India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
3ஆவது முறையாக மோடி பிரதமராக பொறுப்பேற்ற பின், முதல் வெளிநாட்டு பயணமாக இத்தாலி சென்றார். ஜி7 அமைப்பில் இந்தியா இல்லாதபோதும், அதன் 50ஆவது உச்சிமாநாட்டில் சிறப்பு விருந்தினராக அவர் கலந்து கொண்டார். இந்நிலையில் ஜூலை 8ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை ரஷ்யா, ஆஸ்திரியா நாடுகளுக்கு பயணம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 41 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஆஸ்திரியா செல்வது இதுவே முதல்முறை.
விழுப்புரம் மாவட்டத்தில் ஜூலை 8, 9, 10 மற்றும் 13ஆம் தேதிகளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் ஜூலை 10ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை ஜூலை 13ஆம் தேதியும் நடைபெற உள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாள்கள் விடுமுறை விடப்படுவதாக, மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் அரசின் சிக்கன நடவடிக்கை, பிரெக்ஸிட், வரி மாற்றங்கள் மற்றும் கடும் நிதி நெருக்கடி போன்ற தவறான கொள்கை முடிவுகளால் மக்கள் பல இன்னல்களை எதிர்கொண்டனர். மேலும், கடந்த 14 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள கன்சர்வேடிவ் கட்சியின் மீது பல்வேறு ஊழல்கள், விதிமீறல் குற்றச்சாட்டுகளும் உள்ளன. இவை அங்கு ஆட்சி மாற்றத்திற்கு முக்கிய காரணிகளாக அமையும் என அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
டி20 ஆல் ரவுண்டர் பட்டியலில் ஜடேஜாவை பின்னுக்கு தள்ளி, கோலி 79ஆவது இடத்திலும், ஜடேஜா 86ஆவது இடத்திலும் உள்ளனர். 6 வருடங்களாக டி20 போட்டியில் பந்துவீசாத கோலி, எப்படி ஜடேஜாவை முந்தினார்? என்ற கேள்விக்கு ஐசிசி விளக்கமளித்துள்ளது. தரவரிசை பட்டியலுக்கு பேட்டிங் மற்றும் பவுலிங் முக்கியமானது என்றும், ஜடேஜாவின் பேட்டிங், பவுலிங் புள்ளிகள் குறைந்ததால், கோலி அவரை முந்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்களுக்கு காரணமான மெத்தனால் பேரலை மாதேஷ் என்பவர் ₹40,000க்கு விற்றது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் இருந்து ஒரு பேரல் ₹11,000 என 20 பேரல்களை அவர் வாங்கியிருக்கிறார். முதல் பேரலை கள்ளக்குறிச்சியில் விற்றவுடன் அசம்பாவிதம் நடந்தேறியுள்ளது. உடனே மீதமிருந்த 19 பேரல்களை பதுக்கி வைத்திருக்கிறார். அதனை போலீசார் இன்று பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி ஒருவர் உயிரிழந்ததற்கு, இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி சுவடு மறைவதற்குள் மீண்டும் உயிரிழப்பு நடந்துள்ளதாக சாடிய அவர், திமுக அரசு கும்பகர்ண தூக்கத்தில் இருந்து விழிப்பதற்குள் இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோவது? என்றும் வினவியுள்ளார். கள்ளச்சாராயம் அருந்தியதாக இன்று காலை மூவர் விழுப்பும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தமிழகத்தில் இரவு 8.30 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, வேலூர், ராணிப்பேட்டை, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், கரூர், ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
பிரிட்டனில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் பிரதமர் வேட்பாளரான ரிஷி சுனக்கிற்கும், தொழிலாளர் கட்சித் தலைவரான கெய்ர் ஸ்டார்மருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், ஆளுங்கட்சி தோல்வியை சந்திக்கும் என்றும், 2010-க்கு பின் தொழிலாளர் கட்சி இந்த தேர்தலில் வெற்றிபெறும் எனவும், தேர்தல் வெற்றிகளை துல்லியமாக கணிக்கும் ‘சன் டேப்லாய்டு’ நிறுவனம் கருத்துகணிப்பு வெளியிட்டுள்ளது.
டி20 உலகக்கோப்பையுடன் இந்திய அணி இன்று நாடு திரும்பியது. மும்பை வான்கடே மைதானத்தில் இந்திய அணிக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் பங்கேற்க அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில், ஓய்வு அறிவித்த விராட் கோலி, ரோஹித் ஷர்மா ஆகியோருக்கு அர்ப்பணிக்கும் வகையில், விஸ்தாரா விமான நிறுவனம் வீரர்களை டெல்லியில் இருந்து மும்பை அழைத்து வர உள்ளது.
ஹத்ராஸ் நெரிசல் சம்பவம் தொடர்பாக, 6 பேர் கைது செய்யப்பட்டதாக, அலிகார்க் ஐஜி ஷலாப் மாத்தூர் தெரிவித்தார். அவர்கள், சம்பவம் நடந்த நிகழ்ச்சியின் அமைப்பாளர்கள் என்றும், முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பிரகாஷ் மதுகர் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.1 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவித்தார். நெரிசல் சம்பவத்தில் சதித்திட்டம் இருக்கிறதா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படும் என்றார்.
Sorry, no posts matched your criteria.