில், பிற்காலத்தில் அது உங்களுக்கு பிரச்னையாக மாறக்கூடும். ஆம், தவணை கட்டவில்லையென அந்நிறுவனம் நோட்டீஸ் அனுப்ப சாத்தியமுள்ளது. இதுபோன்ற பிரச்னைகளை பலர் எதிர்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!