India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
எல்இடி பல்புக்கு பழைய பல்பை விட குறைவான மின்சாரம் போதும் என்பதால் அதன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதுபோல பயன்பாடு ஒருபக்கம் அதிகரிக்கும் நிலையில், மறுபக்கம் அதன் வெளிச்சத்தால் கண் பார்வை பாதிக்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதுகுறித்து பிரான்ஸ் நிறுவனம் ஒன்று ஆய்வு நடத்தி, எல்இடி பல்பில் வெளிப்படும் ஊதா நிறம் விழித்திரையை பாதிக்கும், பார்வை கூர்மையை மங்கச் செய்யும் எனத் தெரிவித்துள்ளது.
உயிர்நீத்த அக்னி வீர் வீரர்களின் குடும்பத்தினருக்கு, எந்த உதவியும் கிடைக்காது என்ற ராகுல்காந்தியின் குற்றச்சாட்டை, இந்திய ராணுவம் மறுத்துள்ளது. இந்திய ராணுவம் தனது x தளத்தில், அக்னிவீர் திட்டத்தில் தேர்வாகி பணியின்போது உயிரிழந்த அஜய்குமார் என்பவரின் குடும்பத்திற்கு ரூ. 98 லட்சத்து 39 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதர சலுகையாக இன்னும் ரூ. 67 லட்சம் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் மாநிலத்தின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜூலை 10ஆம் தேதி வரை மாநிலத்தின் பல பகுதிகளில் பரவலாக மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனின் நாடாளுமன்றத் தேர்தல் அந்நாட்டு நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்கியது. 650 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவுக்காக நாடு முழுவதும் சுமார் 40,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 4.65 கோடி மக்கள் வாக்களிக்க உள்ள இத்தேர்தல் இரவு 10 மணி வரை நடைபெறும். வாக்கு எண்ணும் பணிகள் உடனே தொடங்கப்பட்டு நள்ளிரவுக்கு முன் முதற்கட்ட முடிவுகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஓட்டல்கள், விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்படுவது தொடர்பாக செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன. இதுகுறித்து 9444042322 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டோ, அதே எண்ணிற்கு வாட்ஸ்ஆப் மூலம் செய்தி அனுப்பியோ உணவு பாதுகாப்புத் துறைக்கு புகார் தெரிவிக்க வசதி உள்ளது. உணவு சாப்பிட்ட ஓட்டல், விடுதி புகைப்படம், பில் ஆகியவற்றை சேர்த்து அனுப்ப வேண்டியது அவசியமாகும்.
சேலம் மாநகராட்சி தாதகாப்பட்டியை சேர்ந்த சண்முகம்(64) அதிமுக பகுதி செயலாளராக உள்ளார். நேற்றிரவு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த அவரை வழி மறித்த மர்ம கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தது. அரசியல் காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்ததா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வரும் காவல்துறை 5 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
நீட் குறித்த விஜய்யின் கருத்து பாஜகவின் வளர்ச்சிக்கு உதவும் என அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்துள்ளார். திமுக சார்ந்த அரசியலை விஜய் கையிலெடுத்தால் சந்தோஷம் தான் என்றும், பாஜக மட்டும் தனித்திருக்கும் எனவும் பெருமிதம் தெரிவித்தார். நீட் வேண்டும் என நினைக்கும் மக்கள் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள் என்றும், தங்கள் கூட்டணியில் உள்ள பாமக கூட நீட் தேர்வுக்கு எதிராக தான் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மே.வங்க ஆளுநர் ஆனந்த போஸ் மீது பாலியல் சீண்டல் குற்றச்சாட்டு தெரிவித்த பெண் ஊழியர், உச்சநீதிமன்றத்தில் மனு தொடுத்துள்ளார். அரசியலமைப்பு சட்டத்தின் 361ஆவது பிரிவு பாதுகாப்பு அளிப்பதால், ஆளுநர் ஓய்வு பெறும் வரை நீதிக்காக தான் காத்திருக்க வேண்டுமா? பாலியல் சீண்டலுக்காகவா ஆளுநருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது? என கேள்வி எழுப்பி, 361வது பிரிவை ஆய்வு செய்ய வலியுறுத்தியுள்ளார்.
விக்கிரவாண்டியில் திமுக வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அதிமுக போட்டியிடவில்லை என அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். இடைத் தேர்தலில் 90% ஆளுங்கட்சிதான் வெற்றி பெறுவதாகவும் அவர் வேதனை வெளிப்படுத்தினார். அங்கு அதிமுகவின் வாக்குகளை குறிவைத்து நாதகவும், பாமகவும் வாக்குவேட்டை நடத்தி வருகின்றன. 2 கட்சிகளும் வெளிப்படையாகவே, அதிமுகவினர் தங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளன.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 361ஆவது பிரிவின்கீழ் குடியரசுத் தலைவர், மாநில ஆளுநர்களுக்கு தனி பாதுகாப்பு (immunity) அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் தங்களது செயலுக்காகவோ, பணிகளுக்காகவோ எந்த நீதிமன்றத்திற்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை. பதவியில் இருக்கும் போது அவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடுக்கவோ, விசாரிக்கவோ இயலாது. பதவி காலத்தில் கைது செய்யவோ, சிறையில் அடைக்கவோ முடியாது.
Sorry, no posts matched your criteria.