India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
டி20 உலகக் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி வென்றதையடுத்து அவர்களுக்கு பிரதமர் மோடி இன்று காலை விருந்தளித்தார். அப்போது பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி மற்றும் செயலாளர் ஜெய் ஷா இருவரும், அவருக்கு ‘நமோ’ என்று அவரது பெயர் கொண்ட ஜெர்சியை பரிசளித்தனர். அதில், ‘1’ என்ற எண்ணும் இடம் பெற்றிருந்தது. அந்த ஜெர்சியை பிரதமர் மோடி மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டார்.
நீட் மறு தேர்வு நடத்த எழுந்துவரும் கோரிக்கைக்கு எதிராக குஜராத்தைச் சேர்ந்த 56 மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். 2024 இளங்கலை நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்து, மீண்டும் தேர்வை நடத்தக்கூடாது என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கெனவே, நீட் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம், விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது ஜூலை 8ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைதான அவர், தற்போது புழல் சிறையில் உள்ளார். இந்நிலையில், அமலாக்கத்துறை விசாரணையை தள்ளிவைக்கவும், வங்கி ஆவணங்களை தரக்கோரியும் வழக்கு தொடர்ந்தார். இதில், வங்கி ஆவணங்களை கோரிய வழக்கில் ஜூலை 8இல் தீர்ப்பு என நீதிபதி அறிவித்துள்ளார்.
அரசு பள்ளி சைக்கிள்களில் தரமில்லை என ப.சிதம்பரம் குற்றம் சாட்டியிருந்தார். கூட்டணியில் இருந்துக் கொண்டே திமுக அரசை விமர்சிப்பதற்கான காரணம் என்ன? என விசாரித்தில், கோபம் ஆளும் கட்சி மீது இல்லை, அமைச்சர் ராஜகண்ணப்பன் மீதுதான் என கூறப்படுகிறது. தனிப்பட்ட முறையில் உதவி கேட்டதை அவர் வெளியே சொன்னதே காரணம் என்கிறார்கள். சைக்கிளை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கொள்முதல் செய்வது குறிப்பிடத்தக்கது.
கேரளாவில் பிறந்திருந்தாலும் தமிழ்நாட்டை மனதார நேசிக்கிறேன் என்று மலையாள நடிகரும், மத்திய அமைச்சருமான சுரேஷ் கோபி நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். கேரள மக்கள் வழங்கிய ஆசீர்வாதத்தால் நான் எம்.பி.,யாக தேர்வாகி இருந்தாலும் தமிழ்நாட்டிற்கும் சேர்த்தே பணியாற்றுவேன் எனக் கூறிய அவர், சென்னை தன்னை வளர்த்த இடம் மட்டுமல்ல, நடிக்கவும் வாழவும் வாய்ப்பளித்த அன்னைப் பூமி எனத் தெரிவித்துள்ளார்.
நடந்த முடிந்த டி20 உலகக் கோப்பைத் தொடரில் வென்ற இந்திய அணியின் வீரர்களுக்கு புதிய சிறப்பு ஜெர்சியை BCCI அளித்துள்ளது. இந்திய அணிக்கே உரித்தான நீல நிறத்தில் மூவர்ண கொடியின் அடையாளமும் இடம்பெற்றுள்ளது. ‘சாம்பியன்ஸ்’ என எழுதப்பட்டுள்ள ஜெர்சியின் இடது பக்கம் BCCI லோகோவும் அதற்கு ( டி20 உலகக் கோப்பையை 2ஆவது முறையாக வென்றதை நினைவூட்டும் வகையில்) மேல் இரு நட்சத்திரங்களும் பொறிக்கப்பட்டுள்ளது.
தமிழிசை செளந்தரராஜனை விமர்சித்தது உள்ளிட்ட விவகாரங்களால் திருச்சி சூர்யா உள்ளிட்டோர் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டனர். இந்நிலையில் சூர்யா அளித்துள்ள பேட்டியில், அண்ணாமலை நாடகம் போடுவதாகவும், தனது கண் எதிரிலேயே திமுக அமைச்சர்களுடன் அண்ணாமலை பலமுறை பேசியதாகவும் சாடியுள்ளார். அண்ணாமலை நாடகம் குறித்து மக்களிடம் தெரிவித்து அவரது முகத்திரையை கிழிக்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு என மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் மாவட்ட கமிட்டி கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அதன் மத்திய கமிட்டி உறுப்பினர் பாலசுந்தரம் தெரிவித்துள்ளார். இடைத்தேர்தலில் திமுக, பாமக, நாதக தலைமையிலான மூன்று அணிகள் போட்டியிடுகின்றன. இங்கு ஜூலை 10இல் தேர்தல் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் மாலை 5.30 மணி வரை 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, T20 WC இறுதிப்போட்டிக்கு முன்பு வீரர்களை எப்படி ஊக்கப்படுத்தினார் என்று சூர்யகுமார் யாதவ் மனம்திறந்து பகிர்ந்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “வெற்றியைத் தேடும் இந்த பயணத்தில் தன்னால் தனியாக மலையேற முடியாது. பைனலில் வெல்ல அனைவரும் தங்களது மனம், உடல், சிந்தனை என அனைத்து வகையிலும் பங்களிக்க வேண்டும் என ரோஹித் ஊக்கப்படுத்தினார்” எனத் தெரிவித்துள்ளார்
Sorry, no posts matched your criteria.