India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று மாலை அவரது வீட்டருகே 8 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார். கொலை நடந்த 5 மணி நேரத்தில் 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து, பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி இன்று ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த உள்ளார்.
இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில், இந்த முறை அதிகபட்சமாக 26 இந்திய வம்சாவளிகள் வெற்றி பெற்றுள்ளனர். கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த ரிஷி சுனக், சுவெல்லா பிரேவர்மன், பிரீதி படேல், கிளேர் கவுண்டினோ உள்ளிட்ட சிலர் வெற்றி பெற்றுள்ளனர். தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த சீமா மல்கோத்ரா, பிரீத்தி கவுர் கில், தன் மன்ஜீத் சிங் தேசி ஆகியோர் வென்றுள்ளனர். மேலும் வெற்றி பெற்றவர்களில் பல புதுமுகங்களும் உள்ளனர்.
விக்கிரவாண்டி தொகுதியில் வருகிற 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடப்பதையொட்டி தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அங்கு 8ஆம் தேதி மாலை 6 மணிக்கு பிறகு வெளிநபர்கள் நுழையவும், தங்கியிருக்கவும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. தேர்தல் பிரசாரம் உள்ளிட்டவை மேற்கொள்ளக் கூடாது, இதை மீறினால் 2 ஆண்டு சிறை விதிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
உலக சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டியில் இன்று இரவு 9 மணிக்கு நடைபெறும் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. யுவராஜ் தலைமையிலான இந்திய அணி இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில உள்ளது. அதே நேரம் பாகிஸ்தான் அணியும் இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது. இன்று எந்த அணி வெற்றிபெறும்?
* டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில் பெறும் திட்டம் செப்டம்பர் முதல் மாநிலம் முழுவதும் அமல்
* முதுநிலை நீட் நுழைவுத் தேர்வு ஆக.11ஆம் தேதி நடைபெறும்.
* ஜூலை 15 முதல் புதிதாக 1.48 லட்சம் பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை ₹1000 வழங்கப்படும் – முதல்வர் ஸ்டாலின்
* நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் முன்ஜாமின் மனு மீது இன்று தீர்ப்பு
ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசுதான் நடத்த வேண்டும், மாநில அரசு நடத்த முடியாதது என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரை ஆதரித்து பேசிய அவர், பிஹார் அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய நிலையில், மாநில அரசுக்கு இதற்கு அதிகாரமில்லை என உயர்நீதிமன்றம் தெரிவித்தது. மத்திய அரசுக்கு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த விருப்பமில்லை என்றார்.
போக்குவரத்து தொழிலாளர்களையும், போக்குவரத்து கழகத்தையும் தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கூறியுள்ளார். இது தொடர்பான தனது அறிக்கையில், ஒரு லட்சத்து 81 ஆயிரம் முறை இயக்குவதற்கு மினி பஸ்களை தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சியை கைவிட வேண்டும். அதற்கான அரசாணையையும் ரத்து செய்து, திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு, கேரளா எல்லையான தேனி, கோவை, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் டெங்கு பரவல் அதிகரித்துள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் பரவலாக மழை பெய்துவருவதன் காரணமாக காய்ச்சல் பரவ தொடங்கியதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், காய்ச்சல் இருந்தால் மருத்துவரை அணுகவும், தேங்காய் சிரட்டை, உடைந்த பானைகள் போன்றவற்றில் நீர் தேங்காமல் பாதுகாக்கவும் அறிவுறுத்தியுள்ளது.
மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து திமுக சார்பில் சென்னையில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது. இன்று காலை 10 மணியளவில் எழும்பூரில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் திமுக சட்டப்பிரிவு நிர்வாகிகள், அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியம் மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் கலந்துகொள்ள உள்ளன. புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது.
▶ஜூலை – 06 | ▶ஆனி – 22 ▶கிழமை: சனி | ▶திதி: பிரதமை ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM வரை, 3:15 PM – 4:15 PM வரை ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM வரை, 9:30 PM – 10:30 PM வரை ▶ராகு காலம்: 09:00 AM – 10:30 PM வரை ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM வரை ▶குளிகை: 6:00 AM – 7:30 AM வரை ▶சந்திராஷ்டமம்: சித்திரை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்.
Sorry, no posts matched your criteria.