news

News July 5, 2024

பசுவுக்கு அகத்திக்கீரை: இத்தனை பலன்களா?

image

பசுவுக்கு அகத்திக்கீரை அளிப்பதால் ஏற்படும் பலன்கள் குறித்து ஆன்மிகத்தில் கூறப்பட்டுள்ளது. அதை தெரிந்து கொள்வோம் * அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும் *கொலை, களவு செய்வதால் உண்டாகும் பிரம்ம ஹத்தி முதலிய தோஷங்கள் விலகிடும் *பித்ரு தோஷங்கள் இருந்தால் நீங்கி சுப வாழ்வு ஏற்படும் *குழந்தைப்பேறு இல்லாத பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் *திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணமாகும்.

News July 5, 2024

2 ஆண்டுகளில் 10,000 ஏசி இல்லாத பெட்டிகள் உற்பத்தி

image

அடுத்த 2 ஆண்டுகளில் 10,000 AC இல்லா பெட்டிகள் உற்பத்தி செய்ய இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. இது குறித்து பேசிய மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு, “2024-25 & 2025-26 ஆண்டுகளில், 232 அதிக திறன் கொண்ட பார்சல் வேன், 165 பேன்ட்ரி கார்கள், 5,300 பொது பெட்டிகளுடன் 10,000 ஏசி இல்லா பெட்டிகள் தயாரிக்கப்படும். உயர்ந்த தர உணவு பயணிகளுக்கு வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

News July 5, 2024

கல்லூரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம் அறிவிப்பு

image

தமிழகம் முழுவதும் அரசு நிதி உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்கள் வரும் 6ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். கடந்த 4 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பணி மேம்பாட்டு ஊதிய நிலுவைத் தொகையை வழங்கக் கோரி போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். ஊதியம் வழங்கிட தேவையான நிதி ஏற்கெனவே ஒதுக்கப்பட்டு, அரசாணையும் வெளியிடப்பட்டது. எனினும், நிலுவைத் தொகை இன்னமும் வழங்கப்படவில்லை.

News July 5, 2024

அஸ்வினியில் பிறந்தவர்கள் சொல்ல வேண்டிய மந்திரம்

image

“ஸ்ரீமதாத்மனே குணைகஸிந்தவே நம: சிவாய தாமலேச தூதலோக பந்தவே நம: சிவாய நாம சோஷிதா நமத் பவாந்தவே நம: சிவாய பாமரேதர ப்ரதாத பாந்தவே நம: சிவாய” ஆதிசங்கரர் அருளிய இந்த ஸ்ரீ சிவ பஞ்சாட்சர அஸ்வினி ஸ்லோகத்தை நட்சத்திர திருநாள், சிவராத்திரி, பிரதோஷம் உள்ளிட்ட நாள்களில் , உடல் & மன சுத்தியுடன் நான்கு முறை பாடி, வில்வம் சமர்ப்பித்து சிவபெருமானை வழிபட கஷ்டங்கள் விலகும்; எண்ணியது ஈடேறும் என்பது ஐதீகம்.

News July 5, 2024

இன்று வெஸ்ட் இண்டீசை எதிர்கொள்ளும் இந்திய அணி

image

உலக சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரில் இன்று இரவு நடைபெறும் போட்டியில் இந்திய சாம்பியன்ஸ் அணி வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதுவரை இரு அணிகளும் தலா 1 போட்டியில் விளையாடியுள்ள நிலையில், இந்தியா ஒரு வெற்றி பெற்றுள்ளது. அதேநேரம் விளையாடிய ஒரு போட்டியில் வெ.இ, தோல்வியடைந்துள்ளது. இன்று நடைபெறும் மற்றொரு போட்டியில் ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

News July 5, 2024

MLAக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு

image

வருகிற 11 மற்றும் 15 தேதிகளில் மக்களுடன் முதல்வர் மற்றும் காலை உணவுத் திட்ட விரிவாக்க நிகழ்ச்சிக்கு அனைத்து எம்.பி, எம்எல்ஏக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் அனைத்து அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது. காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூரில் இத்திட்டத்தை ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

News July 5, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்!

image

* உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது
* திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது
* விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு என மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி ஆதரவு
* அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, பாஜவில் இணைய உள்ளதாக தகவல்

News July 5, 2024

ஜூலை 11இல் முதல்வர் தொடங்கி வைக்கிறார்

image

ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தருமபுரியில் ஜூலை 11-ல் தொடங்கிவைக்க உள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். அங்கு நடைபெறும் விழாவில் கலந்துகொள்ளும் முதல்வர், பல்வேறு முடிவுற்ற திட்டப் பணிகளையும் தொடங்கிவைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். மேலும், புதிய திட்டங்களுக்கான அறிவிப்பையும் வெளியிட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

News July 5, 2024

விக்கிரவாண்டியில் இதுவரை ₹1.07 கோடி பறிமுதல்

image

விக்கிரவாண்டி தொகுதியில், இதுவரை உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ₹1.07 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். அத்துடன், 27 கிலோ வெள்ளி கொலுசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்கிரவாண்டியில் ஜூலை 10ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் விதிமுறைகளை மீறியதாக 43 வழக்குகள் காவல்துறையால் பதிவு செய்யப்பட்டுள்ளன.

News July 5, 2024

தபால் வாக்கு செலுத்தும் பணி தொடங்கியது

image

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும் 10ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலர்கள் நேற்று வட்டாட்சியர் அலுவலகத்தில் தபால் வாக்கை செலுத்தினர். இந்தப் பணி அடுத்த 3 நாள்களுக்கு நடைபெறும் என மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான சி.பழனி தெரிவித்துள்ளார். முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் தபால் வாக்கு சேகரிக்கும் பணி நிறைவடைந்துள்ளது.

error: Content is protected !!