news

News July 5, 2024

ஆம்ஸ்ட்ராங் படுகொலை அதிர்ச்சியளிக்கிறது: இபிஎஸ்

image

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தேசியக் கட்சியின் மாநிலத் தலைவரையே படுகொலை செய்கிறார்கள் என்றால், திமுக ஆட்சியின் சட்டம், ஒழுங்கை என்னவென்று விமர்சிப்பது? என கேள்வி எழுப்பியுள்ளார். காவல்துறை மீது அச்சமற்ற நிலை இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

News July 5, 2024

4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவரா நீங்கள்..?

image

4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் 4ஆம் எண் ஆதிக்கம் கொண்டவர்கள் என எண் கணித ஜோதிடர்கள் கூறுகின்றனர். 4ஆம் எண்ணின் அதிபதி ராகு என்பதால், இந்த தேதிகளில் பிறந்தவர்களின் குணாதிசயங்களை யாராலும் துல்லியமாக கணிக்க முடியாது என கூறப்படுகிறது. நண்பர்களுக்காக செலவு செய்ய தயங்க மாட்டார்கள். ஆராய்ச்சி, புலனாய்வு, செய்தி ஊடகம், காவல் ஆகிய துறைகளில் சிறந்து விளக்குவார்கள் எனத் தெரிவிக்கின்றனர்.

News July 5, 2024

உணவு டெலிவரி ஊழியர்கள் போல வந்து கொலை

image

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங்கை கொலை செய்தவர்கள் உணவு டெலிவரி நிறுவன ஊழியர்கள் போல உடையணிந்து வந்தது தெரிய வந்துள்ளது. பெரம்பூரில் இருக்கும் அவரது வீட்டு வாசலிலேயே 6 பேர் கொண்ட குழு இரு சக்கர வாகனங்களில் வந்து கொலை செய்துள்ளது. இவர்கள் இல்லாமல் 10 பேர் தெரு முனைகளில் நின்று நோட்டமிட்டதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

News July 5, 2024

அடுத்தடுத்து அரசியல் கொலைகள்

image

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று சேலம் அதிமுக பகுதிச் செயலாளர் சண்முகம் கொலை செய்யப்பட்ட நிலையில் இன்று மீண்டும் ஒரு அரசியல் படுகொலை நடந்துள்ளது. இதுபோன்ற தொடர் சம்பவங்களால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறி ஆகியுள்ளதாக எதிர்க்கட்சிகள் குரல் எழுப்புகின்றனர். நடவடிக்கை எடுக்குமா அரசு?

News July 5, 2024

₹11 கோடி பரிசுத்தொகை அறிவிப்பு

image

டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணிக்கு மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ₹11 கோடி பரிசுத்தொகை அறிவித்துள்ளார். கேப்டன் ரோஹித் ஷர்மா, அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ், ஜெய்ஸ்வால், துபே உள்ளிட்ட வீரர்களை இன்று நேரில் அழைத்து பாராட்டிய அவர், இந்த பரிசு தொகையை அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதற்கிடையே, கோப்பை வென்றதற்காக இந்திய அணிக்கு ₹125 கோடி பரிசுத் தொகையை பிசிசிஐ அறிவித்திருந்தது.

News July 5, 2024

கேள்விக்குறி ஆகிறதா சட்டம் ஒழுங்கு?

image

தமிழகத்தின் முக்கிய அரசியல் பிரமுகராக இருந்தவர் ஆர்ம்ஸ்ட்ராங். அவரை மர்ம கும்பல் கொலை செய்திருப்பது தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து பல கேள்விகளை எழுப்புகிறது. தேசியக் கட்சியின் மாநிலத் தலைவருக்கே பாதுகாப்பு இல்லாத நிலையில், தமிழ்நாடு இருப்பதாக எதிர்க்கட்சியினர் சமூக வலைதளங்களில் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.

News July 5, 2024

ஆம்ஸ்ட்ராங்கின் அரசியல் பயணம்

image

சென்னை பெரம்பூரைச் சேர்ந்த ஆம்ஸ்ட்ராங், 2000ஆம் ஆண்டு முதல் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். சட்டம் பயின்ற அவர், 2006 ஆம் ஆண்டு தனித்து நின்று சென்னை மாமன்ற உறுப்பினர் ஆனார். பிறகு, பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்த அவர், 2007ஆம் ஆண்டு அக்கட்சியின் மாநிலத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2011ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளை பெற்றிருந்தார்.

News July 5, 2024

ஆசிரியருக்காக ஒரே நேரத்தில் TC வாங்கிய 133 மாணவர்கள்

image

பள்ளியில் தமக்கு பிடித்தமான ஆசிரியர் இடமாற்றம் பெறும்போது, மாணவர்கள் அழுவது வழக்கமான நிகழ்வுதான். ஆனால், தெலங்கானா மாநிலம் போனகல் பகுதியில் உள்ள ஆரம்ப பள்ளியில், ஸ்ரீனிவாஸ் என்ற ஆசிரியர் இடமாற்றம் அடைந்த போது, 133 மாணவர்கள் TC பெற்று, அவர் புதிதாக பொறுப்பேற்ற பள்ளிக்கு மாறியுள்ளனர். ஸ்ரீனிவாஸ் ஆசிரியருக்காக பழைய பள்ளியில் இருந்து 3 கி.மீ. தூரமுள்ள பள்ளியில் சேர்ந்ததாக மாணவர்கள் கூறுகின்றனர்.

News July 5, 2024

ஐஸ்லாந்து நாட்டை விட இருபது மடங்கு கூட்டம்

image

மும்பையில் நேற்று நடைபெற்ற டி20 உலகக் கோப்பை வெற்றிக் கொண்டாட்டத்தின் போது ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கடற்கரையில் கூடினர். இதனை வர்ணித்திருக்கும் ஐஸ்லாந்து கிரிக்கெட் அணியின் X பக்கம், “எங்கள் நாட்டு மொத்த மக்கள் தொகையை விட இருபது மடங்கு மக்கள் இங்கே கூடியுள்ளனர்” என்று குறிப்பிட்டது. ஐஸ்லாந்து நாட்டின் மொத்த மக்கள் தொகை 3.8 லட்சம் மட்டுமே.

News July 5, 2024

பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை

image

சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்த ஆம்ஸ்ட்ராங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தப்பியோடிய 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சென்னை மாநகர் பரபரப்பாக காணப்படுகிறது.

error: Content is protected !!