news

News July 4, 2024

இடைத்தேர்தலுக்கு பிறகு முன்னாள் அமைச்சர்கள் கைது?

image

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 7 பேர் மீதான ஊழல் வழக்குகளை விரைந்து முடிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருப்பதாகவும், இதையடுத்து சிறப்பு குழு ஒன்றை அரசு அமைத்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு பிறகு 7 அமைச்சர்கள் மீதான வழக்கு விசாரணை வேகமெடுக்கும், அதன்பிறகு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 7 பேரும் வரிசையாக கைது செய்யப்படுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

News July 4, 2024

ஒரே ஆண்டில் ₹10,760 உயர்ந்த தங்கம் விலை

image

தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்வது, நடுத்தர வர்க்கத்தினரை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் கடந்த ஓராண்டில் மட்டும், தங்கம் விலை ₹10,760 உயர்ந்துள்ளது. குறிப்பாக, 2023 ஜூலை 4ஆம் தேதி ₹43,320ஆக இருந்த தங்கம் விலை, இன்று (2024 ஜூலை 4) ₹54,080ஆக விற்பனையாகி வருகிறது. தங்கம் மீதான முதலீடு நல்ல லாபத்தை தரும் என மக்கள் நம்புவதால், அதன் விலையும் அதிகரித்து வருவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

News July 4, 2024

திருப்பூரில் கள்ளச்சாராயம் காய்ச்சியோர் கைது

image

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனையில் ஈடுபட்ட செல்வராஜ் (53), மனோஜ் (30) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 6 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டு, 30 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 65 பேர் உயிரிழந்த நிலையில், தமிழகம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

News July 4, 2024

கோவை மேயர் பதவி யாருக்கு..?

image

கோவை மேயர் கல்பனா தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், அந்த பதவியை பெற மண்டலத் தலைவர்களும், ஏராளமான கவுன்சிலர்களும் சென்னையில் முகாமிட்டுள்ளதாக தெரிகிறது. கோவை எம்.பி கணபதி கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவர். அதே போல மாவட்ட செயலாளர் கார்த்திக் நாயுடு சமுதாயத்தை சேர்ந்தவர். இதனால், மாற்று சமூகத்திற்கு இந்த பதவியை தருவது 2026 தேர்தலில் உதவும் என திமுக தலைமைக்கு உளவுத்துறை ரிப்போர்ட் அளித்துள்ளதாம்.

News July 4, 2024

பிரிட்டன் தேர்தலில் 8 தமிழர்கள் போட்டி

image

650 தொகுதிகள் கொண்ட பிரிட்டன் நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் இதுவரை இல்லாத அளவில் 8 தமிழர்கள் வேட்பாளர்களாக களம் காண்கின்றனர். உமா குமரன், கவின் ஹரன், மயூரன் செந்தில்நாதன், கமலா குகன், டெவினா பால், நரணி ருத்ரா ராஜன், கிரிஷ்ணி, ஜாஹிர் உசேன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இலங்கை, பாகிஸ்தான் நாடுகளிலிருந்து குடியேறியவர்களுக்கும் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது.

News July 4, 2024

IPL அணிகள் பரபரப்பு கடிதம்

image

2025 IPL சீசனுக்கான மெகா ஏலம் டிசம்பர் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஒரு அணி 5 முதல் 8 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளும் வாய்ப்பை வழங்க வேண்டும் என IPL அணிகள் BCCI-க்கு கடிதம் எழுதியுள்ளன. முன்னதாக கடின உழைப்பால் ஒரு சிறந்த அணியை உருவாக்கினால், அதை மெகா ஏலம் என்ற பெயரில் உடைத்து விடுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் கடிதம் எழுதியுள்ளனர்.

News July 4, 2024

இன்று மாலை முதல்வராகும் ஹேமந்த் சோரன்

image

ஜார்கண்ட் மாநில முதல்வராக இன்று மாலை ஹேமந்த் சோரன் மீண்டும் பதவியேற்கவுள்ளார். நில மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அவர், ஜூன் 28ஆம் தேதி ஜாமினில் விடுதலையானார். இதனைத் தொடர்ந்து நேற்று ஜே.எம்.எம் கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.

News July 4, 2024

தெலங்கானா மாநிலங்களவை எம்.பி ராஜினாமா

image

தெலங்கானா மாநிலங்களவை உறுப்பினர் கேசவ ராவ் (KK) தனது உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். BRS கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த இவர், அக்கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவராகவும் இருந்தார். நேற்று ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த இவர், இன்று எம்பி பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். ஏற்கெனவே, இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து BRS கட்சியில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

News July 4, 2024

செயல் தலைவர் பதவிக்கு காய் நகர்த்தும் தமிழிசை?

image

அரசியல் தொடர்பான கோர்ஸ் படிக்க அண்ணாமலை லண்டன் செல்ல இருப்பதாகவும், 3 மாதங்கள் அங்கேயே தங்கி இருப்பார் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இடைப்பட்ட காலத்திற்கு செயல் தலைவரை நியமிக்க கட்சி தலைமை முடிவெடுத்துள்ளதாக கமலாலய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இந்நிலையில், அந்த பதவிக்கு தமிழிசை காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. அமித் ஷாவை அவர் சமீபத்தில் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

News July 4, 2024

தனுஷ் படத்திற்கு பிரிட்டன் தேசிய விருது

image

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘கேப்டன் மில்லர்’ படம் கடந்த பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியானது. இந்நிலையில், பிரிட்டனில் நடந்த தேசிய திரைப்பட விருது விழாவில், சிறந்த வெளிநாட்டு பட பிரிவில் விருது வென்றுள்ளது. உலக அளவில் வெளியான 7 படங்களுடன் போட்டியிட்டு கேப்டன் மில்லர் திரைப்படம் விருதை பெற்றுள்ளது. இதனை, படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

error: Content is protected !!