news

News July 6, 2024

தாக்குதலில் ஈடுபடுபவர்கள் நிரந்தர நீக்கம்

image

தாக்குதல் போன்ற தவறான சம்பவங்களில் ஈடுபடும் சட்ட கல்வி மாணவர்கள் சீர்மிகு சட்ட பள்ளியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள் என அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பிறரை தாக்குவது என்பது, சட்டத்தை கையில் எடுப்பதாகும். சட்ட பல்கலைக்கழகத்தில் இதுபோன்ற செயல்கள் ஏற்புடையதல்ல என பல்கலை., தெரிவித்துள்ளது. தற்போது வரை இதுபோன்ற செயலில் ஈடுபடுபவர்கள் தற்காலிகமாக நீக்கப்பட்டு வருகின்றனர்

News July 6, 2024

அப்துல் கலாம் பொன்மொழிகள்

image

✍பிரபஞ்சத்தை விட அபார சக்தி கொண்டது உன் மூளை. பிறகென்ன கவலை?
✍நல்ல எண்ணங்கள் வளர, வளர உள்ளத்தில் வலுவான சக்திகள் உருவாகும்.
✍நீங்கள் உறங்கும்போது வருவதல்ல கனவு. உங்களை உறங்க விடாமல் செய்வதே கனவு.
✍சாவி இல்லாத பூட்டு இருக்காது. அதுபோல், தீர்வு இல்லாத பிரச்னையும் இருக்காது.
✍உங்கள் பழக்கவழக்கங்கள் உங்கள் எதிர்காலத்தையே மாற்றும்.
✍சுறுசுறுப்பாக இருங்கள், பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள்.

News July 6, 2024

36 வயது பெண்ணை விழுங்கிய மலைப்பாம்பு

image

இந்தோனேசியாவின் தெற்கு சுலாவேசி மாகாணத்தை சேர்ந்த 36 வயது பெண்ணை கடந்த ஜூலை 2ஆம் தேதி முதல் காணவில்லை. போலீசில் அவர் புகார் கொடுத்த நிலையில், எங்கு தேடியும் காணவில்லை. இதையடுத்து அவரது வீட்டிற்கு அருகே அவரது செருப்பு காணப்பட்ட நிலையில், அப்பகுதியில் தேசிய நிலையில், மலைப்பாம்பு ஒன்று நகர முடியாமல் படுத்துள்ளது. அதன் வயிற்றைக் கிழித்து பார்த்தபோது, காணாமல்போனதாக கூறப்பட்ட பெண் உள்ளே இருந்துள்ளார்.

News July 6, 2024

இந்தியா சாம்பியன்ஸ் அபார வெற்றி

image

உலக சாம்பியன்ஷிப் லீக் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் குர்கீரத் சிங் 86, உத்தப்பா 43, யுவராஜ் 38 ரன்கள் எடுக்கவே 20 ஓவரில் 229/5 ரன்கள் கிடைத்தது. பின்னர் வெ.இ., 5 ஓவரில் 31/1 ரன்கள் இருந்தபோது மழை குறுக்கிட்டதால், டக்வர்த் லீஸ் விதிப்படி இந்தியா வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

News July 6, 2024

ஜூலை 6: வரலாற்றில் இன்று!

image

*1947- AK47 துப்பாக்கிகளை சோவியத் தயாரிக்க ஆரம்பித்தது.
*1870 – அறிஞர் பரிதிமாற் கலைஞர் பிறந்தநாள்.
*1935 – சிங்கப்பூரின் தமிழ் நாளிதழ் முரசு ஆரம்பிக்கப்பட்டது.
*1956 – சிங்களம் இலங்கையின் அதிகாரபூர்வ மொழியானது.
*1892 – தாதாபாய் நௌரோஜி பிரித்தானிய நாடாளுமன்றத்தின் முதலாவது இந்தியப் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
*1975 – பிரான்சிடம் இருந்து கொமொரோசு விடுதலை பெற்றது.

News July 6, 2024

அமித் ஷாவுடன் திருச்சி சிவா சந்திப்பு

image

உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, மாநிலங்களவைத் திமுக குழுத் தலைவர் திருச்சி சிவா சந்தித்தார். 3 குற்றவியல் சட்டங்களில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி அவற்றை திரும்பப் பெற்று, திருத்தங்களை மேற்கொண்டு மீண்டும் நிறைவேற்றிட வேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை அவர் நேரில் வழங்கினார். இந்த புதிய சட்டங்களுக்கு எதிராக, திமுக இன்று மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்தியது.

News July 6, 2024

தினமும் காலையில் பீட்ரூட் ஜூஸ் குடிங்க

image

தினமும் காலையில் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என வல்லுநர்கள் கூறுகின்றனர். அவை 1. ரத்த அணுக்கள் உற்பத்தியை தூண்டுவதோடு, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும். 2. மூளைக்கு ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதுடன், ஆக்ஸிஜனேற்றத்தை அதிகரிக்க உதவும். 3. ரத்த நாளங்களை விரிவுபடுத்தும், ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும், ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். 4. செரிமானத்திற்கு உதவும்.

News July 6, 2024

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர் செய்ய வேண்டும்: சீமான்

image

தேசிய கட்சியின் தலைவருக்கே பாதுகாப்பு இல்லை என்றால் சாமானிய மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கும்? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அவர், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளதாக விமர்சித்துள்ளார். கொலையாளிகளுக்கு கடும் தண்டனை கொடுக்க வேண்டும் என்ற அவர் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்செய்ய வலியுறுத்தியுள்ளார்.

News July 6, 2024

தினம் ஒரு திருக்குறள்!

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: ஊழியல் ▶அதிகாரம்: ஊழ் ▶குறள் எண்: 375 ▶குறள்: நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும் நல்லவாம் செல்வம் செயற்கு. ▶பொருள்: நல்ல செயல்களை ஆற்ற முற்படும்போது அவை தீமையில் போய் முடிந்துவிடுவதும், தீய செயல்களை ஆற்றிட முனையும்போது அவை நல்லவைகளாக முடிந்து விடுவதும் இயற்கை நிலை எனப்படும்.

News July 6, 2024

ஆம்ஸ்ட்ராங் உடன் இருந்த இருவருக்கும் வெட்டு

image

சென்னையில் நேற்று மாலை பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் 8 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தின்போது ஆம்ஸ்ட்ராங் உடன் இருந்த வீரமணி மற்றும் பாலாஜி என்ற இருவர் மீதும் அந்த கும்பல் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், வீரமணிக்கு காதில் 17 தையல்களும், முதுகில் 9 தையல்களும் போடப்பட்டுள்ளது. பாலாஜி என்பவருக்கு காலில் வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது.

error: Content is protected !!