India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சுதந்திர போராட்ட வீரருக்கு ஓய்வூதிய பாக்கியை வழங்காததால், தமிழக பொதுத்துறை கூடுதல் செயலாளருக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. ஒய்வூதிய பாக்கியை வழங்கக்கோரி 2022இல் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், அதை அரசு செயல்படுத்தவில்லை என சுதந்திர போராட்ட தியாகி வேலு (97 வயது) நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் தற்போது அதிரடி உத்தரவிட்டுள்ளது.
கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான தர்ஷன், தன்னை பற்றி ஆபாசமாக பதிவிட்ட ரசிகர் ரேணுகா சுவாமியை கொலை செய்த வழக்கில் கடந்த ஜூன் 11ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அத்துடன் அவரது நெருங்கிய தோழி பவித்ரா கௌடா உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த ஜூன் 22ஆம் தேதி விதிக்கப்பட்ட நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், வருகிற 18ஆம் தேதி வரை காவலை நீட்டித்து பெங்களூரு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணி வெற்றி விழாவில் பங்கேற்க கோப்பையுடன் மும்பை சென்றுள்ளது. ஆனால், இந்திய வீரர்களின் கையில் உள்ள உலகக்கோப்பை போலியானது என சொன்னால் நம்புவீர்களா? ஆம், வெற்றி பெற்ற வீரர்களின் கையில் இருப்பது உண்மையான கோப்பை போலவே காட்சி அளிக்கும் மாதிரி கோப்பைதான். உண்மையான கோப்பை துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஆகியவை அண்மையில் தங்களது ப்ரீபெய்ட், போஸ்ட்பெய்ட் கட்டணத்தை அதிகரித்தன. ஆனால், பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் கட்டணத்தில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. அத்துடன், போஸ்ட்பெய்ட் திட்டத்தை வேறு எந்த நிறுவனமும் வழங்காத மிகக்குறைந்த விலையில் ரூ.199-க்கு வழங்கி வருகிறது. இந்தத் திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு, மாதத்திற்கு 25 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
உ.பியில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ராகுல்காந்தி ஆறுதல் கூற உள்ளதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் ராகுல் சந்திக்க உள்ளதாக தெரிகிறது. ஹத்ராசில் கடந்த 2ஆம் தேதி நேரிட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த 121 பேரில், 108 பெண்கள் மற்றும் 7 குழந்தைகள் அடங்குவர்.
சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 43ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்று நிறைவடைந்த நிலையில், வரும் ஜூலை 8ஆம் தேதி வரை காவலை நீட்டித்து, நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இந்த வழக்கில், செந்தில் பாலாஜின் ஜாமின் மனு விரைவில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். இதை தொடர்ந்து, அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், அவர் குணமடைந்து வீடு திரும்பியதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த வாரமும் அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஆரியத்தை எதிர்ப்பதால் தனது பேச்சை திரிக்கிறார்கள் என ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். திமுக ஆட்சியில் அனைவரும் ஒரு பட்டம் பெற்றிருக்கிறார்கள் என்று கூறியதை சிலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்காவில் ஐன்ஸ்டீன் என்ற நாய் டிகிரி வாங்கியதை சுட்டிக்காட்டியதாகவும் அவர் கூறியுள்ளார். நாய் கூட தற்போது டிகிரி படிப்பதாக நீட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியிருந்தார்.
தனுஷ், செல்வராகவன் கூட்டணியில் உருவாகி பெரும் வெற்றி பெற்ற காதல் கொண்டேன் திரைப்படம் வெளியாகி 21 ஆண்டுகள் ஆகிறது. வித்தியாசமான சைக்கோபாத் கதைக்களத்துடன் வெளியான இப்படம், பல இளைஞர்களின் கவனத்தை ஈர்த்தது. அத்துடன், யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளியான பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு வலு சேர்த்தன. இப்படம், தனுஷ் & செல்வராகவனை தமிழ் சினிமாவின் முக்கிய நபர்களாக நிலை நிறுத்தியது.
பாஜக எம்எல்ஏக்கள் தங்களது கட்சித்தலைமையை சந்தித்துப் பேசியது, அவர்களது விருப்பம் என அம்மாநில முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். அரசு மீது பாஜக எம்எல்ஏக்கள் ஊழல் புகார் தெரிவித்துள்ளார்களே? என்ற கேள்விக்கு, அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார். முன்னதாக, ஆளும் என்.ஆர்.காங்கிரசுக்கு அளிக்கும் ஆதரவை விலக்கிக்கொள்ளுமாறு, டெல்லி தலைமையிடம் பாஜக எம்எல்ஏக்கள் நேற்று நேரில் வலியுறுத்தியிருந்தனர்.
Sorry, no posts matched your criteria.