India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அண்ணாமலையை அரைவேக்காடு என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விமர்சித்துள்ளார். அதிமுகவை விமர்சித்தால் அண்ணாமலைக்கு எதிராக தொண்டர்கள் கொதித்தெழுவார்கள் என்றும், அப்படி எழுந்தால் அரசியலில் இருந்து அப்புறப்படுத்தப்படுவார் என்றும் அவர் எச்சரித்துள்ளார். அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆத்மா கட்சியை காப்பாற்றும் என்றும் உதயகுமார் கூறியுள்ளார்.
செல்போன் கட்டண உயர்வு விவகாரத்தில், நிறுவனங்களுக்கு சாதகமாக மத்திய அரசு செயல்பட்டுள்ளதாக காங்கிரஸ் விமர்சித்திருந்தது. இந்நிலையில், 2ஆண்டுகளுக்கு மேலாக கட்டணம் உயர்த்தப்படவில்லை எனவும், மொபைல் நிறுவனங்களின் சுதந்திரமான சந்தை முடிவுகளில் அரசு தலையிடாது எனவும் TRAI விளக்கம் அளித்துள்ளது. மேலும் 5ஜி சேவை காரணமாக நிறுவனங்கள் நாடு முழுவதும் அதிகளவில் முதலீடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
நீட் தேர்வில் வினாத்தாள் கசியவில்லை என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் அப்பட்டமான பொய் கூறியிருப்பதாக மல்லிகார்ஜுன கார்கே குற்றஞ்சாட்டியுள்ளார். ஒரு சில இடங்களில் மட்டும் முறைகேடு நடந்ததாக கூறியதாகவும், கல்வி மாஃபியாக்களை ஊக்குவித்து நமது கல்வி அமைப்பை பாஜக-ஆர்எஸ்எஸ் சிதைக்க நினைப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும் உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் விசாரணை நடத்தவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு மருத்துவமனையில் எம்பாமிங் செய்யப்படுகிறது. இறுதிச்சடங்கு நாளை நடைபெற உள்ள நிலையில், உடல் கெட்டுப்போகாமல் இருக்க எம்பாமிங் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, சென்னை, பெரம்பூரில் உள்ள பந்தர் கார்டன் தனியார் பள்ளி மைதானத்தில், அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட உள்ளது. பின்னர், நாளை பிற்பகல் இறுதி ஊர்வலம் நடைபெற உள்ளது.
அசாமில் கடந்த 24 மணி நேரத்தில் மழை வெள்ளம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மொத்தமுள்ள 35 மாவட்டங்களில், 30 மாவட்டங்கள் கடும் சேதமடைந்துள்ள நிலையில், 52 பேர் பலியாகியுள்ளனர். 24 லட்சம் பேர் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில், தேசிய, மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். கடந்த 1 மாதமாக, மழை வெள்ளத்தின் பிடியில் அசாம் சிக்கித்தவித்து வருகிறது.
அமெரிக்காவின் ஜான்சன் விண்வெளி மையத்தில் செவ்வாய் கிரகத்தின் மாதிரி வடிவத்தை 3டி தொழில்நுட்பத்தின் மூலம் நாசா உருவாக்கியது. 1.722 சதுர அடியில் அமைக்கப்பட்ட இதில், கடந்த 370 நாட்களாக நான்கு விண்வெளி வீரர்கள் தங்க வைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. செவ்வாய் கிரகத்துக்கு செல்லும் மனிதர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து அறிந்து கொள்வதே இதன் நோக்கமாகும். இந்த சோதனை இன்றுடன் நிறைவடைகிறது.
இந்தியா, ஜிம்பாப்வே அணிகள் இதுவரை டி20 கிரிக்கெட் போட்டிகளில் 8 முறை மோதியுள்ளன. இதில் இந்திய அணி அதிகமுறை வென்றுள்ளது. அதாவது, 6இல் வெற்றி வாகை சூடியுள்ளது. இந்தியாவுக்கு எதிராக ஜிம்பாப்வே அணி அந்நாட்டின் தலைநகர் ஹராரேயில் நடந்த 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்த சூழ்நிலையில் இந்தியா, ஜிம்பாப்வே அணிகள் இன்று மோதுகின்றன. இந்தப் போட்டி ஹராரேயில் இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது.
ஜியோ அதன் 5ஜி வாடிக்கையாளர்களுக்கு, ₹51, ₹101 விலைகளில் புதிய பூஸ்டர் பேக் திட்டங்களை வெளியிட்டுள்ளது. அந்த திட்டங்களின்படி, ₹51 ரிசார்ஜ் செய்தால், 5ஜி வரம்பற்ற டேட்டா பயன்படுத்தலாம். இதேபோல் ₹101 திட்டத்திலும், வரம்பற்ற 5ஜி டேட்டா கிடைக்கும். ஆனால் ₹51 திட்டம் தினமும் 1.50 ஜிபி டேட்டா கொண்ட மாதத் திட்டம், ₹101 திட்டம் 1 ஜிபி, 1.50 ஜிபி டேட்டா கொண்ட 2 மாதத் திட்டத்தில் செயல்படும்.
இங்கிலாந்து தேர்தலில் வென்ற உமா குமரனை ஜெயக்குமார் பாராட்டியுள்ளார். எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், ஈழப்போரின் இடையே பூத்த பூ ஒன்று இங்கிலாந்து நாட்டின் நாடாளுமன்றத்தை அலங்கரிக்க உள்ளதை உலகத்தமிழர்களுள் ஒருவனாய் எண்ணி பெருமிதம் கொள்வதாகவும், ‘தமிழ்மகள்’ சகோதரி உமா குமரன் தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்டு வென்றது தமிழர்களுக்கான பெருமை எனவும் அவர் கூறியுள்ளார்.
டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் பயிற்சியாளராக டிராவிட் பதவி வகித்தார். அவருடன் சமகாலத்தில் கிரிக்கெட் விளையாடியவர் வி.வி.எஸ். லக்ஷ்மன். அவரே தற்போது ஜிம்பாப்வேக்கு எதிராக டி20 தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் டிராவிட் போல தகுந்த ஆலோசனை அளித்து கோப்பையை லக்ஷ்மன் வெல்லச் செய்வாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.