news

News July 5, 2024

கைலாசா தேசம் இருக்கும் இடம் வெளியாகிறது

image

வரும் 21ஆம் தேதி ‘குரு பூர்ணிமா’ தினத்தன்று ‘கைலாசா’ தேசம் அமைந்திருக்கும் இடத்தை அறிவிக்கவிருப்பதாக அதன் நிறுவனர் நித்தியானந்தா அறிவித்திருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன் தலை மறைவான அவர், கைலாசா என்ற புதிய தேசத்தை நிர்மானித்திருப்பதாக சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்து வந்தார். இந்நிலையில், அந்த தேசம் எங்கு இருக்கிறது என்று அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளார்.

News July 5, 2024

இடைத்தேர்தல்: ஜூலை 10இல் பொது விடுமுறை அறிவிப்பு

image

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடைபெறும் ஜூலை 10ஆம் தேதி, விழுப்புரம் மாவட்டம் முழுவதும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணிகள் இரண்டு நாள்களில் நிறைவடையும் என்றும், தொகுதி முழுவதும் 276 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஜூலை 13இல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

News July 5, 2024

மீண்டும் புத்துயிர் பெறுமா BSNL..!

image

மொபைல் கட்டணத்தை தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 25% வரை உயர்த்தியுள்ளதால், அதன் வாடிக்கையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பலர் பொதுத்துறை நிறுவனமான BSNL நெட்வொர்க்குக்கு மாற விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால், அதன் சேவை மோசமாக இருப்பதாக கவலை தெரிவிக்கும் பொதுமக்கள், BSNL நிறுவனத்திற்கு புத்துயிர் அளிக்க வேண்டுமென மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

News July 5, 2024

செப். முதல் காலி பாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம்!

image

டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில் பெறும் திட்டம் செப்டம்பர் முதல் மாநிலம் முழுவதும் அமலுக்கு வரும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணையில், நாளொன்றுக்கு சராசரியாக 70 லட்சம் மதுபாட்டில்கள் விற்கப்படுவதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் கூறியுள்ளது. பாட்டில்களை திரும்ப பெறுவதன் மூலம் அரசுக்கு ₹250 கோடி வருவாய் கிடைக்கும் என டாஸ்மாக் மதிப்பிட்டுள்ளது.

News July 5, 2024

இலவசமாக ஓடிடிகளில் படம் பார்க்க வேண்டுமா?

image

அமேசான், நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட ஓடிடி தளங்கள் மாதம், வருடம் எனத் தனித்தனியாக வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலித்து சேவை வழங்குகின்றன. இவை தவிர்த்து MX Player, TVF Play, Crunchyroll, Sony Liv, Disney+ Hotstar, Zee5 ஆகிய ஓடிடி தளங்கள் கட்டணம், இலவசம் என 2 வகையான சேவைகளை அளிக்கின்றன. இந்த ஓடிடி தளங்களில் குறிப்பிட்ட சில படங்கள், வெப் தொடரை இலவசமாக காண முடியும்.

News July 5, 2024

பிஆர்எஸ்ஸின் 6 எம்எல்சிக்கள் காங்கிரஸுக்கு தாவல்

image

தெலங்கானாவில் பாரத ராஷ்டிர சமிதி கட்சியை சேர்ந்த 6 எம்.எல்.சி.க்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர். தண்டே விட்டல், பானுபிரசாத், தயானந்த், பிரபாகர் ராவ், பசவராஜு, மல்லேசம் ஆகிய 6 எம்.எல்.சி.க்கள் பாரத ராஷ்டிர சமிதி கட்சியில் இருந்து விலகி ரேவந்த் ரெட்டி முன்னிலையில் காங்கிரசில் இணைந்துள்ளனர். கடந்த மாதம் அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் இருவர் காங்கிரசில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

News July 5, 2024

அண்ணாமலை ஒரு பொருட்டே அல்ல: கடம்பூர் ராஜு

image

ஜெயலலிதாவை விமர்சித்தவர்கள் எல்லாம் அவரின் பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்தும் நிலைக்கு வந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். இது குறித்து பேட்டியளித்த அவர், பாஜக கூட்டணியில் இருந்து அண்ணாமலைக்காக வெளியேறவில்லை என்றார். மேலும், அண்ணாமலை எல்லாம் தங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை என விமர்சித்தார். ஜெயலலிதா புகைப்படம் பாமக பேனரில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

News July 5, 2024

பணமோசடி புகார் அளித்த பார்த்திபன்

image

‘இரவின் நிழல்’ படத்தை தொடர்ந்து, ‘டீன்ஸ்’ படத்தை பார்த்திபன் இயக்கி வருகிறார். இப்படத்தின் கிராஃபிக்ஸ் பணிகளை சிவபிரசாத் என்பவர் செய்து வந்துள்ளார். இதற்காக ₹42 லட்சம் முன்பணம் கொடுத்த பார்த்திபன், பணிகளை முடிக்காததால் முழு தொகையான ₹68.50 லட்சத்தை தராமல் கால நீட்டிப்பு செய்திருக்கிறார். இந்நிலையில், சிவபிரசாத் ₹88.38 லட்சம் கேட்பதாக அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

News July 5, 2024

நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது: மத்திய அரசு

image

நீட் தேர்வு மற்றும் நடந்து முடிந்த தேர்வு முடிவுகளை ரத்து செய்யக் கூடாது எனவும், முறைகேடுகள் குறித்த புகார்களை விசாரிக்க சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. வரும் திங்கட்கிழமை நீட் தேர்வுக்கு எதிரான மனுக்கள் மீது விசாரணை நடைபெறவுள்ள நிலையில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News July 5, 2024

புதிய ரேஷன் கார்டு விநியோகம் எப்போது?

image

மக்களவைத் தேர்தல் காரணமாக, பல மாதங்களாக நிலுவையில் வைக்கப்பட்ட ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக செய்தி வெளியானது. ஆனால், புதிய ரேஷன் கார்டு விநியோகம் இன்னும் தொடங்கவில்லை என சேவை மைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். ரேஷன் கார்டு இல்லாததால், நலத்திட்ட உதவிகள் பெற முடியாமல் பலர் தவித்து வரும் நிலையில், அரசு நடவடிக்கை எடுக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

error: Content is protected !!