news

News July 5, 2024

இபிஎஸ்க்கு ஆளுநர் அட்வைஸ்?

image

கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம் குறித்து ஆளுநரை சந்தித்து அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் உள்ளிட்டோர் மனு அளித்தனர். அப்போது இபிஎஸ்சிடம் பாஜக- அதிமுக மீண்டும் கூட்டணி அமைக்க ஆளுநர் ஆர்.என். ரவி சில அறிவுரை வழங்கியதாகக் கூறப்படுகிறது. அடுத்த நாளே இபிஎஸ் அளித்த மனுவுடன் டெல்லி சென்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து அவர் ஆலோசனை நடத்தியதாகவும் சொல்லப்படுகிறது.

News July 5, 2024

பிரிட்டனில் ஆட்சி அமைக்கிறது தொழிலாளர் கட்சி

image

பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் தொழிலாளர் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கிறது. அங்கு 650 மக்களவைத் தொகுதிகள் இருக்கும் நிலையில், பெரும்பான்மைக்கு தேவையான 326 இடங்களை அக்கட்சி கைப்பற்றியதால், கெய்ர் ஸ்டார்மர் பிரதமராக தேர்வாக உள்ளார். ஆளும் கன்சர்வேடிவ் கட்சி 69 இடங்களிலேயே வெற்றி பெற்றுள்ளது. இதனால் 14 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த ஆளும்கட்சி வரலாற்றில் இல்லாத வகையில் படுதோல்வி அடைந்துள்ளது.

News July 5, 2024

புது படத்துக்கு திரிஷாவை சிபாரிசு செய்த விஜய்?

image

ஹெச். வினோத் இயக்கும் படமே விஜய் நடிக்கவுள்ள கடைசி படமாக இருக்குமெனக் கூறப்படுகிறது. இதில் தனது ஹீரோயினாக திரிஷாவை புக் செய்யும்படி விஜய் சிபாரிசு செய்ததாகக் கூறப்படுகிறது. இதைக்கேட்ட இயக்குநர் வினோத், பிரபல நடிகைதான் வேண்டும் என்றால், அந்த கதாபாத்திரத்திற்கு சமந்தாதான் பொருத்தமாக இருப்பார், அவரை புக் செய்யலாம் என வேறு ஒருவர் மூலம் விஜய்யிடம் தெரிவித்து விட்டதாகச் சொல்லப்படுகிறது.

News July 5, 2024

விஜய் கருத்தில் தவறு இல்லை: ஆர்.பி. உதயகுமார்

image

தமிழக அரசியலில் நல்ல தலைவர்கள் இல்லை என விஜய் கூறிய கருத்து அதிர்வலையை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், நல்ல தலைவர்கள் தேவை என்றுதான் விஜய் கூறியதாகவும், அது அவருடைய பார்வை என்றும் கூறினார். இளைஞர்களுக்கு நல்ல வழிகாட்டுதல்களை அளிக்க முயற்சிப்பதில் தவறேதும் இல்லை என்றும் தெரிவித்தார்.

News July 5, 2024

தமிழகத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை

image

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அடுத்த 5 நாள்களுக்கு மிக கனமழை தொடரும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. அருணாச்சல், அசாம், மேகாலயாவில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஹிமாச்சல், உ.பி, பிஹார், சிக்கிமில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 40 கி.மீ வேகத் தரைக்காற்று, இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News July 5, 2024

10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

image

T20 WC இந்திய அணியின் வெற்றிப் பேரணி நடந்த மும்பை மரைன் டிரைவில் சாலையில் லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிந்தது அறிந்ததே. ரசிகர் கூட்டத்தால் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்து போனது. அளவுக்கு அதிகமாக சேர்ந்த கூட்டத்தில், சிக்கிய பலருக்கு சுவாச பாதிப்பு போன்ற உடல்நல பிரச்னைகள் காரணமாக 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.

News July 5, 2024

இஸ்ரேல் மீது 200 ராக்கெட் வீசி ஹிஸ்புல்லா தாக்குதல்

image

லெபனானில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஹிஸ்புல்லா தளபதிகளில் ஒருவரான தலேப் அப்துல்லா உள்ளிட்ட 4 பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் உள்ள கோலன் ஹெய்ட்டில் ராணுவ தளங்கள் மீது ஹிஸ்புல்லா 200க்கு மேற்பட்ட ராக்கெட்டுகள், டிரோன்களை விட்டு தாக்குதல் நடத்தியுள்ளது. ஆனால் அவற்றை இடைமறித்து அழித்து விட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

News July 5, 2024

பாஜக மாநில நிர்வாகி குண்டர் சட்டத்தில் கைது

image

பாஜக வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் அலெக்சிஸ் சுதாகர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசாரால் சுட்டுப் பிடிக்கப்பட்ட ரவுடி சீர்காழி சத்யாவுக்கு கள்ளத்துப்பாக்கி வழங்கிய விவகாரத்தில், சிறையில் உள்ள அவர் மீது மேலும் 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், மாவட்ட எஸ்.பி பரிந்துரையின் பேரில் குண்டர் சட்டத்தில் கைது செய்ய செங்கல்பட்டு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

News July 5, 2024

வெள்ளிக்கிழமை கண்ணாடி உடைவது வீட்டுக்கு நல்லதா?

image

வெள்ளிக்கிழமை வீட்டில் கண்ணாடி உடைவது நல்ல சகுனமா? கெட்ட சகுனமா? என கேள்வி எழுவதுண்டு. இதுகுறித்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளதை தெரிந்து கொள்வோம். வீட்டில் எதிர்பாராத விதமாகக் கண்ணாடி உடைவதை நினைத்து மனநெருடல் வேண்டாம். உலகிலுள்ள அனைத்துமே காலத்துக்குக் கட்டுப்பட்டவை. காலம் முடிந்துவிட்டதால் உடைந்ததாக நினைத்து கண்ணாடியை உடனே மாற்றிவிட வேண்டும் என சாஸ்திரம் கூறுகிறது.

News July 5, 2024

பேய் படத்தில் நடிக்கும் கே எஸ் ரவிக்குமார்

image

‘யூ ஆர் நெக்ஸ்ட்’ என்ற பேய் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐ.டி., துறையில் பணியாற்றும் இளைஞர்களை சுற்றி நடக்கும் சம்பவங்களை அமானுஷ்ய கதைக்கள பின்னணியில் இப்படம் உருவாகிவருவதாகக் கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் & இந்தி மொழிகளில் வெளியாகவுள்ள இதில் உதயா, ஜனனி, திவ்யா உள்ளிட்டவர்கள் நடிக்கிறார்கள்

error: Content is protected !!