news

News July 4, 2024

இதை செய்தால் மின் தடையை முன்கூட்டியே அறியலாம்!

image

பராமரிப்பு உள்ளிட்ட காரணத்துக்காக மாதந்தோறும் குறிப்பிட்ட நாளில் மின்சாரம் தடை செய்யப்படும். அந்த மின்தடை குறித்து மக்கள் முன்கூட்டியே அறிய மின்சார வாரியம் வசதி செய்துள்ளது. https://www.tnebltd.gov.in/ outages/viewshutdown.xhtml என்ற இணையதளம் சென்று, Select Circle என்ற பகுதியில் மாவட்டத்தையும், கேப்ட்சாவையும் உள்ளிட்டால் மின்தடை ஏற்படும் தேதி திரையில் தோன்றும்.

News July 4, 2024

அரசியலமைப்பு சட்ட 361ஆவது பிரிவு கூறுவது என்ன? (2/2)

image

சிவில் விவகாரம் சம்பந்தப்பட்டது எனில் 2 மாத நோட்டீஸ் காலத்திற்குப் பிறகு, குடியரசுத் தலைவர், ஆளுநர்களுக்கு எதிராக வழக்குத் தொடுக்கலாம். பதவியில் இருக்கும் போது ஆளுநர் கிரிமினல் செயல்களில் ஈடுபட்டிருந்தால், பதவிக்காலம் முடிந்ததும் அவருக்கு எதிராக வழக்குத் தொடுத்து நடவடிக்கை எடுக்கலாம். இதன் மூலம் சட்டத்திற்கு மேலானவர்கள் யாருமில்லை, அனைவரும் சமம் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

News July 4, 2024

நீட் ரத்து கோரி கல்லூரி மாணவர்கள் போராட்டம்

image

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழகம் முழுவதும் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு சில கல்லூரிகளில் இந்திய மாணவர் சங்கத்தினர் (SFI) தலைமையிலும், சில கல்லூரிகளில் தன்னெழுச்சியாகவும் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கும்பகோணம், திருவாரூர், புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.

News July 4, 2024

ஆங்கிலத்தில்தானே இருக்கிறது? அடடே! விளக்கம்

image

மத்திய அரசு புதிதாக அமல்படுத்தியிருக்கும் 3 குற்றவியல் சட்டங்களுக்கு இந்தியில் பெயர் வைத்ததை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அப்போது வாதிட்ட மத்திய அரசின் வழக்கறிஞர் சுந்தரேசன், “Bharatiya Nyaya Sanhita என்ற ஆங்கில எழுத்துகள்தான் குற்றவியல் சட்ட புத்தகங்களில் இடம் பெற்றுள்ளன. எனவே, இதில் விதிமீறல் இல்லை” என்று நீதிபதிகளே வியக்கும் விதத்தில் விளக்கமளித்தார்.

News July 4, 2024

அணிவகுப்பில் பங்கேற்க வேண்டுமா?

image

இந்திய அணியின் வீரர்களுடன் வெற்றி கொண்டாட்ட நிகழ்வில் பங்கேற்க விரும்புவோர் கவனத்திற்கு. திறந்த பேருந்து அணிவகுப்பில் பங்கேற்க விரும்புவோர் மாலை 4.30 மணிக்குள் வான்கடேயில் இருக்க வேண்டும். ஸ்டேடியத்தில் நடக்கும் நிகழ்ச்சியைக் காண விரும்பும் ரசிகர்கள், மாலை 6 மணிக்கு முன்னதாக மைதானத்திற்குச் சென்று இருக்கைகளில் அமர வேண்டும். உங்கள் நண்பர்கள் யாராவது அணிவகுப்புக்கு செல்வதாக இருந்தால் இதை பகிரவும்.

News July 4, 2024

ராஜஸ்தான் அமைச்சர் திடீர் ராஜினாமா

image

ராஜஸ்தான் மாநில ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கிரோடி லால் மீனா திடீர் ராஜினாமா செய்தார். மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு முன்பு, தான் பிரசாரம் செய்த தொகுதிகளில் ஒரு தொகுதியில் பாஜக தோல்வியுற்றால் கூட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார். அதன்படி, அவர் தற்போது ராஜினாமா செய்ததாகத் தெரிகிறது. அவர் பிரசாரம் செய்த 7 மக்களவை தொகுதிகளில் 4ல் பாஜக தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

News July 4, 2024

காஷ்மீரில் 110 வெளிநாட்டு தீவிரவாதிகள்

image

ஜம்மு & காஷ்மீரில் சுமார் 110 வெளிநாட்டு தீவிரவாதிகள் செயல்படுவதாக டிஜிபி ஆர்.ஆர்.ஸ்வெயின் தெரிவித்துள்ளார். குறிப்பாக, காஷ்மீரில் 23, ஜம்முவில் 4 உள்ளூர் தீவிரவாதிகளும் செயல்படுவதாக அவர் கூறியுள்ளார். இவர்களை கட்டுப்படுத்த தேர்ச்சி பெற்ற 960 காவலர்களை ‘ஊடுருவல் தடுப்பு’ மற்றும் ‘தீவிரவாத ஒழிப்பு’ பணிகளில் ஈடுபடுத்த உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

News July 4, 2024

திமுக அரசு பதவி விலக வேண்டும்: அன்புமணி

image

விழுப்புரம் அருகே கள்ளச்சாராயம் குடித்து முதியவர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவத்தை குறிப்பிட்டு, கள்ளக்குறிச்சி விஷச்சாராய சோகம் விலகும் முன்பே மீண்டும் ஒரு மரணம் நிகழ்ந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியவில்லை என்றால் திமுக அரசு பதவி விலக வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

News July 4, 2024

பிரதமருடன் விருந்துண்ணும் வீரர்கள்

image

டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் வீரர்கள் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர். 140 கோடி மக்களின் சார்பில் விளையாடி வென்ற அவர்கள் அவரிடம் கோப்பையை காட்டி, மகிழ்ந்தனர். கோப்பையை பெருமிதம் பொங்க கையில் வாங்கி பார்த்த அவர், வெற்றி வாகை சூடிய வீரர்களை வாழ்த்தினார். அத்துடன், சாம்பியன்ஸ் என்ற சிறப்பு ஜெர்சி அணிந்த வீரர்களுடன் அவர் விருந்து உண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

News July 4, 2024

சென்னையில் 9 செ.மீ மழை

image

கடந்த 24 மணி நேரத்தில் சென்னை சோழிங்கநல்லூரில் 9 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் 7 சென்டி மீட்டரும், தேனாம்பேட்டை, ஆவடி, அயனாவரம் பகுதிகளில் தலா 6 செ.மீட்டரும் மழை பதிவாகியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஆகிய பகுதிகளில் தலா 5 செ.மீ மழையும் பெய்துள்ளது.

error: Content is protected !!