news

News July 6, 2024

நடிகையிடம் அத்துமீறிய ரசிகர்கள்

image

பிரபாஸின் பான் இந்தியா படமான சாஹோவில் நடித்ததன் மூலம் நடிகை ஷ்ரத்தா கபூர் பிரபலமானார். பாலிவுட் நடிகையான இவர், லக்னோவில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க, ஓட்டலில் இருந்து வெளியே வந்தபோது, அவரை காண ரசிகர்கள் குவிந்தனர். பாதுகாவலர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த திணறியதால், நடிகையை சிலர் அத்துமீறி தொட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கைக்குலுக்கவும், புகைப்படம் எடுக்கும் சாக்கில் அவர்கள் அத்துமீறியுள்ளனர்.

News July 6, 2024

ஆதிதிராவிடருக்கு மண்டகப்படி மறுப்பது சட்டவிரோதம்

image

ஆதிதிராவிடர்களுக்கு கோயிலில் மண்டகப்படி மறுப்பது சட்டவிரோதம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை மேலமங்கலம் கோயிலில் ஆதிதிராவிட குடும்பங்களுக்கு மண்டகப்படி உரிமை வழங்க உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதை விசாரித்த நீதிபதிகள், மண்டகப்படி உரிமை அளிப்பது தொடர்பாக அனைத்து சமூகத்தினருடன் அமைதி பேச்சுக்கு ஏற்பாடு செய்ய தாசில்தாருக்கு உத்தரவிட்டது.

News July 6, 2024

ஆம்ஸ்ட்ராங் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

image

சென்னையில் படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்தினர், உறவினர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இக்கொலைச் சம்பவம் பேரதிர்ச்சியும், வருத்தமும் தருவதாக கூறிய அவர், கொலையில் சம்பந்தப்பட்டவர்களைக் காவல்துறை இரவோடு இரவாகக் கைது செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், வழக்கை விரைவாக நடத்தி, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர உத்தரவிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

News July 6, 2024

இபிஎஸ், அண்ணாமலை வார்த்தை யுத்தம்

image

மக்களவைத் தேர்தலில் கோவையில் அண்ணாமலை பொய் சொல்லி வாக்கு கேட்டதாகவும், பாஜக தோல்விக்கு அவரே காரணம் என்றும் இபிஎஸ் நேற்று விமர்சித்திருந்தார். மோடியின் முதுகில் இபிஎஸ் குத்திவிட்டதாகவும், நம்பிக்கை துரோகி என்றும் அண்ணாமலை குற்றஞ்சாட்டியிருந்தார். அதிமுக, பாஜக கூட்டணி பேச்சு நடப்பதாக கூறப்படும் நிலையில், 2 பேரும் பரஸ்பரம் விமர்சித்தது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News July 6, 2024

நிலப்பரப்பு: இந்தியாவின் ஒரு மாநிலமே பிரிட்டன் நாடு

image

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசம் 2,41,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டதாகும். இதைவிட சற்று சிறிய அளவே பிரிட்டனின் நிலப்பரப்பு அதிகமாகும். பிரிட்டனின் நிலப்பரப்பின் அளவு 2,43,610 கிலோ மீட்டர் ஆகும். மக்கள் தொகையில் கர்நாடகாவை விட பிரிட்டனின் மக்கள் தொகை குறைவாகும். கர்நாடக மக்கள் தொகை 6.68 கோடியாகும். பிரிட்டனின் மக்கள் தொகை 6.76 கோடியாகும்.

News July 6, 2024

இடைத்தேர்தல்: இபிஎஸ் கோரிக்கையை ஓபிஎஸ் ஏற்பு?

image

ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு கடந்த ஆண்டு நடந்த இடைத்தேர்தல் குறித்து அண்ணாமலை நேற்று பேசுகையில், ஓபிஎஸ் தரப்பில் யாரும் போட்டியிட வேண்டாம் என தன்னிடம் இபிஎஸ் கோரிக்கை விடுத்ததாகவும், இதையேற்று ஓபிஎஸ் தரப்பில் யாரும் போட்டியிடவில்லை என்றும் கூறினார். அரசியலில் எதிரெதிர் துருவமாக உள்ள நிலையில், இபிஎஸ் கோரிக்கையை ஓபிஎஸ் ஏற்றாரா? அண்ணாமலை சொன்னது உண்மைதானா? எனக் கேள்வி எழுந்துள்ளது.

News July 6, 2024

பட்டா மாற்றத்திற்கு விண்ணப்பிக்க இணையதளம்

image

தமிழக அரசின் நில அளவை மற்றும் நிலவரித் திட்டத்தின் இயக்குனர் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், கிராமப்புறம், நகர்ப்புறம், நத்தம் பகுதிகளுக்கான பட்டா மாற்றம் மேற்கொள்ள https://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம், <>https://eservices.tn.gov.in/eservicesnew/home.html <<>>இல் எங்கிருந்தும் பட்டா, சிட்டா பதிவிறக்கம் செய்யலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

News July 6, 2024

ஆம்ஸ்ட்ராங் மரணம் அதிர்ச்சி அளிக்கிறது: விஜய்

image

சென்னையில் வெட்டிக் கொல்லப்பட்ட பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்தினருக்கும் அவரது கட்சியினருக்கும் தவெக தலைவர் விஜய் ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்துள்ளார். இந்த படுகொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிப்பதாக கூறிய அவர், இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக அரசு தீவிரமாக முன்னெடுக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

News July 6, 2024

போலே பாபாவின் அதிரடி பாதுகாப்பு படை

image

உ.பியில் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் பலியாக காரணமாக இருந்த சாமியார் போலே பாபா, தனியாக பாதுகாப்பு படைகளை வைத்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 100 பேர் அடங்கிய கருப்பு பூனை படை, 5,000 பேர் அடங்கிய பிங்க் படை, இளம்பெண்களின் கோபியர் படையும் அவரிடம் உள்ளதாகத் தெரிவித்தனர். சாமியாரின் நிகழ்ச்சிகளில் போலீசார் கூட்ட அரங்கிற்கு வெளியேதான் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதாகவும் தெரியவந்துள்ளது.

News July 6, 2024

பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ₹1.3 கோடி அபராதம்

image

பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ரிசர்வ் வங்கி ₹1.3 கோடி அபராதம் விதித்துள்ளது. கேஒய்சி இணைப்பு, கடனுதவி மற்றும் முன்தொகை தொடர்பாக ரிசர்வ் வங்கி பிறப்பித்திருந்த உத்தரவை பஞ்சாப் நேஷனல் வங்கி பின்பற்றவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த வங்கியிடம் ரிசர்வ் வங்கி விளக்கம் கேட்டிருந்தது. இதையடுத்து தற்போது பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது.

error: Content is protected !!