news

News July 6, 2024

இந்தியா, ஜிம்பாப்வே போட்டியை எதில் பார்க்கலாம்?

image

இந்தியா, ஜிம்பாப்வே அணிகள் இடையேயான முதல் டி20 போட்டி இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது. இந்தப் போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் சேனல் குழு சேனல்களில் நேரலையாக காண முடியும். இது அனைத்தும் கட்டண சேனல்கள் ஆகும். இதேபோல் ஓடிடியில் இப்போட்டியை காண வேண்டுமெனில், சோனி லைவ் ஓடிடியில் காணலாம். இதுவும் கட்டண அடிப்படையிலேயே ஒளிபரப்பப்படுகிறது. சோனி லைவ் ஓடிடி சந்தா கட்டியோரே இதை காணலாம்.

News July 6, 2024

தகவல் கசிவு: ஏர்டெல் நிறுவனம் மறுப்பு

image

ஏர்டெல் சிம் கார்டை பயன்படுத்தும் 37.5 கோடி வாடிக்கையாளர்களின் தரவுகள் திருடப்பட்டு டார்க் நெட்டில் கசிந்ததாக பரவிய தகவலுக்கு அந்நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தாங்கள் நடத்திய ஆய்வில், எந்த விதமான தரவுகளும் கசியவில்லை என தெரியவந்துள்ளதாக அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. மேலும், களங்கம் ஏற்படுத்தவே இது மாதிரியான போலிச் செய்திகள் பரப்பப்படுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது.

News July 6, 2024

ஆற்காடு சுரேஷ் யார்? பின்னணி என்ன?

image

பிஎஸ்பி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்குப்பழியாக கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த ஆற்காடு சுரேஷ் யார் என பார்க்கலாம். சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த சுரேஷ் மீது 7 கொலை வழக்கு உள்பட 40 வழக்குகள் இருந்தன. எதிரிகள் அச்சுறுத்தலால் வேலூர் சென்ற அவர், கடந்த ஆண்டு பட்டினப்பாக்கம் வந்தபோது வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

News July 6, 2024

MRP மீது ஸ்டிக்கர் ஒட்டி வேறு விலையில் விற்கலாமா?

image

சில நிறுவனங்களில் MRP விலை மீது ஸ்டிக்கர் ஒட்டி, அதில் வேறு விலை முத்திரையிடப்பட்டு விற்கப்படும். இது சட்டப்படி சரியா? என்றால், சட்டப்படி தவறு என்றே கூறலாம். 1956ஆம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி, MRP விலையை விட கூடுதல் விலைக்கு பொருள்களை விற்பது குற்றம் எனக் கூறப்பட்டுள்ளது. அதனால் MRP விலை மீது ஸ்டிக்கர் ஒட்டி, வேறு விலைக்கு விற்றால் வழக்குத் தொடர்ந்து நிவாரணம் பெறலாம்.

News July 6, 2024

ஈரான் அதிபர் தேர்தல்: மசூத் வெற்றி

image

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழந்ததை அடுத்து, அங்கு கடந்த ஜூன் 28ஆம் தேதி முதல் சுற்று அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில், முன்னாள் நிதி அமைச்சர் மசூத் பெசெஸ்கியன் 42.5% வாக்குகளை பெற்றார். சயீத் ஜலீலி 38.6% வாக்குகளை பெற்று 2ஆம் இடம் பிடித்தார். இரு வேட்பாளர்களுக்கும் 2ஆம் சுற்று தேர்தல் நேற்று நடத்தப்பட்டது. இதில் பதிவான 3 கோடி வாக்குகளில் மசூத், 1.7 கோடி வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

News July 6, 2024

துப்பாக்கி இல்லாததால் கொலை நடந்ததா?

image

ஆம்ஸ்ட்ராங் உரிமம் பெற்ற தனது துப்பாக்கியை தேர்தல் நடத்தை விதிகளின்படி காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளார். ஆனால், வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்பு மீண்டும் அவர் அதனை பெறாமல் இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில நாள்களாக அவரை நோட்டமிட்டு வந்த கொலை கும்பல் அவரிடம் துப்பாக்கி இல்லை என்பதை உறுதிப்படுத்திய பின்னரே திட்டமிட்டு அவர் வீட்டருகே துணிந்து கொலை செய்துள்ளது.

News July 6, 2024

தலைவர்களுக்கு பாதுகாப்பில்லை: L.முருகன்

image

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லாததால் தேசிய கட்சி ஒன்றின் மாநில தலைவர் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார். இங்கு அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பில்லை எனவும், காவல் மற்றும் உள்துறையை கையாள்வதில் முதல்வர் தோல்வியடைந்திருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் ஹத்ராஸ் செல்லும் ராகுல், கள்ளக்குறிச்சிக்கு வராதது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

News July 6, 2024

தங்கம் விலை உயர்வு

image

கடந்த சில நாள்களாக உயர்ந்து காணப்படும் தங்கத்தின் விலை இன்று மேலும் உயர்ந்து ஒரு சவரன் 54,500-ஐ கடந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ₹480 உயர்ந்து ஒரு சவரன் ₹54,560க்கும், கிராமுக்கு ₹60 உயர்ந்து ஒரு கிராம் ₹6,820க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ₹1.60 உயர்ந்து ஒரு கிராம் ₹99.30க்கு விற்கப்படுகிறது.

News July 6, 2024

சனிக்கிழமை எண்ணெய் வாங்கலாமா?

image

சனிக்கிழமை என்னென்ன பொருள்களை வாங்கலாம், எவற்றை வாங்கக் கூடாது என சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. அதன்படி, சனிக்கிழமை எண்ணெய் நீராடினால் தோஷங்கள் விலகும், ஆனால் எண்ணெய் வாங்கக் கூடாது, எண்ணெய் வாங்க அது உகந்த நாள் அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், சனிக்கிழமையில் உப்பு வாங்கக் கூடாதென்றும், அதை மீறி வாங்கினால் தொழில், வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படும் என கூறப்பட்டுள்ளது.

News July 6, 2024

ஒரே மருத்துவமனையில் 21 குழந்தைகள் உயிரிழப்பு

image

மகாராஷ்டிராவில் உள்ள சத்திரபதி சிவாஜி மருத்துவமனையில் கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 21 பிறந்த குழந்தைகள் உயிரிழந்துள்ளன. நடப்பாண்டில் 110 குழந்தைகள் இதே மருத்துவமனையில் உயிரிழந்துள்ளன. ஜன-17, பிப்-10, மார்ச்-22, ஏப்ரல்-24, மே-16, ஜூலை மாதத்தில் தற்போது வரை 2 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. கடந்தாண்டு ஆகஸ்ட்டில் 18 பேர் ஒரே நாளில் இம்மருத்துவமனையில் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!