India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் சிறப்பான மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு தொகுதி வாரியாக பரிசுகள் வழங்கினார் தவெக தலைவர் விஜய். இதற்கான பணம் எங்கிருந்து வருகிறது என்று சிலர் விமர்சனங்கள் எழுப்பியிருந்தனர். அதற்கு பதிலளித்த இயக்குநர் பிரவீன் காந்தி, “விஜய் அனைத்து பரிசுகளையும் தனது சொந்த செலவில்தான் வழங்குகிறார். கட்சியினரிடம் கூட அவர் பணம் பெறவில்லை” என்று கூறினார்.
மத்திய பட்ஜெட்டில் சம்பளதாரர்களுக்கு வரி சலுகையை அறிவிக்க வேண்டுமென, பொருளாதார நிபுணர்கள் அரசுக்கு வலியுறுத்துகின்றனர். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வேகமாக இருந்தாலும், சம்பளம் பெறும் நடுத்தர வர்க்க மக்களின் தனிநபர் வருமான வளர்ச்சி பின் தங்கியுள்ளது. இந்நிலையில், வரி சலுகையை அதிகரிக்கும் போது, மக்களிடம் நுகர்வு அதிகரித்து, பொருளாதார வளர்ச்சி வேகமடையும் என அறிவுறுத்துகின்றனர்.
தங்களின் ஆட்டத்திறனை மாற்றிக்கொள்ள முடியாவிட்டால் பாபர் அசாமும், முகமது ரிஸ்வானும் டி20 அணியில் இடம்பெறவே கூடாது என அந்த அணியின் முன்னாள் வீரர் ரஷீத் லத்தீப் விமர்சித்துள்ளார். கோலி, ரோஹித் ஷர்மாவின் ஆட்டத்தை பார்த்தாவது பாகிஸ்தான் வீரர்கள் மாற வேண்டும் என்ற அவர், இந்த உலகக் கோப்பையில் தங்களின் பழைய ஆட்டத்தை மாற்றிக்கொண்டு ரோஹித்தும், கோலியும் சிறப்பாக விளையாடியதாகவும் தெரிவித்துள்ளார்.
மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என, சீமான் வலியுறுத்தியுள்ளார். அரசியலமைப்பிற்கும், அடிப்படை மனித உரிமைக்கும் எதிராக புதிய சட்டங்கள் உள்ளதாக குறை கூறியுள்ள அவர், நாட்டு மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள இந்த சட்டங்கள் எதேச்சதிகாரப்போக்கின் உச்சம் என்றும் விமர்சித்துள்ளார்.
இரவு 10 மணி வரை பெரம்பலூர், அரியலூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருவண்ணாமலை, காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நெல்லை, ராமநாதபுரம், குமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும், நீலகிரி, கோவை, சென்னை, திருவள்ளூர், ஈரோடு, தஞ்சை, சேலம், தென்காசி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென் கொரியாவின் குமி என்ற நகரில் அரசு ஊழியராக பணியாற்றி வந்த ரோபோ, பணிச்சுமையால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் விநோத நிகழ்வு அரங்கேறியுள்ளது. ‘ரோபோ சூப்பர்வைசர்’ என அழைக்கப்படும் இந்த ரோபோ, மாடிப் படியில் இருந்து தவறி விழுந்து செயலிழந்தது. முன்னதாக அந்த ரோபோ அங்கும், இங்குமாக விநோதமாக சுற்றித் திரிந்ததாக அங்கிருந்தவர்கள் கூறுகின்றனர். அளவுக்கு அதிகமான வேலைகளை ரோபோ செய்து வந்துள்ளது.
உலகின் முன்னணி மொபைல் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள், ஐஃபோன்களை இந்தியாவில் தயாரித்து வெற்றிகரமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. இதனைதொடர்ந்து, கூகுள் நிறுவனம் அதன் பிக்சல் ஃபோன்களை இந்தியாவில் தயாரிக்க
முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் பிக்சல் ஃபோன்களை தயாரித்து ஐரோப்பா மற்றும் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தியா – ஜிம்பாப்வே இடையேயான டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி நாளை தொடங்குகிறது. ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேவில் நாளை மாலை 4.30 மணிக்கு (இந்திய நேரப்படி) போட்டி நடைபெறவுள்ளது. இதற்காக, ஷுப்மன் கில் தலைமையிலான இளம் அணி ஹராரே சென்றிருக்கிறது. இத்தொடரில், ஜூலை 14ஆம் தேதி வரை 5 டி20 போட்டிகள் நடைபெறவுள்ளன. ஜிம்பாப்வே அணிக்கு சிக்கந்தர் ராசா கேப்டனாக களம் இறங்குகிறார்.
ஹத்ராஸ் போன ராகுல், கள்ளக்குறிச்சிக்கு ஏன் வரவில்லை? என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் அரசின் கவனக்குறைவால் நடைபெறும் உயிரிழப்புகளை மட்டும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் நேரில் பார்க்க வருவதில்லை என விமர்சித்துள்ளார். கள்ளக்குறிச்சி உயிரிழப்புக்குப் பிறகும் திமுக அரசு டாஸ்மாக் கடைகளை குறைப்பதற்கு இதுவரை எந்த முயற்சி எடுக்கவில்லை என்றும் அவர் சாடினார்.
டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு மகாராஷ்டிர அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. அப்போது பேசிய கேப்டன் ரோஹித் ஷர்மா, “மில்லர் அடித்த பந்து தனது கையில் சிக்கிக் கொண்டதாக சூர்யகுமார் கூறினார். இல்லாவிட்டால், அவர் என்னிடம் சிக்கியிருப்பார்” என்று வேடிக்கையாக பேசினார். இந்த விழாவில் அம்மாநில முதல்வர் ஷிண்டே, துணை முதல்வர் ஃபட்நாவிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.