news

News July 5, 2024

தென்னாப்பிரிக்கா அணிக்கு முதல் வெற்றி

image

இந்திய மகளிர் அணிக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி அபார வெற்றிபெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த தெ.ஆ., 4 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 177/4 ரன்கள் எடுத்து போராடி தோல்வியடைந்தது. இந்தியாவுக்கு எதிரான ODI, டெஸ்டில் ஒரு வெற்றிகூட பெறாத தெ.ஆ., அணிக்கு இது முதல் வெற்றியாகும்.

News July 5, 2024

வைட்டமின் சி-யை பலமடங்கு அள்ளித்தரும் கொய்யா

image

உடலுக்கு நன்மை தரக்கூடிய பழங்களில் முக்கியமானது கொய்யா. வைட்டமின் சி-யின் சிறந்த மூலமாக கொய்யா உள்ளது. இதில் ஆரஞ்சு பழங்களை விட 2 மடங்கு அதிகமான வைட்டமின் சி உள்ளது. நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்வதிலும், நோய்கள் மற்றும் தொற்றுகளுக்கு எதிராக நம்மை பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. கொய்யாவில் லோ-கிளைசெமிக் இன்டெக்ஸ் இருப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற பழமாக உள்ளது.

News July 5, 2024

திமுக ஆட்சியில் வன்முறை வாடிக்கை: அண்ணாமலை

image

பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சியளிப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 3 ஆண்டுகால ஆட்சியில் வன்முறை வழங்கமாகிவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். பதவியில் தொடர தார்மீக பொறுப்பு இருக்கிறதா? என்பதை முதல்வர் ஸ்டாலின் தன்னை தானே கேட்டுக்கொள்ள வேண்டுமெனவும் அவர் விமர்சித்துள்ளார்.

News July 5, 2024

12 ராசிகளுக்கான பலன்கள்

image

* மேஷம் – வரவு கிடைக்கும், *ரிஷபம் – ஆக்கப்பூர்வமான செயலில் ஈடுபடுங்கள் *மிதுனம் – திறமையாக செயல்படுங்கள், *கடகம் – உதவி தேடி வரும், *சிம்மம் – இன்பமான நாள், *கன்னி – வாழ்வு சிறக்கும், *துலாம் – கவனமுடன் செயல்படுங்கள், *விருச்சிகம் – நலம் பெறுவீர்கள், *தனுசு – தேவையில்லாத பயம் ஏற்படும், *மகரம் – லாபம் கிடைக்கும், *கும்பம் – முயற்சி செய்தால் வெற்றி கிடைக்கும், *மீனம் – புகழடைவீர்கள்.

News July 5, 2024

ஒடுக்கப்பட்டவர்களின் போராளி ஆம்ஸ்ட்ராங்: ஜவாஹிருல்லா

image

பகுஜன் சமாஜ் கட்சியில் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதற்கு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். ஆம்ஸ்ட்ராங் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகச் சளைக்காமல் களப்பணி ஆற்றியதாக அவர் புகழாரம் சூட்டியுள்ளார். ஆம்ஸ்ட்ராங்கை பிரிந்து வாடும் அவரது உறவினர்களுக்கும், கட்சித் தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை அவர் தெரிவித்துள்ளார்.

News July 5, 2024

சமையலறை பாத்திரங்களுக்கு ISI முத்திரை கட்டாயம்

image

துருப்பிடிக்காத எஃகு மற்றும் அலுமினிய சமையலறை பாத்திரங்களுக்கு இந்திய தரநிலை நிறுவனத்தின் (ISI) முத்திரை கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம், ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத எஃகு அல்லது அலுமினியப் பாத்திரங்களின் உற்பத்தி, இறக்குமதி, விற்பனை மற்றும் விநியோகத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உத்தரவை பின்பற்றாத நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும்.

News July 5, 2024

தேர்தல் தோல்வி தொடர்பாக இபிஎஸ் ஆலோசனை

image

நாடாளுமன்ற தேர்தல் தோல்வி தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் இபிஎஸ் விரைவில் ஆலோசனை நடத்தவுள்ளார். ஜூலை 10 முதல் 19ஆம் தேதி வரை ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர்களுடன், தோல்விக்கான காரணம் குறித்து இபிஎஸ் விவாதிக்க உள்ளார். தேர்தலில் சில இடங்களில் அதிமுக வேட்பாளர்கள் டெபாசிட் இழந்ததால், திமுக, பாஜகவினர் அதிமுகவை கடுமையாக விமர்சித்திருந்தனர்.

News July 5, 2024

12 மாவட்டங்களில் மழை பெய்யும்

image

தமிழகத்தில் இரவு மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 5, 2024

குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைப்பு

image

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உணவு டெலிவரி செய்வது போல இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் அவரை வெட்டிக் கொலை செய்துவிட்டு, தப்பியோடியுள்ளனர். இந்நிலையில், 5 தனிப்படை அமைத்து, கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

News July 5, 2024

ஆம்ஸ்ட்ராங் மரணத்தால் ஸ்தம்பித்தது சென்னை

image

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதால் சென்னையில் ஆங்காங்கே போராட்டம் வெடித்துள்ளது. பெரம்பூரில் அவரது இல்லம் அருகே ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பேருந்து உள்ளிட்ட வாகனங்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மற்றும் அப்போலோ மருத்துவமனை வளாகங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!