India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வீடுகள், தொழிற்சாலைகளின் மேற்கூரையில் சோலார் பேனல்களை அமைக்க SBI கடனுதவி வழங்குகிறது. PM சூர்யா கர் திட்டத்தில், 10 KW திறன் வரை கடன் வழங்கப்படுகிறது. 3 KW வரை சோலார் பேனல் அமைக்க ₹2 லட்சம், 3 KW – 10 KW வரை சோலார் பேனல் அமைக்க ₹6 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. MNRE/REC இணையதளத்தில் விண்ணப்பதாரர் பதிவு செய்வது முதல் கடன் வழங்குவது வரை, SBI அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறியலாம்.
தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 7,347 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. அவற்றில் 2,500க்கும் மேற்பட்ட குழந்தைத் திருமணங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், திண்டுக்கல், சேலம், மதுரை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கும் மேற்பட்ட திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கையை 33% வரை குறைக்க ஜூலை 2-இல் அரசாணை வெளியிடப்பட்டது. இதனை கடுமையாக எதிர்த்துள்ள பாமக தலைவர் அன்புமணி, அதிக மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் எவ்வாறு விளையாட்டை கற்பிக்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் மாணவர்கள் தவறான பாதைக்கு செல்ல நேரிடும், என்பதால் அரசு இதனை திரும்பப் பெற வலியுறுத்தியுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் பித்தப்பைக் கல் பிரச்னை அதிகரித்து வருவதாக, மருத்துவர்கள் கூறுகின்றனர். அதிகப்படியான கொழுப்பு உணவுகளை சாப்பிடுவது, எடையைக் குறைக்க உணவைத் தவிர்ப்பது, நாற்காலியில் அமர்ந்தபடியே உழைக்கும் பணிச்சூழல் போன்றவை பித்தப்பைக் கல் பிரச்னைக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. பித்தப்பைக் கல் பிரச்னையால் பெண்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
பிஎஸ்பி கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது, பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிப்பதாக அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். அம்பேத்கரின் கொள்கைகளைப் பின்பற்றி, ஆம்ஸ்ட்ராங் ஏராளமான இளைஞர்களின் கல்விக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும் களத்தில் உழைத்தவர் எனவும் அவர் கூறியுள்ளார். அதேபோல் எம்.பி கனிமொழியும் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து தேர்தலில் தொழிலாளர் கட்சி மொத்தம் உள்ள 650 இடங்களில் 411 இடங்களைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. இது தொடர்பான புகைப்படம் ஒன்றை தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர், “ஒரு வழியாக 400 இடங்களில் வெற்றி என்பது நடந்துவிட்டது. ஆனால், வேறொரு நாட்டில்” என்று பாஜகவை கிண்டலடித்துள்ளார். பாஜக மக்களவைத் தேர்தலில் 400 இடங்களை பெறுவோம் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
17ஆவது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில், நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஜெர்மனியை வீழ்த்தி ஸ்பெயின் அணி அரையிறுதிக்கு முன்னேறியது. இந்நிலையில், ஜெர்மனி வீரர் டோனி குரூஸ் ஓய்வை அறிவித்துள்ளார். தன் நாட்டுக்காக கடைசி ஆட்டத்தை விளையாடியதாகவும், அணியை நினைத்து பெருமைப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், வரும் காலங்களில் தனது அணி வீரர்களை டிவியில் பார்ப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.
வெற்றிலையில் கார்மினேடிவ், வாயு எதிர்ப்பு, குடலைப் பாதுகாக்க உதவும் பண்புகள் உள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதனால் உணவருந்தியபின் வெற்றிலை மெல்லலாம். இது செரிமானத்தை சீராக்கும், மலச்சிக்கலை போக்கும் என்று உடல்நல நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இரவில் வெற்றிலையை நசுக்கி தண்ணீரில் ஊறவிட்டு, காலையில் வெறும் வயிற்றில் அதை குடித்தால் குடல் பிரச்னை சரியாகும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. சென்னையில் 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நேற்று தொடங்கியதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பிகில் படத்தில் நடித்த ரெபா மோனிகா ஜான் இப்படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூலி படப்பிடிப்பு நடக்கும் ஹைதராபாத் ஃபிலிம் சிட்டியில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து, மிகவும் ஸ்பெஷலான படத்தில் நடிப்பதாக அவர் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.