news

News July 5, 2024

இன்றைய நல்ல நேரம்!

image

▶ஜூலை – 05 | ▶ஆனி – 21 ▶கிழமை: வெள்ளி | ▶திதி: அமாவாசை ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM வரை, 4:45 PM – 5:45 PM வரை ▶கெளரி நல்ல நேரம்: 12:00 AM – 1:00 AM வரை, 6:30 PM – 7:30 PM வரை ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM வரை ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM வரை ▶குளிகை: 07:30 AM – 09:00 AM வரை ▶சந்திராஷ்டமம்: சுவாதி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்

News July 5, 2024

கல்லூரிகளில் விண்ணப்பிக்க இன்றே கடைசி

image

அரசு கலைக் கல்லூரிகளில் 2 சுற்று கலந்தாய்வு முடிந்துள்ள நிலையில் 63% இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. இந்நிலையில், எஞ்சியுள்ள இடங்களுக்கு விண்ணப்பிக்க மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இன்றுடன் அதற்கு அவகாசம் நிறைவடைவதால் மாணவர்கள் https://www.tngasa.in/ என்ற இணையதளத்தில் இன்று மாலை வரை விண்ணப்பிக்கலாம். இவர்களை கல்லூரியில் சேர்க்கும் நடவடிக்கைகள் ஜூலை 8ஆம் தேதி தொடங்குகிறது.

News July 5, 2024

திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை: சசிகலா

image

திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை, கொலை, கொள்ளை சர்வசாதாரணமாக நடக்கிறது என சசிகலா குற்றம்சாட்டியுள்ளார். சேலத்தில் அதிமுக நிர்வாகி கொலை செய்யப்பட்டிருப்பது, விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் குடித்த நபர் உயிரிழந்தது ஆகியவற்றை குறிப்பிட்டு பேசியுள்ள அவர், தமிழகத்தில் போதைப்பொருள் கலாச்சாரத்தையும், கள்ளச்சாராய விற்பனையையும் தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

News July 5, 2024

இந்திக்கு எதிர்ப்பு, உருதுக்கு இல்லையா?

image

மீனவர்களின் குழந்தைகளுக்கு கடல் சார்ந்த கல்வி கற்றுத்தரப்படும் எனக் கூறுவது குலக்கல்வி இல்லையா? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். மாநில கல்விக் கொள்கை குறித்துப் பேசிய அவர், தமிழகத்தில் அதிக உருது பள்ளிகளை திறக்க வேண்டும் என மாநில கல்விக்கொள்கை கூறுகிறது. இந்தி திணிப்பை எதிர்க்கும் திமுக, ஏன் உருது திணிப்பை ஆதரிக்கிறது? என்றும் வினவியுள்ளார்.

News July 5, 2024

அம்பேத்கர் பொன்மொழிகள்

image

* ஒரு லட்சியத்தை எடுத்துக்கொள்ளுங்கள் அதை அடைவதற்காக விடா முயற்சியுடன் உழைத்து முன்னேறுங்கள்.
* கடவுளுக்கு தரும் காணிக்கையை விட ஒரு ஏழைக்கு தரும் கல்வி மேலானது.
* ஒரு மனிதனின் சிறந்த அடையாளம் சுய மரியாதை அதை இழந்து வாழ்வதுதான் பெரிய அவமானம் .
* அறிவைத் தேடி ஓடுங்கள். நாளைய வரலாறு உங்கள் நிழலாக தேடி ஓடி வரும்.

News July 5, 2024

கோலி மற்றும் ரோஹித் இடத்தை நிரப்பப்போவது யார்?

image

சமீபத்தில் ரோஹித் ஷர்மாவும், விராட் கோலியும் T20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தது தெரிந்ததே. இந்நிலையில், இந்திய அணியில் அவர்களது இடத்தை நிரப்புவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இளம் வீரர்களான ஜெய்ஸ்வால் மற்றும் கில் அவர்களது இடத்தை நிரப்புவார்கள் என நெட்டிசன்கள் கூறுகின்றனர். இவர்கள் வயதிலும் சிறியவர்கள் என்பதால் நீண்ட காலம் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். உங்கள் சாய்ஸ் யார்?

News July 5, 2024

இலை இல்லை என்றாலும், நம்மிடம் கனி இருக்கிறது

image

இரட்டை இலை இல்லை என்றால் என்ன, நம்மிடம் இரட்டை இலையுடன் கூடிய மாங்கனி உள்ளது என ஓபிஎஸ் கூறியுள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக வேட்பாளர் அன்புமணியை ஆதரித்து பேசிய இபிஎஸ் இவ்வாறு கூறியுள்ளார். முன்னதாக பாமகவினர் ஜெயலலிதா புகைப்படத்தை பயன்படுத்தியதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது இரட்டை இலை குறித்து ஓபிஎஸ் பேசியுள்ளது பேசுபொருளாகியுள்ளது.

News July 5, 2024

அசாமில் தொடர்ந்து அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

image

அசாமில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கனமழையில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 46 ஆக இருந்த நிலையில், நேற்று ஒரே நாளில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். கனமழையால் 29 மாவட்டங்களை சேர்ந்த 16 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ள பாதிப்புகள் ஆகஸ்ட் 15க்குள் கணக்கிடப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.

News July 5, 2024

ஜூலை 5: வரலாற்றில் இன்று!

image

* 1687 – ஐசக் நியூட்டன் தனது புகழ்பெற்ற பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்கா நூலை வெளியிட்டார்.
*1954 – முதல் தொலைக்காட்சி செய்தியை BBC ஒளிபரப்பியது.
*1962 – அல்ஜீரியா விடுதலை அடைந்தது.
* 1996 – குளோனிங் முறையில் முதலாவது பாலூட்டி, டோலி என்ற ஆடு ஸ்கொட்லாந்தில் பிறந்தது.
* 1998 – செவ்வாய்க் கோளுக்கு தனது முதலாவது விண்கலத்தை ஜப்பான் ஏவியது.
*2021 – Fr ஸ்டான் சாமி மறைந்தநாள்.

News July 5, 2024

விரைவில் தங்கலான் ட்ரெய்லர்?

image

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பசுபதி, மாளவிகா மோகனன் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘தங்கலான்’. இப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக உள்ளதால் விரைவில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோலார் தங்கச் சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட கஷ்டத்தை மையமாகக் கொண்டு உருவாவதாக கூறப்படுவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. யாரெல்லாம் இந்த படத்திற்கு வெயிட்டிங்?

error: Content is protected !!