India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நடிகை சமந்தா தனது இன்ஸ்டா பக்கத்தில் ‘நெபுலைசர்’ பயன்படுத்தும் புகைப்படத்தை பதிவிட்டு, “வைரஸ் பாதிப்புக்கு மாற்று வழியாக ஹைட்ரஜன் பெராக்சைடு பயன்படுத்தலாம்” எனத் தெரிவித்திருந்தார். இதற்கு மருத்துவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, “DRDO-வில் 25 ஆண்டுகள் பணியாற்றிய மருத்துவர் எனக்கு அளித்த விலைக் குறைவான சிகிச்சையை நல்ல நோக்கத்துடன் பரிந்துரைத்தேன்” என விளக்கமளித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுக குறித்து தனது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அதிமுகவை சுயலாபத்துக்காகப் சில தலைவர்கள் அழித்துக் கொண்டிருக்கின்றனர் என்றும், மோடியின் முதுகில் குத்திய நம்பிக்கை துரோகி என்றால் அது இபிஎஸ் தான் எனவும் விமர்சித்துள்ளார். மேலும், இடைத்தேர்தலை புறக்கணித்தது போல 2026 சட்டமன்றத் தேர்தலையும் எடப்பாடி புறக்கணிப்பாரா என கேள்வி எழுப்பியுள்ளார்.
விக்கிரவாண்டியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுகளுக்கு உரிமை உள்ளது. பீகார், கர்நாடக அரசுகள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தடை இல்லாத போது, தமிழ்நாட்டிற்கு மட்டும் எவ்வாறு தடை விதிக்கப்படும் என கேள்வி எழுப்பினார். மேலும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மனம் இல்லாமல் திமுக மத்திய அரசின் மேல் பழி போடுகிறது என குற்றம்சாட்டினார்.
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே, இன்று 40 கி.மீ வேகத் தரைக்காற்றுடன், இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு எழுத்து, எண்ணுக்கு, தனித்தன்மை இருப்பதாக நியூமராலஜியில் சொல்லப்பட்டுள்ளது. அதன்படி, D எழுத்திற்கும், அந்த எழுத்தில் தொடங்கும் பெயர் வைத்திருப்பவர்களுக்கும் சில குணங்கள் உள்ளதாக நியூமராலஜி கூறுகிறது. அதை தெரிந்து கொள்வோம். * அமைதியான சூழலை விரும்புவர் * குறிக்கோளுடன் செயல்படுவர் * மற்றவர் உணர்வுகளை புரிந்து கொள்வர் *மிகவும் நம்பகத்தன்மையானவர். இவர்களிடம் ரகசியங்களைப் பகிரலாம்.
உக்ரைனுக்கு எதிரான போர்க் களமுனையில், வடகொரிய துருப்பு & போர் நுட்பங்களை பயன்படுத்த ரஷ்யா முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்கட்டமாக டான்பாஸ் எல்லையில் வடகொரிய 15,000 வீரர்கள் (5 படைப்பிரிவுகள்) நிலைநிறுத்தப்படலாம் என உக்ரைன் ஆய்வாளர் அலெக்சி குஷ்ச் கூறியுள்ளார். மேற்கத்திய நாடுகளின் நவீன ஆயுதங்கள் தாக்குதல்களை எதிர்கொள்ள கொரியா நிலத்தடி போர் நுட்பங்களை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.
மத்தியமேற்கு வங்கக்கடலில் இன்று சூறாவளி மணிக்கு 45- 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ.வேகத்திலும் வீசக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. நாளை 6ஆம் தேதி 65 கி.மீ., 7, 8, 9ஆம் தேதிகளில் 55 கி.மீ.வேகத்தில் வீசக்கூடும். அதேபோல், மத்திய அரபிக்கடலில் 9ஆம் தேதி வரை இடையிடையே 65 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென எச்சரித்துள்ளது.
புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. திமுக வழக்கறிஞர்கள் சார்பில் சென்னையில் இன்று காலை போராட்டம் நடந்த நிலையில், நாளை உண்ணாவிரதம் போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர். இதேபோல், அதிமுக வழக்கறிஞர் தரப்பிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து, ஜூலை 8ஆம் தேதி நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடைபெறும் என வழக்கறிஞர்கள் சங்கங்கள் அறிவித்துள்ளன.
நாடு முழுவதும் 6,100 கி.மீ. தூரத்துக்கு புதிதாக தண்டவாளம் அமைக்கப்பட்டு இருப்பதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த ஆண்டில் 5,300 கி.மீ. தூரமும், இந்தாண்டில் இதுவரை 800 கி.மீ. தூரமும் புதிதாக தண்டவாளம் அமைக்கப்பட்டிருப்பதாகக் கூறினார். ரயில் பாதுகாப்புக்கு “கவாச்” பொருத்தும்பணி துரித கதியில் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தார்.
உலகின் செலவு மிகுந்த நகரங்களின் பட்டியலை மெர்சர் நிதி ஆலோசனை நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள 226 நகரங்களில் 136ஆவது இடத்தை மும்பை மாநகரம் பிடித்துள்ளது. இது தவிர டெல்லி (165), சென்னை (189), பெங்களூரு (195), ஹைதராபாத் (202), புனே (205) ஆகிய நகரங்களும் இடம்பெற்றுள்ளன. இப்பட்டியல் சம்பந்தப்பட்ட நகரங்களில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை செலவினத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.