India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அதிமுக பாஜகவின் மற்றொரு அங்கமல்ல என முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் தெரிவித்துள்ளார். பாஜகவோடு, அதிமுக கூட்டணி மட்டுமே வைத்திருந்ததாக தெரிவித்த அவர், முதுகில் குத்திவிட்டார்கள் என்ற அண்ணாமலை பேச்சு அநாகரிகத்தின் உச்சம் எனவும் விமர்சித்துள்ளார். நம்மோடு கூட்டணி வைக்கவில்லையே என்ற ஆதங்கத்தில், அண்ணாமலை அதிமுகவை குறை சொல்வதை ஏற்க முடியாது என்றும் கூறியுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் மீதான தண்டனையை, சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. 1991-1996 வரை அமைச்சராக இருந்த அவர், ₹1.15 கோடி வருமானத்துக்கு அதிகமாக சொத்துசேர்த்ததாக, 2017ல், 3 ஆண்டு சிறை விதிக்கப்பட்டது. அதன் மேல் முறையீட்டு மனுவில், தண்டனையை ஐகோர்ட் உறுதிசெய்துள்ளது. அரங்கநாயகம் இறந்துவிட்டதால், சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
விளையாட்டு உள்ளிட்ட பொழுது போக்குகளை விட்டுவிட்டு டி.வி., இணையதளங்களில் சிலர் அதிக நேரம் செலவிடுவர். இதனால் சிந்தனை திறன், மொழித் திறன் பாதிக்கப்படுவதாக மருத்துவ இணையதளம் ஒன்றில் வெளியாகியுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு “Digital Dementia” எனக் கூறப்படுவதாகவும், இதன் தீவிரம் அதிகரித்தால், ஞாபகத் திறன் இழந்து, பழையவற்றை மறந்துவிடும் ஆபத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.
எந்தவொரு கட்டுப்பாடும் இல்லாமல் தனியார் நெட்வொர்க் நிறுவனங்கள் மொபைல் கட்டணத்தை எப்படி உயர்த்த முடியும்? என காங்கிரஸ் மூத்த தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து பேசிய அவர், தனியார் நெட்வொர்க் நிறுவனங்கள் ₹34,824 கோடியை கூடுதலாக வசூலிக்க மோடி அரசு எப்படி அனுமதித்தது? எனவும், 109 கோடி செல்போன் பயனாளர்களை TRAI கைவிட்டது ஏன்? என்றும் வினவியுள்ளார்.
திருச்சியில் தலைமறைவாக இருந்த ரவுடி கலைப்புலி ராஜாவை துப்பாக்கிச்சூடு நடத்தி போலீசார் பிடித்துள்ளனர். கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த அவர், சிறுகனூர் வனப்பகுதியில் தலைமறைவாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், அங்கு சென்ற போலீசார் மீது தாக்குதல் நடத்தி விட்டு அவர் தப்ப முயன்றுள்ளார். இதையடுத்து, துப்பாக்கிச்சூடு நடத்தி போலீசார் அவரை மடக்கி பிடித்துள்ளனர்.
2024 டி20 உலகக் கோப்பையை வெல்வதில் முக்கியப் பங்காற்றிய ரோஹித் ஷர்மா, விராட் கோலியை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர். கிரிக்கெட் ரசிகர் ட்வீட் செய்த பதிவு
பலரது கவனத்தை ஈர்த்துள்ளது, அதில், “நாங்கள் குழந்தையாக இருந்தபோது, எங்கள் தந்தை சச்சின் & கங்குலி பற்றி பேசினார்கள்; எங்கள் குழந்தைகளிடம் ரோஹித் & கோலி குறித்து நாங்கள் பேசுவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சிவகார்த்திகேயன், சிபி சக்கரவர்த்தி கூட்டணியில் வெளியான ‘டான்’ திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து, இந்த கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது சிவகார்த்திகேயனின் 24ஆவது படமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதில் ரஷ்மிகா மந்தனா, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடிக்கவிருப்பதாகவும், இப்படத்திற்கு ‘பாஸ்’ என பெயரிடப்பட்டுள்ளதாகவும் திரை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
முதுநிலை நீட் நுழைவுத் தேர்வு ஆக.11ஆம் தேதி நடைபெறும் என தேசிய மருத்துவக் கல்வி வாரியம் அறிவித்துள்ளது. 3 முறை முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் ஆக.11ஆம் தேதி நடக்கும் என தெரிவித்துள்ளது. அத்துடன், இத்தேர்வு காலை, மாலை என இரு வேளைகளில் நடைபெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களை www.natboard.edu.in என்ற இணையதளத்தில் அறிந்துக்கொள்ளலாம்.
தமிழின உணர்வு கொண்ட இளைஞர்களை நடிகர் விஜய்க்குப் பின்னால் சீமான் கொண்டு நிறுத்துவதில் உடன்பாடில்லை என்று தவாக தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு கூட்டணி அமைப்பதில் விஜய்யை விடவும் ‘என் ரத்தம்’ சீமான்தான் ஆர்வமாக இருப்பதாக விமர்சித்த அவர், கூட்டணி அரசியலை நோக்கி நகரும்போது சீமானுக்கும் வேறு வாய்ப்புகள் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
இந்து குடும்பத்தினரில் சிலருக்கு செவ்வாய், வெள்ளி கோயில் செல்லும் வழக்கம் உள்ளது. மேலும் சிலர் வியாழன், சனியன்று கோயில் செல்பவர்களாக இருப்பார்கள். அசைவம் சாப்பிட்ட பிறகு கோயிலுக்கு செல்லக் கூடாது என ஆன்மிகம் தெரிவிப்பதால், அன்றைய தினத்தில் அதை தவிர்க்க வலியுறுத்தப்பட்டது. இதுவே பின்னாளில் செவ்வாய், வெள்ளி, வியாழன், சனிக்கிழமைகளில் அசைவம் சாப்பிடக் கூடாதென கூறப்பட்டு வருகிறது.
Sorry, no posts matched your criteria.