news

News July 5, 2024

Prank செய்பவர்களுக்கு அரசு விருது

image

ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களை Prank செய்து வீடியோக்கள் வெளியிடும் விளாடிமிர் குஸ்நெட்சோவ் மற்றும் அலெக்ஸி ஸ்டோலியரோவ் ஆகியோருக்கு ரஷ்ய நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. அமைதி, நட்பு ஆகியவற்றை உயர்த்திப் பிடிப்பவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. முன்னாள் உக்ரைன் அதிபர் பேசுவதுபோலவும், பிரிட்டிஷ் வெளியுறவு செயலாளரை Prank செய்தும் வீடியோவை இவர்கள் சமீபத்தில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

News July 5, 2024

வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிப்பு

image

சுவிட்சர்லாந்தில் 77ஆவது ‘லோகார்னோ திரைப்பட விழா’ ஆகஸ்ட் 7 முதல் 17ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், நடிகர் ஷாருக் கானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக.11ம் தேதி நடைபெறும் விழாவில் ஷாருக் கான் நடித்து 2022-ல் வெளியான ‘தேவதாஸ்’ திரைப்படம் திரையிடப்பட உள்ளது. அதற்கு பின் ரசிகர்களின் கேள்வி, பதில் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News July 4, 2024

நிதிஷ் அரசை விமர்சித்த பாஜக தலைவர்

image

பிஹாரில் பாலம் வழியாக செல்வதற்கே பயமாக இருப்பதாக அம்மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் நிகில் ஆனந்த் தெரிவித்துள்ளார். எந்தப் பாலம் எப்போது சேதமடையும் என்பது தெரியாமல் பொதுமக்கள் அவதியடைந்துள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார். நிதிஷ் குமாருடன் கூட்டணியில் இருக்கும் பாஜகவினரே, இந்த பாலத்தை வைத்து அரசியல் செய்ய ஆரம்பித்துள்ளதால், ஆளும் கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

News July 4, 2024

12 ராசிகளுக்கான பலன்கள்

image

* மேஷம் – கவனம் தேவை
*ரிஷபம் – ஆர்வம் அதிகரிக்கும்
*மிதுனம் – நன்மை உண்டாகும்
*கடகம் – வெற்றிகரமான நாள்
*சிம்மம் – முயற்சிக்கேற்ற பலன்
*கன்னி – செய்யும் செயலில் வெற்றி
*துலாம் – பரிவு உண்டாகும்
*விருச்சிகம் – உயர்வான நாள்
*தனுசு – ஆக்கப்பூர்வமாக செயல்படவும்
*மகரம் – யோகமான நாள் *கும்பம் – பக்தி அதிகரிக்கும் *மீனம் – மகிழ்ச்சியான நாள்

News July 4, 2024

விக்கிரவாண்டியில் நடப்பது எடைத்தேர்தல்: அன்புமணி

image

விக்கிரவாண்டியில் நடப்பது இடைத்தேர்தல் அல்ல, அது எடைத்தேர்தல் என பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். கள்ளச் சாராயம் விற்கக்கூடாது என்று கடுமையான சட்டம் கொண்டுவந்துள்ள தமிழக அரசு 90 மி.லி மதுவை அறிமுகப்படுத்த உள்ளதாக குற்றம் சாட்டிய அவர், ஒரு மாதம் பாமகவிடம் ஆட்சியை கொடுத்தால் தமிழகத்தில் ஒரு சொட்டு மது இல்லாத நிலையை உருவாக்குவோம் என்றார்.

News July 4, 2024

₹98 லட்சம் கிடைத்தது: அக்னி வீரரின் தந்தை

image

இழப்பீடாக ₹98 லட்சம் கிடைத்துள்ளதாக பணியின் போது உயிரிழந்த அக்னி வீரர் அஜய்குமாரின் தந்தை தெரிவித்துள்ளார். முன்னதாக வீரரின் குடும்பத்தாருக்கு நிவாரணம் வழங்கப்பட வில்லை என தந்தை பேசிய வீடியோவை ராகுல் காந்தி நேற்று வெளியிட்டிருந்தார். இதன் எதிரொலியாக, தற்போது பணம் கிடைத்துள்ளதாக தந்தை கூறியுள்ளார். மேலும், வீரமரணம் அடைந்த தனது மகனை தியாகி என அறிவிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

News July 4, 2024

முத்தக்காட்சி இருந்ததால் நடிக்க மறுத்தாரா?

image

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானாலும், தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் முன்னணி நடிகர்களுடன் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மகாநடி என்ற படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார். இந்நிலையில், தெலுங்கு நடிகர் நிதின் ஹீரோவாக நடிக்கும் படத்தில், நெருக்கமான முத்தக்காட்சிகள் இருந்ததால் கீர்த்தி சுரேஷ் நடிக்க மறுத்துவிட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

News July 4, 2024

இப்போதைக்கு ஓய்வு பெறப்போவதில்லை: பும்ரா

image

கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதில் இருந்து தற்போதைக்கு ஓய்வு பெறப்போவது இல்லை என பும்ரா தெரிவித்துள்ளார். தனது கெரியர் தற்போது தான் ஆரம்பித்துள்ளதாக குறிப்பிட்ட அவர், கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவதற்கு ஆர்வமாக இருப்பதாகக் கூறியுள்ளார். T20 உலகக் கோப்பையில் 8 போட்டிகளில் விளையாடி, 15 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா, தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News July 4, 2024

அமெரிக்காவில் நடைபெற்ற சந்திப்பு

image

‘தி கோட்’ படத்தின் VFX பணிகளுக்காக இயக்குநர் வெங்கட் பிரபு அமெரிக்கா சென்றுள்ளார். அதேபோல் லாஸ் ஏஞ்சல்ஸில் நடக்கும் இந்திய திரைப்பட விழாவில் ‘மகாராஜா’ திரையிடலுக்காக நடிகர் விஜய் சேதுபதியும் அங்கு சென்றுள்ளார். மேலும் நடிகர் சூரியும் அங்கு இருப்பதால் இம்மூவரும் சந்தித்து புகைப்படம் எடுத்துள்ளனர். வெங்கட் பிரபு பகிர்ந்த அந்த செல்ஃபி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

News July 4, 2024

தேர்தலை சந்திக்க காங்கிரஸ் தயாரா? எடியூரப்பா

image

கர்நாடகாவில் தற்போது தேர்தல் நடைபெற்றால் 150 இடங்களில் பாஜக வெற்றி பெறும் என அம்மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். சித்தராமையாவுக்கு தைரியம் இருந்தால் ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க வேண்டும் எனவும் சவால் விடுத்துள்ளார். மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 19 தொகுதிகளில் பாஜக வென்ற நிலையில், 142 சட்டமன்ற தொகுதிகளில் அக்கட்சி அதிக வாக்குகளை பெற்றது.

error: Content is protected !!