India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நடிகர் தனுஷுக்கு அடுத்தடுத்த படங்கள் வரிசை கட்டி காத்திருப்பதாக திரை வட்டாரங்கள் கூறுகின்றன.
அவர் நடித்துள்ள ராயன், குபேரா படங்கள் வெளியாகவுள்ள நிலையில், இளையராஜா பயோபிக் படத்தில் நடிக்கவுள்ளார். இதனைதொடர்ந்து, ‘போர் தொழில்’ பட இயக்கிய விக்னேஷ் ராஜாவுடன் கூட்டணி சேர உள்ளதாக தெரிகிறது. க்ரைம் திரில்லர் கதைக்களத்திலான அப்படத்தின் ஒன் லைன் சொல்லி ஓகே வாங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.
உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸில் போலோ பாபா சாமியாரின் சொற்பொழிவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் பலியாகினர். இதில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல் கூறினார். பின்னர் பேசிய அவர், இந்த சம்பவத்தை அரசியலாக்க விரும்பவில்லை என்றும், ஆனால் பாதிக்கப்பட்டோருக்கு அதிக இழப்பீடு வழங்கவும் முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இடைத்தேர்தலில் போட்டியிட அதிமுகவுக்கு துணிச்சல் இல்லை எனக் கூறிய அண்ணாமலைக்கு இபிஎஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசியல் ஞானி போல பேசும் அவருக்கு, ஜனநாயக முறைப்படி இடைத்தேர்தல் நடைபெறவில்லை என்பது தெரியும் என்றும் சாடியுள்ளார். மேலும், அவர் வந்த பின்தான் பாஜக வளர்ந்ததாக ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்குவதாகவும், தமிழக மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல் வாயில் வடை சுடுவதாகவும் விமர்சித்துள்ளார்.
கமல் நடிப்பில் வெளியாகவுள்ள இந்தியன் 2 திரைப்படத்திற்கு சென்சார் போர்டு U/A சான்றிதழ் அளித்துள்ளது. ஆனால் உடன் சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. அதாவது, புகைப்பிடித்தல் குறித்த எச்சரிக்கை வாசகத்தை பெரிய எழுத்துகளில் பயன்படுத்த வேண்டும். காட்சிகளில் ‘ஊழல் சந்தை’ என்ற லேபிளை நீக்க வேண்டும். ‘டர்ட்டி இந்தியன்’ என்ற வசனத்தை நீக்க வேண்டும் உள்ளிட்ட 5 நிபந்தனைகளை விதித்துள்ளது.
பாஜக, அதிமுக மீண்டும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாகவும், கூட்டணிக்கு இபிஎஸ் வைக்கும் நிபந்தனைகளில் அண்ணாமலையை நீக்க வேண்டும் என்பதும் ஒன்று எனக் கூறப்படுகிறது. இதற்கு பிடி கொடுக்காத பாஜக, லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலை.யில் படிக்க 6 மாதம் அனுப்பி அண்ணாமலைக்கு ஓய்வு கொடுக்கவும், பிறகு நாடு திரும்பியதும் தேசிய அரசியலுக்கு அழைக்க திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
விக்கிரவாண்டியில் அதிமுகவுக்கு வாக்களிக்கும் எஸ்சி எஸ்டி பிரிவினர், இம்முறை திமுகவுக்கு அதிகம் வாக்களிப்பர் என்றும், அவர்களில் 5ல் ஒருவர் மட்டுமே பாமகவுக்கு வாக்களிக்க வாய்ப்புள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். சீமானின் நாதக கட்சி, 2024 தேர்தலில் 8,352 வாக்குகளும், 2019 தேர்தலில் 3,167 வாக்குகளும் பெற்றது. இதனால் அக்கட்சி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்று சொல்லப்படுகிறது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக, பாமக, நாதக போட்டியிடுகின்றன. முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக, இத்தேர்தலை புறக்கணிக்கிறது. அதிமுகவின் இந்த முடிவு யாருக்கு பயனைத் தரும் என அரசியல் வட்டாரத்தில் பரவலாக விவாதிக்கப்படுகிறது. தீவிர அதிமுகவினர் பொதுவாக திமுகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்றாலும் ஜாதி வாக்குகள் இடைத்தேர்தலில் முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் கூறப்படுகிறது.
2024 மக்களவைத் தேர்தலில் விக்கிரவாண்டியில் அதிமுக 65,365 வாக்குகள் பெற்றது. 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் பெற்ற வாக்குகளை விட இது 18,800 குறைவாகும். ஏனெனில் 2021 தேர்தலில் பாமக, பாஜக ஆகியவை அதிமுக கூட்டணியில் இருந்தன. ஆனால் 2024 தேர்தலில் அக்கட்சிகள் தனிக்கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அதிமுக கூட்டணியில் தேமுதிக மட்டுமே இருந்தது. இதுவும் அதிமுகவின் வாக்குகள் குறைய காரணமாகக் கூறப்படுகிறது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்ட 5 பேர் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்த பாஜக தமிழ்நாடு பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி பேசினார், அப்போது, மாநில அரசுகள் மத்திய அரசுடன் இணைந்து போதை ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும், அதை விடுத்து அண்டை மாநில அரசுகள் மீது பழி கூறி தப்பிக்க கூடாது எனத் தெரிவித்தார்.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் திடீரென செங்கல் விலை உயர்ந்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக செங்கல் சூளைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதனால், ஏற்பட்ட தட்டுபாடு காரணமாக 3,000 செங்கற்கள் கொண்ட ஒரு லோடின் விலை ₹15,000இல் இருந்து ₹20,000ஆக உயர்ந்துள்ளது. இதனால், கட்டுமானப் பணிகளை மேற்கொள்வது ஒப்பந்ததாரர்களுக்கு சவாலாக மாறியுள்ளது.
Sorry, no posts matched your criteria.